TRENDING ON ONEINDIA
-
கூட்டணி உறுதியானதால் குஷி.. அமித்ஷா இன்று மாலை சென்னை வருகை
-
டூவீலர் உற்பத்தியாளர், டீலர், ஆர்டிஓக்கள் இணைந்து 13 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் மெகா மோசடி... என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
நடிகையாகும் பிரபல ஹீரோவின் மகள்: பொண்ணு ரொம்பத் தெளிவு
-
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கும் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு... கொஞ்சம் கவனமா இருங்க
-
பாகிஸ்தான் இராணுவத்தை தலை பிச்சுக்க விட்ட இந்திய ஹேக்கர்கள்.!
-
தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா? ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா?
-
இந்த ஊர்ல ஒருவரின் சராசரி வருமானமே 3.2 கோடி ரூபாய்.. எந்த ஊர் தெரியுமா..?
-
ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது
புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!!
புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி குறித்த முழு விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.
2018 மாடலாக வந்திருக்கும் புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி அனைத்து உயர் வகை வசதிகள் கொண்ட ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த எஸ்யூவி இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.
புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியில் 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 164 பிஎச்பி பவரையும், 222 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 6 ஸ்டெப் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பேடில் ஷிஃப்ட் வசதியும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இருக்கிறது.
டீசல் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என்பது உறுதியாகி இருக்கிறது. அதற்கு பதிலாக, மிட்சுபிஷி நிறுவனம் ஹைப்ரிட் எரிநுட்பத்தில் இயங்கும் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதியுடன் 7 சீட்டர் மாடலாக வந்துள்ளது. மூன்று வரிசை இருக்கை அமைப்பை பெற்றிருந்தாலும், பொருட்கள் வைப்பதற்காக மூன்றாவது வரிசையை மடக்கி வைக்கும் வசதியும் உள்ளது.
புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியில் 6.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. டியூவல் ஸோன் வசதியுடன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த எஸ்யூவியில் உயர் வகை லெதர் இருக்கைகள், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய சன்ரூஃப் மற்றும் எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் தொழில்நுட்பங்கள் உள்ளன. 710 வாட் ராக்ஃபோர்டு ஃபோஸ்டேஜ் சவுண்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.
மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டடர், 16 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியில் 7 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிரேக் அசிஸ்ட், ஆக்டிவ் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தரமாக இடம்பெற்றுள்ளன.
புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி பிளாக் பியர்ல், காஸ்மிக் புளூ, ஓரியண்ட் ரெட், கூல் சில்வர், ஒயிட் சாலிட், ஒயிட் பியர்ல் மற்றும் டைட்டானியம் க்ரே ஆகிய 7 வண்ணங்களில் கிடைக்கும்.
பழைய மாடலைவிட தோற்றத்திலும், வசதிகளிலும் மிகச் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது இந்த புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர். இந்தியாவில் ரூ.31.54 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்கோடா கோடியாக், விரைவில் வரும் புதிய ஹோண்டா சிஆர்வி உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.