மொபைல் ஆப் மூலம் பைக் ஓட்டுநர்களை பிடிக்கும் போலீஸ்; டிஜிட்டல் இந்தியா புதிய பரிணாமம்
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை எளிதாக பிடிக்க குஜராத் போலீசார் பிரத்யே மொபைல் ஆப் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆப் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகன எண்ணை புகைப்படம் எடுத்தாலே போது
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை எளிதாக பிடிக்க குஜராத் போலீசார் பிரத்யே மொபைல் ஆப் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆப் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகன எண்ணை புகைப்படம் எடுத்தாலே போதும் அந்த வாகன உரிமையாளர்கள் வீட்டிற்கு இ-செல்லான் அனுப்படும்.

இந்தியாவில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவது சாதாரண விஷயமாகிவிட்டது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் போக்குவரத்து வீதிகளை மீறி வருகின்றனர். போலீசார் அவர்களை பிடித்து அபராதம் விதித்தாலும் இச்செயல் தொடர்ந்து நடந்துதான் வருகிறது.

சிலர் போலீசாரிடம் மாட்டால் தப்பி விடுகின்றனர். அவர்களை துரத்தி பிடித்து அபராதம் போட வேண்டிய நிலை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருச்சியில் பெண் ஒருவர் தன் கணவருடன் ஹெல்மெட் போடாமல் சென்ற போது அவர்களை போலீசார் நிறுத்தினர்.

தொடர்ந்து அவர் நிறுத்தாமல் சென்றதால் அவர்களை பைக்கில் துரத்திய போலீசார் ஒருவர் பைக்கை எட்டி உதைத்ததில் அந்த பெண் பரிதாபமாக பலியானார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பபட்ட விஷயம் இவ்வாறான சம்பவங்களை தவிர்க்க போலீசார் தவிர யோசனையில் இருந்து வருகின்றனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் குஜராத் மாநிலம் வதோதராவில் போலீசாரின் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்யக்கூடிய வகையில் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அந்த ஆப் மூலம் போக்குவரத்து விதியை மீறும் வாகனத்தின் பதிவு எண்ணை புகைப்படம் எடுத்தால் அது நேரடியாக கண்ட்ரோல் ரூமின் சர்வருக்கு சென்று விடும்.

அங்கு இந்த வாகனத்தின் நம்பரை கொண்டு அதன் உரிமையாளரை கண்டுபிடித்து அவர்களது வீட்டிற்கு நேரடியாக அபராத இ- செல்லான் அனுப்பபடுகிறது. இந்த மொபைல் ஆப்பிற்கு விஐடி (வதோதரா டிராபிக் போலீஸ் ) என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த ஆப் தலைமை காவலர் கிரேடில் இருந்து அதற்கு அதிகமான கிரேடில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆப் மூலமே நாம் புகைப்படம் எடுத்த வாகனம் என்ன விதிமுறை மீறலில் எந்த இடத்தில் ஈடுபட்டது என்ற தகவலை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

அவர்கள் ஏற்படுத்திய விதிமுறை மீறலுக்கு ஏற்ப அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இத்திட்டம் வெற்றியடைந்தால் இதை குஜராத் முழுவதும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி நடந்தால் போக்குவரத்து விதிமீறல்கள் பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
- அஜீத் போல் சாலைகளில் சீறிப்பாயலாம்.. 3 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் அட்டகாசமான பைக்குகள்..
- பைக், கார்களுக்கு இன்சூரன்ஸ் பெறுவதில் புதிய சிக்கல்; கோர்ட் உத்தரவால் குழப்பம்
- பெட்ரோல் வளம் மூலம் அடி வயிற்றில் அடிக்கும் அரபு நாடுகள்.. பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த இந்தியா
- பெட்ரோல் விலையை நூதனமாக ஏற்றிய மத்திய அரசு ; சலுகை 3ல்1 பங்காக குறைப்பு
- இந்திய ராணுவத்திற்கு புதிய நிறத்தில் கார்.. ரகசியமாக சோதனை செய்த படங்கள் முதல் முறையாக கசிந்தன


Click it and Unblock the Notifications








