அடுத்த வாரம் வெளியாகிறது ஆடி க்யூ5 காரின் பெட்ரோல் வேரியன்ட்

By Balasubramanian

வரும் 28ம் தேதி ஆடி நிறுவனம் க்யூ5 காரின் பெட்ரோல் வேரியன்டை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. ஏற்கனவே டீசல் கார் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில் இந்த கார் வெளியாவது மேலும் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரம் வெளியாகிறது ஆடி க்யூ5 காரின் பெட்ரோல் வேரியன்ட்

ஆடி இந்தியாவி நிறுவனம் இந்தாண்டு துவக்கத்தில் ஆடி க்யூ5 காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் அறிமுகமாகும் போது டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டும் தான் இருந்தது. அப்பொழுதே பெட்ரோல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

அடுத்த வாரம் வெளியாகிறது ஆடி க்யூ5 காரின் பெட்ரோல் வேரியன்ட்

இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அந்நிறுவனம் வரும் ஜூன் 28ம் தேதி ஆடி க்யூ 5 காரின் பெட்ரோல் இன்ஜின்ஆப்ஷனை வெளியிடுகிறது. இதே போல் தான் கடந்தாண்டு க்யூ7 காரை ரிலீஸ் செய்யும் போதும் அதற்கான பெட்ரோல் வேரியன்டும் வெளியானது.

அடுத்த வாரம் வெளியாகிறது ஆடி க்யூ5 காரின் பெட்ரோல் வேரியன்ட்

தற்போது வெளியாகியுள்ள க்யூ5 பெட்ரோல் கார் இந்த ரக காரை விற்பனையை சற்று அதிகரிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த க்யூ5 கார் இரண்டாம் தலை முறை கார். முதல் தலைமுறை கடந்த 2011 ஆண்டே வெளியாகியது.

அடுத்த வாரம் வெளியாகிறது ஆடி க்யூ5 காரின் பெட்ரோல் வேரியன்ட்

தற்போது இந்த ஆடி க்யூ5 கார் அவுரங்காபாத்தில் உள்ள ஃபோக்ஸ்வாகன் குழும கார் தொழிற்சாலையில் கட்டமைக்கப்படுகிறது. அந்த கார் சில பழைய காரில் இருந்து சில அப்டேட்களை பெற்றுள்ளது.

அடுத்த வாரம் வெளியாகிறது ஆடி க்யூ5 காரின் பெட்ரோல் வேரியன்ட்

இந்தாண்டு வெளியான க்யூ 5 யின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட் இரண்டும் எம்எல்பி இவோ பிளாட்பார்ம் மற்றும் மிமிக்ஸ் டிசைன்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கார் பழைய காரை விட 100 கிலோ எடை குறைவாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் வெளியாகிறது ஆடி க்யூ5 காரின் பெட்ரோல் வேரியன்ட்

காரின் முகப்பு பகுதியை பொருத்தவரை புதிய சிங்கிள் பிரேம் கிரில், மேட்ரிக்ஸ் எல்.இடி ஹெட்லைட், மற்றும் ஸ்போர்ட்டி லுக் பானட் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

அடுத்த வாரம் வெளியாகிறது ஆடி க்யூ5 காரின் பெட்ரோல் வேரியன்ட்

பின்பக்கத்தை பொருத்தவரை ஸ்போர்ட் லுக் எல்இடி டெயில்லைட், ரூப் மவுண்ட் ஸ்பாயிலர்ஸ், புதிய பம்பர், உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆடி க்யூ 5 ல் புதிய 1.2 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் வெளியாகிறது ஆடி க்யூ5 காரின் பெட்ரோல் வேரியன்ட்

மேலும் இந்த காரில் முக்கிய அம்சமாக டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் உடன் ஹெட்ஸ்அப் டிஸ்பிளே சிஸ்டம், ஸ்மார்ட் போன் இன்டகரேஷன், இன்டலிஜென்ட் வாய்ஸ் டயலாக் சிஸ்டம், க்யூ வசதி உள்ளபோன்களுக்கு வயர்லெஸ் சார்ஜிங்.

அடுத்த வாரம் வெளியாகிறது ஆடி க்யூ5 காரின் பெட்ரோல் வேரியன்ட்

மியூசிக் ஸ்டோர் செய்ய 10 ஜி.பி ஸ்டோரேஜ் வசதி, இது மட்டும் இல்லாமல் நேவிகேஷன், 3 சோன் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், லேதர் அப்ஹோல்சரி, எலெக்ட்ரிக்கலி அட்ஜெட்டபிள் சீட் என இன்ட்டிரீயர் மிக சொகுசாக அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் வெளியாகிறது ஆடி க்யூ5 காரின் பெட்ரோல் வேரியன்ட்

மேலும் ஆடி எம்எம்ஐ சிஸ்டமில் சில அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது. கூகுள் எர்த் உடன் கூடிய நேவிகேஷன், பங்க் &ஒளுஃபன் 3டி சவுண்ட் சிஸ்டம், ஆகிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், அக்டிவ் லேன் அசிஸ்ட், விபத்து தவிர்ப்பு அசிஸ்ட், ப்ரீ-சென்ஸ் முன் பக்கம் மற்றும் பின் பக்க பார்க்கிங் அசிஸ்டன்ட், பிளையண்ட் ஸ்பாட் வார்னிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த காரில் உள்ளது.

அடுத்த வாரம் வெளியாகிறது ஆடி க்யூ5 காரின் பெட்ரோல் வேரியன்ட்

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 249 பிஎச்பி பவரை வெளிப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரபூர்வ தகவல்லை அந்நிறுவனம் வெளியிடவில்லை கார் வெளியாகும் அன்று தான் இது குறித்து முழுமையாக தெரியும்.

அடுத்த வாரம் வெளியாகிறது ஆடி க்யூ5 காரின் பெட்ரோல் வேரியன்ட்

மேலும் இந்த காரில் க்வார்ட்டோ ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பபடுகிறது. இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி மறஅறும் பிஎம்டபிள்யது எக்ஸ்3 ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியாக திகழும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. புதிய ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பயர் மாடல்கள் வெளியீடு: விரைவில் விற்பனைக்கு வருகிறது!
  2. சர்காரை பிடிக்க ரோல்ஸ்ராய்ஸ் காரில் கெத்து காட்டும் விஜய்!!
  3. கார்பரேட்களுக்கு மட்டும் சலுகை! பொதுமக்களுக்கான சலுகை கட்; எலெக்ட்ரிக் கார் விஷயத்தில் அரசு தீவிரம்
  4. இன்னோவா வேண்டாம்.. அம்மாவின் ஆஸ்தான கார்தான் வேண்டும்.. அமைச்சர் அடம் பிடிப்பதன் ரகசியம் இதுதான்..
  5. புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

More from DriveSpark

Article Published On: Friday, June 22, 2018, 13:33 [IST]
English summary
Audi Q5 Petrol Launch Details Announced. Read in Tamil
மேலும்... #ஆடி #audi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+