புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. ஒரு பக்கம் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விஸ்வரூபமும், மறுபக்கத்தில் டாடா நெக்ஸான் வருகையால் நெருக்கடி அதிகரித்ததால், கடந்த ஆண்டு ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் ஏற்கனவே இருந்த பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஏற்கனவே இருந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வந்தன. ஆனால், பழைய மாடலில் வழங்கப்பட்ட 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் கழற்றிவிடப்பட்டது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தந்தது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த நிலையில், அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஈக்கோஸ்போர்ட் எஸ் என்ற விலை உயர்ந்த மாடல் தற்போது சந்தைக்கு வந்துள்ளது. இந்த மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மட்டுமின்றி, 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலை டிரைவ்ஸ்பார்க் டீம் சென்னையில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

டிசைன்

போர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் எஸ் என்ற விலை உயர்ந்த மாடலின் ஹெட்லைட், டெயில் லைட்டுகளின் உட்புறத்தில் கரும் பூச்சு பின்னணி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரட்டை வண்ணக் கலவையில் கிடைப்பதும் முக்கிய அம்சம்.

முன்புறத்தில் தேன்கூடு வடிவிலான வலை அமைப்புடன் கூடிய அறுகோண வடிவ க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு க்ரோம் சட்டங்கள் இடையில் இடம்பெற்றுள்ளது. வலிமையான பம்பர் அமைப்பும் காரின் தோற்றத்திற்கு வலிமை சேர்க்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், சாம்பல் வண்ண ஸ்கிட் பிளேட் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

பக்கவாட்டிலும் மிக நேர்த்தியான டிசைன் அம்சங்களை கொண்டுள்ளது. 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருப்பதால், மிக உயரமான கார் மாடலாக தோற்றமளிக்கிறது. பக்கவாட்டில் கருப்பு வண்ண பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள், புதிய அலாய் வீல்கள், கருப்பு வண்ண ரூஃப் ரெயில்கள் ஆகியவை தனித்துவப்படுத்துகின்றன.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியில் 17 அங்குல 5 ஸ்போக் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த மாடலில் 205/50 R17 பிரிட்ஜ்ஸ்டோன் ஈக்கோபியா EP150 லோ புரோஃபைல் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இது மிகச் சிறந்த தரைப் பிடிப்பை வழங்குகின்றன.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ரியர் வியூ மிரர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மடக்கி வைக்கும் வசதி இருப்பதுடன், இரவு நேரங்களில் கதவை திறந்து வரும்போது தரைப் பகுதியை தெளிவாக பார்ப்பதற்காக படூல் விளக்குகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

பின்புறத்தில் ஸ்பேர் வீல் மிக தனித்துவமான தோற்றத்தை கொடுக்கிறது. ஏற்கனவே ஒருபக்கத்தில் மட்டுமே இருந்த ரிவர்ஸ் விளக்கு இப்போது காரின் பம்பரில் இரண்டு பக்கமும் கொடுக்கப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பு. அதேபோன்று, வலது பக்க டெயில் லைட் க்ளஸ்ட்டரில் பின் கதவை திறப்பதற்கான கைப்பிடி இடம்பிடித்துள்ளது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இன்டீரியர்

கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், உட்புறத்தை மிகவும் பிரிமியமாக காட்டும் விதத்தில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. காரின் வெளிப்புற வண்ணத்தை பிரதிபலிக்கும் விதத்தில், ஆரஞ்ச் வண்ணத்திலான அலங்காரம் டேஷ்போர்டு, இருக்கைகள் உள்ளிட்ட இடங்களில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

டேஷ்போர்டின் மையப்பகுதியில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய ஃபோர்டு சிங்க்-3 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஓட்டுனர் இயக்குவதற்கு லாவகமாகவும், சரியான அமைப்பில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இன்ஃபோடெயின்மென்ட் திரைக்கு கீழாக அறுகோண வடிவிலான ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

அதற்கு கீழ் பகுதியில் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டத்திற்கான கட்டுப்பாட்டு அமைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சென்டர் கன்சோல் அமைப்பும், கியர் லிவர் கொடுக்கப்பட்டு இருக்கும் இடமும் ஒரே பகுதி போன்று இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த ஈக்கோஸ்போர்ட் எஸ் மாடலின் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் மொபைல்போன் இணைப்புகளை கட்டுப்படுத்துவதற்கான சுவிட்சுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. சற்றே அதிக விட்டமுடைய இதன் ஸ்டீயரிங் வீல் ஓட்டுனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

ஸ்டீயரிங் வீலில் ஆரஞ்ச் வண்ணத் தையல் வேலைப்பாடு வசீகரிக்கிறது. டெலிஸ்கோப்பிக் மற்றும் டில்ட் வசதியுடன் கூடிய இந்த ஸ்டீயரிங் வீல் ஓட்டுனர்கள் விரும்பியவாறு அட்ஜெஸ்ட் செய்து ஓட்டுவதற்கான வசதியை அளிக்கும்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

காரில் இருக்கும் விளக்குகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்கான சுவிட்ச் டேஷ்போர்டின் வலது ஓரத்தில் தனி அமைப்பாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது உயரம் குறைவானவர்கள் இயக்குவதற்கு சற்று சிரமத்தை அளிக்கலாம். ஸ்டீயரிங் வீலில் இடது புறத்தில் வைப்பர் கன்ட்ரோல் லிவரும், வலது புறத்தில் இண்டிகேட்டர் மற்றும் பாஸ் லைட்டுக்கான லிவரும் இடம்பெற்றுள்ளது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பில் டயல்கள் சற்றே பெரிதாகி இருக்கின்றன. டயல்களுக்கு நடுவில் டிஜிட்டல் திரை கொடுக்கப்ட்டு இருக்கிறது. கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர், சராசரி மைலேஜ், ஓடிய தூரம், வெளிப்புற வெப்பநிலை, கதவு திறந்திருப்பது குறித்த தகவல்களை இதன் மூலமாக பெறலாம்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் மாடலில் இரண்டு யுஎஸ்பி போர்ட்டுகள் மற்றும் 12V சார்ஜர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டத்திற்கான ரோட்டரி நாப் கட்டுப்பாட்டு வசதி இயக்குவதற்கு வசதியாகவும், தரமானதாகவும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

யுஎஸ்பி போர்ட்டுகளுக்கு இடையில் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டத்திற்கான பட்டன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிஸ்டத்தை அணைத்து வைப்பதற்கான வசதியை இந்த பட்டன் அளிக்கிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

கண்ணாடி கூரை

இந்த காரின் மிக முக்கிய சிறப்புகளில் ஒன்று சன்ரூஃப் இடம்பெற்றிருப்பதாகும். இதனை Fun Roof என்று குறிப்பிடுகிறது ஃபோர்டு கார் நிறுவனம். ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் மாடலுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிக்னேச்சர் என்ற லிமிடேட் எடிசன் மாடலிலும் இதே சன்ரூஃப் இடம்பெற்றிருக்கிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

சன்ரூஃப் கண்ணாடியை திறந்து மூடுவதற்கான கட்டுப்பாட்டு அமைப்பு ஓட்டுனர் இயக்குவதற்கு ஏதுவாக கூரையின் உட்புறத்தில் மிக சிறப்பாக பொருத்தப்பட்டு இருக்கிறது. மூன்று பிரிவுகளாக கேபின் விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த மாடலில் கூலிங் கிளாஸ் வைப்பதற்கான பிரத்யேக இடவசதியும் உள்ளது. கூலிங் கிளாஸில் கீறல்கள் மற்றும் சேதமடையாமல் இருக்கும் வகையில் மென்மையான ஃபேப்ரிங் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் மாடலில் இடம்பெற்றிருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் சிங்க்-3 என்ற பிரத்யே சாஃப்ட்வேரை பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை இணைக்க முடியும். திசை காட்டும் வசதி, வழிகாட்டும் வசதி,புளூடூத் மற்றும் வைஃபை தொடர்பு வசதிகளை பெற்றிருக்கிறது. கார் பற்றிய சில முக்கிய கட்டுப்பாட்டு அம்சங்கள், ஆம்பியன்ட் லைட் கன்ட்ரோல், வாய்மொழி உத்தரவுக்கு இணங்க செயல்படும் வசதி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டை கட்டுப்படுத்தும் வசதி, அவசர கால தொடர்புக்கான வசதிகள் உள்ளன.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

முக்கிய வசதிகள்

இந்த காரில் புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் வைப்பர் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. 4 ஸ்பீக்கர்கள், 2 ட்வீட்டர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த காரில் சிறியதும், பெரியதுமாக ஏராளமான ஸ்டோரேஜ் இடவசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இது நடைமுறை பயன்பாட்டின்போது மிகவும் சவுகரியமாக இருக்கும்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

முக்கியமாக தண்ணீர் பாட்டில்களை குளிர்ச்சியூட்டும் வசதி கொண்ட க்ளவ் பாக்ஸ் மற்றும் பேனாக்களை வைப்பதற்கான பிரத்யேக இடவசதி ஆகியவை இடம்பெற்றுள்ளது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த காரின் கதவுகள் மிகவும் வலிமையானதாகஇருக்கிறது. வழக்கம்போல் மிகச் சிறந்த கட்டுமானம் கொண்ட ஃபோர்டு கார் மாடலாக இருப்பதை சொல்லலாம்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

முன் இருக்கைகளின் அமைப்பு மிகவும் சவுகரியமான உணர்வை தருகிறது. கால்களுக்கும், கைகளுக்கும் மிகச் சிறந்த சப்போர்ட்டை தரும் வகையில் இருக்கை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முன் இருக்கைகளுக்கு நடுவில் இருக்கும் ஆரம் ரெஸ்ட் அகலமாக இருந்தாலும், நீளம் குறைவாக இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

ஆரம்ரெஸ்ட் மூடியை திறந்தால் அதிலும் ஒரு ஸ்டோரேஜ் பகுதி இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

கியர் லிவருக்கு பின்னால் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்களை வைத்துக் கொள்வதற்கான இடவசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

பின் இருக்கை மிகவும் சொகுசாகவும், சவுகரியமாகவும் இருக்கிறது. இரண்டு பேர் அமர்ந்து செல்ல தாராளமாக இருக்கும். மூன்றாவது நபர் அமர்ந்தால் சற்று நெருக்கடியாக இருக்கலாம். மேலும், ரியர் ஏசி வென்ட்டுகள் நடுவில் அமர்பவரின் சவுகரியத்தை குறைப்பதாக இருக்கும்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

பூட்ரூம்

இந்த எஸ்யூவியில் 352 லிட்டர் பூட்ரூம் இடவசதி இருக்கிறது. 5 பேரின் உடைமைகளை எடுத்துச் செல்வதற்கு போதுமானதாக இருக்கும் என்று கருதலாம்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த காரின் பின் இருக்கையை 60:40 என்ற விகிதத்தில் இரண்டு பிரிவுகளாக மடக்கி விரிக்க முடியும். இதனால், உடைமைகளை எடுத்துச் செல்வதற்கான இடவசதியை அதிகரித்துக் கொள்ளலாம்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த காரின் தளத்தை மூன்று நிலைகளில் உயர்த்தும் வசதியும் உள்ளது. இதனால், பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

வாகனப் புகையால் சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருவதை மனதில் கொண்டு, உலகின் பல்வேறு நாடுகளில் கடுமையான மாசு உமிழ்வு விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், குறைவான மாசு உமிழ்வு கொண்ட எஞ்சின்களை பொருத்தும் நிலைக்கு கார் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

எனினும், மைலேஜும் குறையக்கூடாது, எஞ்சின் சக்தியும் குறையக்கூடாது; ஆனால், மாசு உமிழ்வு மட்டும் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக, குறைவான சிசி எஞ்சின்களை கார் நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதிக சிசி திறன் கொண்ட எஞ்சின்களுக்கு இணையான சக்தியை வெளிப்படுத்துவதற்காக இந்த எஞ்சின்களில் டர்போசார்ஜர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அவ்வாறு, உருவாக்கப்பட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் செயல்பாட்டை பார்க்கலாம்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின்

இந்த மாடலில் வந்திருக்கும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் புதிது அல்ல. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 123 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது., இதன் செயல்திறனும், கியர்பாக்ஸும் ஓட்டுனர்களுக்கு மிக உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை தர வல்லது. எஞ்சின் வடிவம் மிக அடக்கமாக இருப்பதால், எஞ்சின் பே பகுதியில் அதிக காலி இடம் தெரிகிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

மிக மிக சிறந்த செயல்திறன் கொண்ட எஞ்சின் என்று அடித்து கூற முடியாது. ஆனால், உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை பெறும் வகையில் இதன் செயல்திறன் இருக்கிறது. செயல்திறன் சீராக இருப்பதால், தினசரி பயன்பாட்டிற்கு மிகச் சிறந்ததாக இருக்கும். லேசான டர்போலேக் இருந்தாலும், அது பெரிய குறையாக இல்லை.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த காரின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மிக குறைவான கியர் ரேஷியோவுடன் இருக்கிறது. குறிப்பாக, முதல் நான்கு கியர்கள் குறைவான கியர் ரேஷியோவில் இருப்பதால், அதிக டார்க் திறன் கிடைக்கிறது. இதனால், நகர்ப்புறத்தில் எளிதாக ஓட்டுவதற்கு துணைபுரிகின்றன. 5 மற்றும் 6 வது கியர்கள் நெடுஞ்சாலைகளில் சிட்டாக பறக்க உதவும் வகையில் இருக்கின்றன.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

முதல் 4 கியர்களில் குறைந்த கியர் ரேஷியோ மூலமாக, டர்போசார்ஜர் மூலமாக அபரிமிதமான பவர் கிடைத்ததாலும், அது காரின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதத்தில் இருக்கிறது. உரிய தருணத்தில் கியர் மாற்றம் செய்வதன் மூலமாக இந்த பிரச்னையை உரிமையாளர் சரிசெய்து கொள்ள முடியும்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

நெடுஞ்சாலைகளில் 6வது டாப் கியரை தட்டி விட்டால் திக்கு திணறல் இல்லாமல் கார் எஞ்சின் சீரான பவர் டெலிவிரியை வழங்குகிறது. எனினும், இது பெரும்பாலும் நகர்ப்புற பயன்பாட்டை குறிவைத்தே ட்யூனிங் செய்யப்பட்டிருப்பது ஓட்டிய அனுபவத்தில் உணர்ந்து கொள்ள முடிந்தது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

டீசல் எஞ்சின் விபரம்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மட்டுமின்றி, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இந்த டீசல் எஞ்சின் 99 பிஎச்பி பவரையும், 205 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

ஸ்டீயரிங் சிஸ்டம்

இந்த எஸ்யூவியின் எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் சிஸ்டம் மிதமான வேகத்தில் லேசான உணர்வையும், வேகம் அதிகரிக்க அதிகரிக்க, கடுமையாகவும் இருப்பதால், நம்பிக்கையுடன் ஓட்ட துணைபுரிகிறது. ஃபோர்டு நிறுவனத்தின் ஹைட்ராலிக் ஸ்டீயரிங் சிஸ்டத்திற்கு இணையான துல்லியம் இல்லாவிட்டாலும், இது நடைமுறை பயன்பாட்டில் மிகச் சிறந்த அனுபவத்தை தருவதாக இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

சஸ்பென்ஷன்

வழக்கம்போல் இந்த எஸ்யூவியின் சஸ்பென்ஷன் மிக சிறப்பாக ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. எந்தவொரு சாலையையும் மிக இலகுவாக எதிர்கொள்கிறது. லோ புரோஃபைல் டயர்கள் இருப்பதால், மோசமான சாலைகளில் ஸ்டீயரிங் வீலில் அதிக அதிர்வுகளை உணர முடிகிறது. சீரான சாலைகளில் அதிர்வுகள் இல்லாத சுகமான பயணத்தை வழங்குகிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

பழைய மாடலில் இருந்த அளவுக்கு பாடி ரோல் இல்லை. குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 5.3 மீட்டர் டர்னிங் ரேடியஸ் கொண்டதாக இருப்பதால், திருப்புவதற்கு எளிதான காராகவே இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

இந்த காரின் க்ளட்ச் மிகவும் இலகுவான உணர்வை தருவதால், நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு சிறப்பாக இருக்கிறது. அதேநேரத்தில், க்ளட்ச் பெடலுக்கு மிக அருகாமையிலேயே டெட் பெடல் இருப்பது சற்றே சவுகரிய குறைச்சல். இந்த காரில் சில்வர் பூச்சுடன் பெடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் மாடலில் பிரேக் அசிஸ்ட், இபிடி தொழில்நுட்பங்களுடன் இணைந்து செயல்படும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 6 உயிர் காக்கும் காற்றுப்பைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. விபத்தில் சிக்கும்போது கார் கதவுகள் தானாக திறந்து கொள்ளும் தொழில்நுட்ப வசதி இருக்கிறது. அதேபோன்று, இண்டிகேட்டர்களும் தானாக ஒளிர்ந்து எச்சரிக்கும். ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற தொழில்நுட்ப அம்சங்களும் உள்ளன.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

விலை விபரம்

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் மாடலின் 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் ரூ.11.37 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.11.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!

டிரைவ்ஸ்பார்க் பரிந்துரை

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாகவும், மதிப்பு கொண்ட மாடலாகவும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் மாடலை கூறலாம். டிசைன், வசதிகள், சக்திவாய்ந்த பெட்ரோல் எஞ்சின், உற்சாகமான ஓட்டுதல் அனுபவம் என அனைத்து விதத்திலும் சிறந்த மாடலாக இருக்கிறது. ரீசேல் மதிப்பிலும் சிறந்து விளங்குவதால், கொடுக்கும் பணத்திற்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

Most Read Articles

English summary
Car enthusiasts often disapprove downsizing, especially on high-end cars, claiming that it kills the car's feel. To an extent, this stays true since turbocharged engines lack the raw nature of a naturally-aspirated unit.But in a mileage-conscious country like India, is the new Ford EcoSport S an example of 'Downsizing Done Right'? We take the EcoSport S through the plains of Chennai to find an answer!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X