புதிய ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பயர் மாடல்கள் வெளியீடு: விரைவில் விற்பனைக்கு வருகிறது!

புதிய ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு இருக்கும் இந்த கார்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்

By Saravana Rajan

புதிய ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு இருக்கும் இந்த கார்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

புதிய ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பயர் மாடல்கள் வெளியீடு: விரைவில் விற்பனைக்கு வருகிறது!

தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் படங்களில் இருக்கும் 2018 ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஃபோர்டு ஆஸ்பயர் கார்கள் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் விற்பனைக்கு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பயர் மாடல்கள் வெளியீடு: விரைவில் விற்பனைக்கு வருகிறது!

குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையில் உள்ள ஃபோர்டு ஆலையில் இந்த கார்களின் ஏற்கனவே உற்பத்தி துவங்கிவிட்டதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியும் துவங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பயர் மாடல்கள் வெளியீடு: விரைவில் விற்பனைக்கு வருகிறது!

இந்த நிலையில், இந்த புதிய மாடல்கள் விரைவில் இந்திய மார்க்கெட்டிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. புதுப்பொலிவுடன் வரும் புதிய ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் கார்களின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் மாற்றங்கள் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளன.

புதிய ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பயர் மாடல்கள் வெளியீடு: விரைவில் விற்பனைக்கு வருகிறது!

இந்த கார்களில் புதிய டிராகன் வரிசை பெட்ரோல் எஞ்சின்கள் பொருத்தப்பட இருக்கின்றன. பெட்ரோல் மாடலில் இடம்பெற இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். அண்மையில் வந்த ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் காரில் இடம்பெற்றிருக்கும் அதே பெட்ரோல்தான் இந்த மாடல்களிலும் இடம்பெறுகிறது.

புதிய ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பயர் மாடல்கள் வெளியீடு: விரைவில் விற்பனைக்கு வருகிறது!

டீசல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் தக்க வைக்கப்படுகிறது. இந்த எஞ்சின் 99 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இந்த இரண்டு மாடல்களிலுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக சில வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வரும்.

புதிய ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பயர் மாடல்கள் வெளியீடு: விரைவில் விற்பனைக்கு வருகிறது!

இரண்டு கார் மாடல்களிலுமே முன்பக்கத்தில் க்ரோம் வலை அமைப்புடன் கூடிய புதிய க்ரில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்பயர் காரின் ஹெட்லைட் சற்று பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. க்ரில் அமைப்புக்கு தக்கவாறு ஃப்ரீஸ்டைல் கார் போன்று பம்பர் அமைப்பும் மாற்றப்பட்டுள்ளது.

புதிய ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பயர் மாடல்கள் வெளியீடு: விரைவில் விற்பனைக்கு வருகிறது!

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் கார் போன்றே, உட்புறத்தில் புதிய டேஷ்போர்டு இடம்பெறுகிறது. 6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஃபோர்டு சிங்க் -3 தொழில்நுட்ப வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கும். ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதியை அளிக்கும்.

புதிய ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பயர் மாடல்கள் வெளியீடு: விரைவில் விற்பனைக்கு வருகிறது!

ஏற்கனவே உற்பத்தி துவங்கப்பட்டு விட்ட நிலையில், வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் புதிய ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக் காரும், ஆஸ்பயர் செடான் காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சற்றே கூடுதல் விலையில் விற்பனைக்கு களமிறக்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 22, 2018, 12:09 [IST]
English summary
The new Ford Figo and Aspire facelift have been globally unveiled. Production of the new 2018 Ford Figo and the Aspire facelifts has already started at the Sanand plant, Gujarat. Currently, both models are exported to international markets. Ford is expected to launch the two models in India sometime later this year.
மேலும்... #ford
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+