பைக், கார்களுக்கு இன்சூரன்ஸ் பெறுவதில் புதிய சிக்கல்; கோர்ட் உத்தரவால் குழப்பம்
வரும் செப்.1ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு 3 ஆண்டுகள் இன்சூரன்ஸ் மற்றும் பைக்குகளுக்கு 5 ஆண்டுகள் இன்சூரன்ஸை கட்டாயமாக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
வரும் செப்.1ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு 3 ஆண்டுகள் இன்சூரன்ஸ் மற்றும் பைக்குகளுக்கு 5 ஆண்டுகள் இன்சூரன்ஸை கட்டாயமாக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதை செயல்படுத்துவதில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வாகன மாசு கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாமல் இன்சூரன்ஸ் வழங்கமுடியாததாலும், மாசு கட்டுப்பாடு சான்றிதழ் 6 மாதம் தான் செல்லும் என்பதாலும் இந்த குழப்பம் நிலவி வருகிறது. இது குறித்த முழு விபர செய்தியை கீழே காணுங்கள்

சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் வரும் செப் மாதம் முதல் விற்பனை செய்யப்படும் கார் மற்றம் பைக்குகளுக்கான இன்சூரன்ஸ் காலத்தை அதிகரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

தற்போது புதிதாக வாங்கப்படும் கார்களுக்கும் பைக்குகளுக்கு சுமார் 1 ஆண்டு மட்டுமே இன்சூரன்ஸ் கட்டாயமாக வழங்கப்படுகிறது. அதன் பின் வாகனம் வைத்திருப்பவர்கள் தங்களுக்கான இன்சூரன்ஸை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் இந்தியாவில் நடக்கும் விபத்துக்களில் உயிரிழப்பவர்களுக்கோ, காயமடைபவர்குளுக்கோ விபத்தில் சிக்கியவாகனம் இன்சூரனஸ் வாங்க வில்லை என்றால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் கிடைப்பதில்லை.

அதாவது ஒரு வாகனம் எதிரில் வரும் மற்றொரு வாகனம் மீது மோதினால் இருவாகன உரிமையாளர்களும் தங்கள் வாகனங்களுக்கான 3ம் நபருக்கான காப்பீடு மூலம் அவர்களுக்கான இன்சூரன்ஸ் பயன்னை பெற்று வருகின்றனர்.

இந்த மாதிரியான சம்பவங்களில் ஒரு நபரிம் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் மட்டும் இருந்து மற்றிடம் இன்சூரன்ஸே இல்லை என்றால் இன்சூரன்ஸ் வைத்திருப்பவர் பயன்பெற முடியாமல் போகிறது.

மேலும் விபத்தில் ஏற்படும் இழப்பிற்கு ஏற்ப நஷ்ட ஈடு வழங்கப்படுவதில்லை இதை கருத்தில் கொண்டு வரும் செப் மாதம் முதல் விற்பனை செய்யப்படும் பைக்குகளுக்கு 5 ஆண்டுகள் இன்சூரன்ஸ் மற்றும் கார்களுக்கு 3 ஆண்டு இன்சூரன்ஸ் காட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது.

இது குறித்து இன்சூரன்ஸ் நிறுவனம் தற்போது பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். இதை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளதாக தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் பிரிமியத்தில் மாற்றம் செய்யப்பட்டு கொண்டே வருகிறது. தற்போது கோர்ட் உத்தரவு பின்றப்பபட்டால் இதை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும்.

மேலும் சுப்ரீம் கோர்ட்டே ஒரு தீர்ப்பில் வாகனத்திற்கான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இருந்தால் மட்டுமே இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என் குறிப்பிட்டுள்ளது. புிய வாகனங்களுக்கு ஒரு ஆண்டிற்கு மாசு சான்றிதழ்கள் இருக்கும். அதன் பின் வழங்கப்படும் மாசுகட்டுப்பாடு சான்றிதழ் 6 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

தற்போது பைக்குகளுக்க 5 ஆண்டுகள் இன்சூரன்ஸ் வழங்கினால் அந்த பைக் அடுத்த ஆண்டே மாசு கட்டுப்பாடின் விதிகளை மீறி புகையை உமிழ முடியும். அப்படி செய்தால் மாசு ஏற்படுத்தும் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இருப்பதாக அர்த்தம் கொள்ளப்படும். அப்பொழுது கோர்ட்டின் தீர்ப்பை மீறியதாக கருதப்படும்.

கோர்ட்டின் இந்த தீர்ப்புகள் ஒன்றோடு ஒன்று முரண்பட்டதாக இருக்கிறது. இதை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருக்கிறது. இதனால் கோர்டே இதற்கான தெளிவான தீர்வை தர வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தற்போது தெரிவித்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்


Click it and Unblock the Notifications








