பைக்கில் "கெத்து" காட்டியவர்களின் வாலை ஒட்ட நறுக்கிய போலீசார்; பெற்றோர்களுக்கும் அட்வைஸ்

சென்னையில் நேற்று போலீஸ் தலைமை அலுவலகம் அருகே பைக்கில ஸ்டண்டில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கவனித்து அனுப்பியுள்ளனர். மேலும் அவர்கள் நடத்திய சோதனையில் ஒரே இரவில் போலீசார் நடத்திய சோதனையில் முறையான

By Balasubramanian

சென்னையில் நேற்று போலீஸ் தலைமை அலுவலகம் அருகே பைக்கில ஸ்டண்டில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கவனித்து அனுப்பியுள்ளனர். மேலும் அவர்கள் நடத்திய சோதனையில் ஒரே இரவில் போலீசார் நடத்திய சோதனையில் முறையான ஆவணங்கள் இல்லதா 69 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பைக்கில்

தமிழகத்தில் நாளுக்கு நாள் பைக் ரேஸ் ஓட்டுவது என்பது இளைஞர்கள் மத்தியில் பெரும் மவுசை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் இரவு நேரத்தில் இளைஞர்கள் பைக்கில் அதிவேகத்தில் பறக்கின்றனர்.

பைக்கில்

இச்சம்பவம் வாடிக்கையாக இருந்தாலும் போலீசார் அவ்வப்போது பைக் ரேஸ் ஓட்டுபவர்களை படித்து அவர்களுக்கு தண்டனை வழங்கி வருகின்றனர். ஆனாலும் நாளுக்கு நாள் அவர்களது எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

பைக்கில்

பைக் ரேஸ் ஓட்டுவதால் அவர்களுக்கு மட்டும் அல்லாது ரோட்டில் சென்ற மற்றவர்களுக்கும் இது ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இது கட்டுப்படுத்த போலீசார் எவ்வளவு முயன்றும் பெரிதாக ஒன்றும் பலன் இல்லை.

பைக்கில்

இந்நிலையில் நேற்று சில இளைஞர்கள் தங்கள் பைக்குகளில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகம் முன்பும், ஆர்கே சாலையிலும் பைக் ஸ்டண்ட்டில் ஈடுபட்டு அட்டகாசம் செய்துள்ளனர். அவர்களை போலீஸ் பிடிப்பதற்கும் அவர்கள் தப்பி சென்றுள்ளனர்.

பைக்கில்

தொடர்ந்து சில இளைஞர்கள் முதல்வர் வீட்டின் அருகே திடீர் என ஒன்று கூடி பைக் ஸ்டண்டில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை பிடிக்க துரத்தினர். ஆனால் பலர் அவர்களிடம் சிக்காமல் தப்பினர். 6 பேரை மட்டுமே போலீசார் பிடித்தனர். அவர்களில் மூன்று பேருக்கு பைக் ஓட்ட லைசன்ஸ் கூட கிடையாது.

பைக்கில்

இதையடுத்து நேற்று இரவு சென்னை சிட்டி முழுவதும் 2 ஆயிரம் போலீசார் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். முறையான ஆவணங்கள் இல்லாமல் பயணம் செய்தவர்கள், பைக் ரேஸ் மற்றும் ஸ்டண்ட்களில் ஈட்டவர்கள் என எல்லோரையும் போலீசார் படித்துள்ளனர். நேற்று ஒரே நாள் இரவில் மட்டும் 69 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பைக்கில்

இதில் 18 வயதிற்கும் குறைவான வாகனம் ஓட்ட அனுமதியே இல்லாத இளைஞர்களும் சிலர் சிக்கினர். அவர்களின் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் தங்கள் மகனை இனி பைக் ஓட்ட அனுமதிக்க மாட்டோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் எழுதி வாங்கியுள்ளனர். மேலும் அவர்கள் இனி இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டால் பெற்றோர்களுக்கே தண்டனை எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பைக்கில்

தற்போது போலீசார் தரப்பில் ஏஎன்பிஆர் கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளது. இது ரோட்டில் அதி வேகத்தில் செல்பவரோ அல்லது ஸ்டாண்ட் செய்பவரையோ நம்பர் பிளேட்டுடன் புகைப்படம் எடுத்து போலீசாருக்கு அனுப்பி விடும் அதன் மூலம் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

பைக்கில்

இது போல சென்னையில் முக்கிய சாலைகளில் 8 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் பைக் ஸ்டண்டில் ஈடுபட்டு போலீசில் சிக்கிய சிலரை போலீசார் நன்கு "கவனித்ததாகவும்" அதனால் தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

பைக்கில் முறையான பயிற்சி இல்லாமல் ஸ்டண்டில் ஈடுபடுவது மிகவும் ஆபத்தானது. மேலும் முறையான பயிற்சி பெற்றிருந்தாலும் அதை பொதுமக்கள் பயன்படுத்தும் ரோட்டில் கண்டிப்பாக செய்யகூடாது.

பைக்கில்

பைக் ஸ்டெண்ட் என்பது டிராக்கில் அதற்கான உரிய ஹெல்மெட், ஷூ, கிளவுஸ், ஆர்ம் கார்டு ஆகியவற்றை அணிந்து தான் ஸ்டண்டில் ஈடுபட வேண்டும். அதுவும் முறையான பயிற்சியாளர்களின் அறிவுரை மற்றும் கண்காணிப்பின் பெயரில் மட்டுமே செய்ய வேண்டும். ரோட்டில் செய்தால் சரியாக பேலன்ஸ் இருக்காது, கடுமையான படுகாயங்கள் ஏற்படலாம், அதையும் தாண்டி இது சட்ட விதிமுறை மீறல் கூட

Source : Polimer News

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Friday, June 22, 2018, 17:25 [IST]
English summary
Chennai police SEIZE 69 bikes in one night. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+