அவன் கார் மட்டும் எப்படி ரிப்பேர் ஆகாம இருக்கு... பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து பொறாமையா?

கார்களை கையாள்வது என்பது ஒரு தனிக்கலை. கார்களை ஒருவர் எப்படி கையாள்கிறார்? என்பதை பொறுத்தே, அந்த காரின் ஆயுட்காலம் அமையும்.

By Arun

கார்களை கையாள்வது என்பது ஒரு தனிக்கலை. கார்களை ஒருவர் எப்படி கையாள்கிறார்? என்பதை பொறுத்தே, அந்த காரின் ஆயுட்காலம் அமையும். ஆனால் கார்களை இயக்குவதில் டிரைவர்களிடம் காணப்படும் சில பழக்கங்கள், கார்களின் ஆயுளை முழுமையாக குறைத்து விடும். அந்த தவறான பழக்கங்கள் என்ன? அவற்றை எப்படி தவிர்ப்பது? என்பது குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

அவன் கார் மட்டும் எப்படி ரிப்பேர் ஆகாம இருக்கு... பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து பொறாமையா?

குறைவான டயர் பிரஷரில் அதிவேகம் வேண்டாம்

காருக்கும், சாலைக்கும் இருக்கும் ஒரே தொடர்பான டயர்களின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறைவான டயர் பிரஷர் காரணமாக, மைலேஜை குறைவதுடன், டயர் மற்றும் சாலைக்கு இடையேயான கான்டாக்ட் ஏரியாவும் அதிகரித்து விடும். இத்தகைய சூழ்நிலைகளில் டயர் வெடிக்கும் அபாயம் உள்ளது.

அவன் கார் மட்டும் எப்படி ரிப்பேர் ஆகாம இருக்கு... பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து பொறாமையா?

டயரில் போதுமான அளவு பிரஷர் இல்லாத நேரங்களில், அதிவேகத்தில் செல்லக்கூடாது. ஏனெனில் அத்தகைய சமயங்களில், டயர் மிக வேகமாக சூடாகி, அதிகம் வளைந்து விடும். இதன் காரணமாகதான் டயர் வெடிக்க நேரிடுகிறது. எனவே டயர் பிரஷரை அவ்வப்போது செக் செய்வது நல்லது.

அவன் கார் மட்டும் எப்படி ரிப்பேர் ஆகாம இருக்கு... பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து பொறாமையா?

டர்போவை கூல் செய்வது அவசியம்

டர்போசார்ஜர்கள் உள்ள கார்களை மிக கவனமாக கையாள வேண்டும். அனைத்து டீசல் இன்ஜின்களும் டர்போசார்ஜ்டுதான். சில மலிவான பெட்ரோல் இன்ஜின் கார்களிலும் கூட டர்போசார்ஜர்கள் இருக்கின்றன. காரை பயன்படுத்தி முடித்த பின் இன்ஜினை உடனடியாக ஆப் செய்யக்கூடாது.

அவன் கார் மட்டும் எப்படி ரிப்பேர் ஆகாம இருக்கு... பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து பொறாமையா?

டர்போ கூல் ஆவதற்காக, சில நிமிடங்கள் இன்ஜினை ரன்னிங்கில் (இட்லிங்) விட வேண்டும். டர்போசார்ஜரின் டெம்ப்பரேச்சரை குறைக்க, கூலிங் சிஸ்டமிற்கு போதுமான அவகாசம் அளிப்பதை இட்லிங் உறுதி செய்கிறது. இதன்மூலமாக டர்போ சிஸ்டத்தில் இருந்து எக்ஸாஸ்ட் வாயுக்களும் வெளியேறிவிடும்.

அவன் கார் மட்டும் எப்படி ரிப்பேர் ஆகாம இருக்கு... பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து பொறாமையா?

மலையில் இறங்கும்போது இன்ஜினை ஆப் செய்யலாமா?

மலைகளில் இருந்து இறங்கும்போது, பலர் இன்ஜினை ஆப் செய்கின்றனர். ஆனால் கார்களில் உள்ள நவீன வசதிகள் பலவும், எலக்ட்ரிக் மோட்டார்களைதான் நம்பியுள்ளன. எனவே இன்ஜினை ஆப் செய்தால், பவர் கட் ஏற்பட்டு விடும்.

அவன் கார் மட்டும் எப்படி ரிப்பேர் ஆகாம இருக்கு... பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து பொறாமையா?

கார்களில் உள்ள முக்கியமான வசதிகளான பவர் ஸ்டியரிங், ஏர்பேக்ஸ், ஏபிஎஸ், ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகியவை இயங்க பவர் தேவை. எனவே இன்ஜினை ஆப் செய்வது என்பது மிகவும் அபாயகரமான சூழலை உருவாக்கி விடும்.

அவன் கார் மட்டும் எப்படி ரிப்பேர் ஆகாம இருக்கு... பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து பொறாமையா?

இன்ஜின் லக்கிங்

டாப் கியரில் காரை செலுத்தினால், அதிக மைலேஜ் கிடைக்கும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இது உண்மைதான் என்றாலும், அத்தகைய சமயங்களில் சிலர் குறைவான RPM-ல் காரை இயக்குகின்றனர். டாப் கியரை போட்டு கொண்டு குறைவான வேகத்தில் காரை செலுத்துவது தவறானது.

அவன் கார் மட்டும் எப்படி ரிப்பேர் ஆகாம இருக்கு... பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து பொறாமையா?

இதற்கு இன்ஜின் லக்கிங் என்று பெயர். தொடர்ச்சியாக இன்ஜின் லக் ஆகி கொண்டிருந்தால், காரின் பாகங்கள் பாதிக்கப்பட்டு, அதன் ஆயுள் வெகுவாக குறைந்து விடும். எனவே இன்ஜின் லக்கிங்கை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.

அவன் கார் மட்டும் எப்படி ரிப்பேர் ஆகாம இருக்கு... பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து பொறாமையா?

"P" மோடு ஹேண்ட் பிரேக் அல்ல

ஒரு ஆட்டோமெட்டிக் காரை ஸ்டாப் செய்ய பலர் "P" மோடை (பார்க்கிங் மோடு) பயன்படுத்துகின்றனர். பார்க்கிங் மோடு என்பது ஹேண்ட் பிரேக் அல்ல. எனவே பார்க்கிங் மோடை போடுவற்கு முன்பாக, கார் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

அவன் கார் மட்டும் எப்படி ரிப்பேர் ஆகாம இருக்கு... பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து பொறாமையா?

லோ கியரில் டாப் வேகம்

நெடுஞ்சாலைகளில் ஓவர் டேக் எடுக்கும்போது, ஒரு சில கியர்களை குறைத்து, அதிக வேகத்தில் செல்வதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸில் இது பிரச்னையை ஏற்படுத்தி விடும். குறைவான கியரில், இன்ஜினின் வேகம் திடீரென அதிகரிப்பது காருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அவன் கார் மட்டும் எப்படி ரிப்பேர் ஆகாம இருக்கு... பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து பொறாமையா?

மோசமான சாலைகளில் நிதானம் அவசியம்

ரெகுலரான கார் சஸ்பென்சன் எப்போதுமே வேலை செய்யும். ஆனால் குண்டும், குழியுமான மோசமான சாலைகளில் பயணிக்கும்போது, சஸ்பென்சன் சற்று கூடுதலாக வேலை செய்யும். எனவே மோசமான சாலைகளில் பயணம் செய்கையில், மெதுவாக பயணிப்பது நல்லது.

அவன் கார் மட்டும் எப்படி ரிப்பேர் ஆகாம இருக்கு... பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து பொறாமையா?

வேக தடைகள் மற்றும் குழிகளிலும் காரை மெதுவாக ஏற்றி இறக்குவதே சிறந்தது. தவிர்க்க முடியாத வேகத்தடை, குழிகளை பார்த்தால், காரை ஸ்லோ செய்து விடுங்கள். பின்னர் அவற்றை மெதுவாக கடந்து செல்லுங்கள்.

அவன் கார் மட்டும் எப்படி ரிப்பேர் ஆகாம இருக்கு... பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து பொறாமையா?

சரியான கால இடைவெளியில் சர்வீஸ்

காரில் பல்வேறு பார்ட்கள் உள்ளன. அந்த பார்ட்களுக்கு ரெகுலர் லூப்ரிகேஷன் தேவைப்படும். ஒரு சில பார்ட்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்ற வேண்டும். எனவே இதனை பொறுத்துதான், காரின் சர்வீஸ் பீரியடை கார் உற்பத்தியாளர்கள் முடிவு செய்கின்றனர்.

அவன் கார் மட்டும் எப்படி ரிப்பேர் ஆகாம இருக்கு... பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து பொறாமையா?

எனவே காரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்வதை முறையாக கடைபிடிக்க வேண்டும். உதாரணத்திற்கு 10,000 கிலோ மீட்டர் அல்லது ஒரு ஆண்டு என கார் உற்பத்தியாளர் குறிப்பிட்டிருந்தால், சரியான சமயத்தில் காரை சர்வீஸ் செய்து விடுங்கள்.

அவன் கார் மட்டும் எப்படி ரிப்பேர் ஆகாம இருக்கு... பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து பொறாமையா?

கோல்டு ஸ்டார்ட் பிரச்னையா?

குளிரான சூழலில் காரை ஸ்டார்ட் செய்வது கடினம். அப்படி நீண்ட நேரம் போராடி காரை ஸ்டார்ட் செய்தால் (கோல்டு ஸ்டார்ட்), உடனே மூவ் செய்வது நல்லதல்ல. ஓரிரு நிமிடங்கள் இட்லிங்கில் விடுவது நல்லது. அத்துடன் இன்ஜின் உகந்த டெம்பரேச்சரை அடையும் வகையில் ஓரிரு கிலோ மீட்டர்கள் மெதுவாக செல்லலாம்.

அவன் கார் மட்டும் எப்படி ரிப்பேர் ஆகாம இருக்கு... பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து பொறாமையா?

அதுமட்டுமல்லாமல் கோல்டு ஸ்டார்ட்டிற்கு பிறகு சிறிய தொலைவு பயணிப்பதையும் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. நீண்ட தொலைவிற்கு பயணிப்பதாக இருந்தால் மட்டுமே காரை எடுக்க வேண்டும். கூல்டு ஸ்டார்ட்டிற்கு பிறகு சிறிது தூரம் மட்டும் சென்று வருவது காரின் ஆயுளை குறைத்து விடும்.

அவன் கார் மட்டும் எப்படி ரிப்பேர் ஆகாம இருக்கு... பக்கத்து வீட்டுக்காரரை பார்த்து பொறாமையா?

ஸ்மூத் கியர்

கியர்களை ஸ்மூத் ஆக மாற்றுவதே சிறந்தது. அதுமட்டுமல்லாமல் இடது காலை எப்போதும் கிளட்சின் மீது வைத்து கொண்டே இருப்பதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் இதன் மூலமாக கிளட்ச் பிளேட் டேமேஜ் ஆகிவிடும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Tips to Increase Your Car's Life. Read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X