எலெக்ட்ரிக் பஸ்ஸால் கொள்ளை லாபம் கேரள அரசு குஷி; தமிழக அரசு கொர்...
இரண்டு எலெக்ட்ரிக் பஸ்களை இரண்டு நாள் சோதனை ஓட்டம் நடத்தியதிலேயே கேரள அரசிற்கு ரூ 14 ஆயிரம் லாபம் கிடைத்துள்ளது. தற்போது கேரள அரசின் வித்தியாசனமான யோசனையால் இந்த திடத்தை மிக குறைந்த செலவிலேயே விரிவ
இரண்டு எலெக்ட்ரிக் பஸ்களை இரண்டு நாள் சோதனை ஓட்டம் நடத்தியதிலேயே கேரள அரசிற்கு ரூ 14 ஆயிரம் லாபம் கிடைத்துள்ளது. தற்போது கேரள அரசின் வித்தியாசனமான யோசனையால் இந்த திடத்தை மிக குறைந்த செலவிலேயே விரிவுபடுத்தி லாபத்தை மேலும் பல மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் பல நகரங்களில் எலெக்ட்ரிக் கார் திட்டம் வந்தாலும் தமிழ்நாட்டில் இது குறித்து முச்சு கூட விடவில்லை

கேரள மாநில அரசு பஸ் கழகமான கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது. எலெக்ட்ரிக் பஸ்கள் என்பது புதிது என்பதால் முதலில் அதை 15 நாள் சோதனை ஓட்டமாக மட்டும் செயல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்தது.

இதையடுத்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு சோதனை ஒட்டத்தை துவங்கியது. சோதனைக்காக திருவனந்தபுரத்தில் 2 பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த இரண்டு பஸ்களும் 2 நாள்களில் மொத்தம் 14 ஆயிரம் ரூபாய் லாபம் ஈட்டி தந்துள்ளது. தற்போது இயங்கி வரும் டீசல் பஸ்கள் நாள் ஒன்றிற்கு அரசிற்கு ரூ 7422 நஷ்டத்தை ஏற்படுத்தி வந்தது.

அதாவது இரண்டு பஸ்களும் கடந்த 2 நாட்களில் ரூ.38,406 வசூல் செய்துள்ளது. அதில் அதற்கு சார்ஜ் ஏற்றிய வகைக்காக ஒன் யூனிட்டிற்கு ரூ 6 விதம் மொத்தம் ரூ 3810 செலவாகியுள்ளது. அதன்பின் வரி மற்றும் அனுமதி சீட்டிற்காக ரூ 2841 செலவாகியுள்ளது.

மேலும் பஸ் செயல்பட பணியாற்றிய ஊழியர்களுக்காக ரூ 17,640 செலவாகியுள்ளது. இது போக ரூ 14,115 அரசிற்கு லாபம் கிடைத்துள்ளது. தற்போது இயக்கப்பட்டு வரும் பஸ்களால் அரசிற்கு நஷ்டம் தான் ஏற்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் எலெக்ட்ரிக் பஸ் திட்டம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

தற்போது கேரள மாநிலத்தில் மொத்தம் உள்ள ரூட்களில் 20 சதவீத ரூட்களில் மட்டும் தான் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் மற்ற மாநிலங்களில் 90 சதவீத ரூட்களில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அரசு பஸ்களின் எண்ணிக்கையை பல மடங்கு துணிந்து அதிகரிக்கலாம்

தற்போது கேரள மாநிலத்தில் உள்ள 93 பஸ் டிப்போக்களில் 54 பஸ் டிப்போக்களின் மீது கடன் வாங்கப்பட்வு தற்போது ரூ 3,100 கடன் அரசு பஸ் நிறுவனமான கேஎஸ்ஆர்டிசி மீது இருக்கிறது. மேலும் 7 டிப்போக்கள் மீது கடன் வாங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இந்த கடன்களை தீர்க்கும் வகையில் கேரள அரசிற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தான் இந்த எலெக்ட்ரிக் பஸ், இந்த பஸ்சை கொண்டு தற்போது இயங்கி வரும் பஸ்களை மாற்றினால் இந்த கடன்களை வெகு சில மாதங்களில் அடைத்து விடலாம்.

ஆனால் தற்போது கேரளாவில் தற்போது நிலவும் நிதி நெருக்கடியால் புதிதாக பஸ்களை வாங்கி இயங்குவது என்பது நடக்காத காரியம். ஆனால் கேரள
அரசியல் வாதிகள் இதை சமாளிக்க புதிய யோசனை ஒன்றை கையாண்டுள்ளனர்.

அதாவது தற்போது பஸ் தயாரித்து வழங்கும் அதே நிறுவனத்திடமே ஒரு ஒப்பந்தமிட்டு பஸ்சை இலவசமாக வாங்கி அதில் வரும் லாபத்தை பங்கிட்டு கொள்வது என்ற முடிவை எடுத்துள்ளனர்.

அதன் படி இந்த பஸ்சிற்கான டிரைவர், பஸ் பராமரிப்பு, பஸ்சிற்கான வரி, எல்லாவற்றையும் பஸ் வழங்கும் நிறுவனம் பார்த்து கொள்ள வேண்டும், பஸ்சில் கண்டக்டர் மற்றம் பஸ்சிற்கு சார்ஜ் ஏற்ற செலவாகும் மின் செலவு எல்லாவற்றையும் அரசு ஏற்று கொள்ள வேண்டும் என்றும் லாபத்தில் பங்கு போட்டு கொள்ள வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு பஸ் தயாரிக்கும் நிறுவனமும் ஒப்புகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் பஸ் பாராமிரிப்பு மற்றும் ரிப்பேருக்கான செலவு அதிகமா ஏற்பட்டால் பஸ் தயாரிக்கும் நிறுவனம் தான் அதை ஏற்றுக்கொள்ளும் அதானால் அரசிற்கு நஷ்டம் ஏற்படவாய்ப்பில்லை, மேலும் பஸ்சிற்கு கண்டக்டருக்கு மட்டுமே அரசு சம்பளம் வழங்க வேண்டும் என்பதால் செலவும் குறைவு, இதனால் தற்போது வந்துள்ள லாபத்தை விட இதில் அதிக லாபம் கிடைக்கும் என எதிர்பா்ர்க்கப்படுகிறது.

தற்போது எலெக்ட்ரிக் பஸ் திட்டத்தை மும்பை பிஎம்டிசி, டில்லி டிடிசி, பெங்களூரு பிஎம்டிசி, தெலுங்கானா டிஎஸ்ஆர்டிசி, ஆந்திரா எபிஎஸ்ஆர்டிசி, ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே அமல் படுத்தி விட்டன. தற்போது அவர்களுடன் கேரளாவும் இணைந்துள்ளது.

ஆமா நம்ம தமிழ்நாடு போக்குவரத்து துறை என்னதான் பண்ணிட்டு இருக்கறாங்க. அங்கயும் தான் கடன் தொல்ல இருக்குது. இப்படி எதாவது நடவடிக்கைய எடுத்தாதான அத சரி பண்ண முடியும்?
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
- யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் விரைவில் அறிமுகம்!
- பைக்கில் "கெத்து" காட்டியவர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீசார்; பெற்றோர்களுக்கும் அட்வைஸ்
- பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி காரில் டீசல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!!
- அவன் கார் மட்டும் எப்படி ரிப்பேர் ஆகாம இருக்கு... பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து பொறாமையா?
- புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!!


Click it and Unblock the Notifications








