சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

சென்னை- சேலம் வரையிலா 8 வழி பசுமை நெடுஞ்சாலை அமைவது குறித்து தமிழகம் முழவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சிலர் இந்த சாலைக்கு ஆதரவாகவும், எதிர்பார்ப்பாகவும் பேசி வருகின்றனர். தினம் தோறும் செய்திகள

சென்னை- சேலம் வரையிலா 8 வழி பசுமை நெடுஞ்சாலை அமைவது குறித்து தமிழகம் முழவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சிலர் இந்த சாலைக்கு ஆதரவாகவும், எதிர்பார்ப்பாகவும் பேசி வருகின்றனர். தினம் தோறும் செய்திகளில் தலைப்பு செய்தியாகவே இடம் பெரும் இந்த பிரச்னை குறித்த முழு விபர அறிக்கையை கீழே வழங்கியுள்ளோம்.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

தமிழகத்தில் தொடர்ந்து பிரச்னைகளுக்கு மேல் பிரச்னை வந்து கொண்டே இருக்கிறது. நெடுவாசல், கதிராமங்கலம், நீட், ஸ்டெர்லைட், என தொடர் பிரச்சனைகளுக்க அடுத்த புதிய பிரச்னையாக தற்போது டிரெண்டிங்கில் இருப்பது சென்னை சேலம் பசுமை எக்ஸ்பிரஸ் சாலை

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

இந்த பாதை காடுகள், விளைநிலங்களை அழித்து போடப்படுவதாகவும், ஏற்கனவே உள்ள ரோடுகளே தாராளமாக உள்ள நிலையில் இயற்கை வளங்களை சுரண்டவே இந்த சாலை போடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

இது குறித்து அரசு பல்வேறு விளக்கங்களை கூறி வருகிறது. இருந்தாலும் தெடர்ந்து இதற்கான எதிர்ப்பு என்பது கிளம்பி கொண்டே தான் இருக்கிறது. இதில் சிலர் அரசிற்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

இதற்கிடையில் எதிர்ப்புகள் கிளம்பும் அதே இடத்தில் சில புரளிகளும் பொய்யான தகவல்களும் கிளம்புவதாக அரசு தரப்பில் இருந்தும் அதாரவாளர்கள் தரப்பில் இருந்தும் புகார் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ரோடு குறித்த சில அதிகார பூர்வ தகவல்களையும், பரபரப்படும் செய்திகளில் எது பொய் என்பதையும் கீழே காணலாம்.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

இந்த சென்னை - சேலம் பசுமை நெடுஞ்சாலை மத்திய அரசின் பாரத்மாலா என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் 8 எக்ஸ்பிரஸ் சாலைகள் அமைக்கப்படுகிறது அதில் இதுவும் ஒன்று. தமிழகத்திற்கு வரும் முதல் எக்ஸ்பிரஸ் சாலையும் இது தான்.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

மேலும் இந்த சாலை அமைந்தால் இது தான் இந்தியாவின் 2வது மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் சாலையாக அமையும். இத்திட்டத்தை எதிர்பவர்கள் ஏற்கனவே இந்த ரூட்டில் 2 நெடுஞ்சாலைகள் உள்ளன. அதனால் இந்த நெடுஞ்சாலை தேவையில்லாதது என்றும். இந்த நெடுஞ்சாலையால் பல இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டு கின்றனர்

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

அரசு தரப்பில் இந்த நெடுஞ்சாலையால் சில பாதிப்புகள் இருந்தாலும், இதற்கான தேவை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது குறிப்பாக தமிழகத்தின் மேற்கு மாவட்ட பகுதிகள் சமீபகாலமாக தொழிற் துறையில் நல்ல வளர்ச்சியை கண்டு வருகின்றனர். ஏற்கனவே திருச்சி, கரூர், கோவை, பெங்களூரு ஆகிய பகுதியை இணைத்து ராணுவ தளவாட உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக அரசு அறிவித்துள்ளது.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

இதனால் எதிர்காலத்தில் இப்பகுதியில் அதிகமாக சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள் அதிகமாகும், அப்பொழுது தலைநகர் சென்னைக்கும், மேற்கு மாவட்டங்களுக்கும் விரைவாக செல்லும் வகையில் ரோடுகள் தேவைப்படும். அதை கருத்தில் கொண்டே இந்த பாதை அமைக்கப்படுகிறது.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

இந்த பாதை அமைவதால் தற்போது சென்னைக்கும் சேலத்திற்கும் சுமார் 5 மணி நேரமாக உள்ள பயணம் இனி 2.30 மணி நேரமாக குறைந்து விடும். மேலும் இந்த சாலையில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும். மேலும் முடிந்த அளவிற்கு இயற்கை வளங்களை கெடுக்காமல் மட்டுமே இந்த பாதை அமைக்கப்படுகிறது.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

இத்திட்டத்தில் மொத்தம் 277.4 கி.மீ தொலைவிற்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 9.955 கி.மீ. மட்டுமே வனப்பகுதி வழியாக செல்கிறது. இத்திட்டத்திற்காக 1900 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படவுள்ளது. அதில் 49 ஹெக்டேர் நிலம் மட்டுமே விவசாய நிலமாக இருக்கிறது.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

இத்திட்டத்திற்காக மொத்தம் 10,000 மரங்கள் வெட்டப்படவுள்ளன. அதற்கு ஈடாக சாலையில் இரண்டு புறங்களிலும், சுமார் 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. ஆனால் இத்திட்டங்கள் எல்லாம் வரைபடங்கள் மூலமாகவும், இஸ்ரோ சாட்டிலைட் வழங்கும் தகவல்கள் மூலமாகவும் தான். கணக்கிடப்பட்டுள்ளது.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

தற்போது இத்திட்டத்திற்கான சர்வே பணிகள் தான் தற்போது நடந்து வருகின்றன. இதுவரை மதிப்பிடப்பட்டுள்ளது எல்லோமே உத்தேச மதிப்பீடு தான் சர்வே பணிகள் முழுமையாக முடிந்தால் மட்டுமே உண்மையான மதிப்பீடுகள் வெளிவரும் அதன் பின் தான் எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். எவ்வளவு நிலம் வனப்பகுதியில் இருந்து எடுக்க வேண்டும் என்ற தகவல்கள் கிடைக்கும்.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

மேலும் எதிர்பாளர்கள் மலைகள் அழிக்கப்படவுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் திட்டத்தின் படி மலையில் சுரங்கள் அமைக்கும் படியே திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சுரங்கமானது 3 கிமீ. நீளத்திற்கு அமைக்கப்படவுள்ளது.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

ஏற்கனவே சென்னை சேலம் இடையே இரண்டு நெடுஞ்சாலைகள் உள்ள நிலையில் மீண்டும் இந்த சாலையின் அவசியம் குறித்தும் எதிர்பாளர்கள் கேள்வி கேட்கின்றனர். அதற்கும் அரசு தரப்பில் இருந்து பதில் சொல்லப்பட்டுள்ளது.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

அதன் படி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தற்போது 60 ஆயிரம் கார்கள் பயணிக்கின்றன. அந்த சாலை, அதிகபட்சமாக, 40 ஆயிரம் கார்கள் செல்லும் திறன் கொண்டது. ஆனால், தற்போது 20 ஆயிரம் கூடுதல் கார்கள் பயணிக்கின்றன. இதுபோல், சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தற்போது 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் கார்கள் பயணிக்கின்றன. இது, சாலையின் திறனை விட, 40 ஆயிரம் கார்கள் அதிகம். அடுத்த 15 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை 2.1 மடங்கு அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

இந்த சாலைகள் தங்களின் திறனை மீறி கூடுதல் வாகனங்களை கையாள்வதால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. இந்த சாலைகளில் இதுவரை, 3,000 பேர் விபத்துகளினால் இறந்துள்ளனர். 10 ஆயிரம் பேர் விபத்துகளில் சிக்கி, உடல் ஊனமுற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் காலத்தில் அதிகரிக்க கூடும்.

இந்த சாலைகளை விரிவுப்படுத்தினால், தலா, 20 ஆயிரம் வீடுகளை இடிக்க வேண்டி இருக்கும். இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

இந்த சாலைகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவே புதிய சாலை திட்டம் தேவைப்படுகிறது. இந்த இரண்டு சாலைகளிலும் தற்போது ஒட்டு மொத்தமாக, 1.40 லட்சம் கார்கள் பயணிக்கின்றன. இவற்றில் 60 ஆயிரம் கார்கள் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் கேரளாவிற்கு செல்பவை. இந்த கார்களை திசை திருப்ப தான் புதிய சாலை திட்டம் தேவைப்படுகிறது. என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

மேலும் பலர் இந்த சாலை காஞ்சிபுரம் மாவட்டத்துடன் முடிவடைகிறது. இதனால் சென்னைக்கு எந்த பயனும் இல்லை, சென்னைக்கும் - செங்கல்பட்டிற்குமே இரண்டு மணி நேரம் பயண தூரம் ஆகும் என கூறப்படுகிறது. அதற்கு அரசு அளிக்கும் விளக்கத்தில்

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

சென்னை அருகே உள்ள வண்டலுாரில், சென்னையின் வெளிவட்ட சாலை துவங்குகிறது. புதிய, 8 வழி சாலை திட்டம், சென்னை வெளிவட்ட சாலையுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்படும். எனவே, வெளிவட்ட சாலை மூலமாக, சென்னை, எண்ணுார் மற்றும் காட்டுப்பாக்கம் துறைமுகங்களுக்கு வாகனங்கள் எளிதில் செல்ல முடியும்.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

இதுதவிர சென்னை புறவழிச்சாலை, மதுரவாயல் - துறைமுகம் சாலை திட்டம் போன்றவையும் உள்ளன. வெளிவட்ட சாலை மூலமாக, வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளுக்கு எளிதில் செல்ல முடியும். தென் சென்னைக்குள் நுழைய, வண்டலுார் - கேளம்பாக்கம் நான்கு வழி சாலை உதவியாக இருக்கும். இதுதவிர கிழக்கு கடற்கரை சாலையும் உள்ளது.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்க, சென்னையை அடுத்த பெருங்களத்துாரில் ஒரு மேம்பாலம் வர உள்ளது. சென்னைக்குள் நுழையும் வாகனங்களுக்கு இந்த மேம்பாலம் உதவியாக இருக்கும். என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை - முழு விபரங்கள்

இப்படி ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் அளித்து வந்தாலும், இந்த சாலை அமைவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நன்மை தீமைகள் எல்லாம் தற்போது நடந்து வரும் சர்வே பணிகள் முடிந்தால் முழுமையாக தெரியும். மக்களுக்கான அவசியமும் இங்கே இருக்கிறது. அதே நேரத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சாமானிய மனிதனின் எண்ணமாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. இந்தியர்களின் ஆவலைத் தூண்டிய சுஸுகி ஜிம்னி வெளியீடு!
  2. எலெக்ட்ரிக் பஸ்ஸால் கொள்ளை லாபம் கேரள அரசு குஷி; தமிழக அரசு கொர்...
  3. நீங்க மெக்கானிக்கா? ப்ளீஸ் இந்த செய்திய படிக்காதீங்க.. இது கார் ஓனர்களுக்கான ரகசியம்!
  4. யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் விரைவில் அறிமுகம்!
  5. பைக்கில் "கெத்து" காட்டியவர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீசார்; பெற்றோர்களுக்கும் அட்வைஸ்

More from DriveSpark

Article Published On: Saturday, June 23, 2018, 11:55 [IST]
English summary
NHAI could apply for carbon credits for Chennai Salem expressway. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+