கார்பரேட்களுக்கு மட்டும் சலுகை! பொதுமக்களுக்கான சலுகை கட்; எலெக்ட்ரிக் கார் விஷயத்தில் அரசு தீவிரம்

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் வாங்கும் அனைவருக்கும் மானியம் வழங்கும் திட்டத்தை மாற்றியமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகை வழங்கினால் போதும், பொத

By Balasubramanian

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் வாங்கும் அனைவருக்கும் மானியம் வழங்கும் திட்டத்தை மாற்றியமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகை வழங்கினால் போதும், பொதுமக்களுக்கான சலுகையை கட் செய்து விடலாமா என அரசு ஆலோசித்து வருகிறது.

கார்பரேட்களுக்கு மட்டும் சலுகை! பொதுமக்களுக்கான சலுகை 'கட்'; எலெக்ட்ரிக் கார் விஷயத்தில் அரசு தீவிர ஆலோசனை

இந்தியாவில் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களின் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும்வகையில் இந்தியாவில் ஃபேம் என்ற குழுமத்தை அமைத்து அதன் மூலம் பல்வேறு திட்டங்களை அமல் படுத்தி வருகிறது.

கார்பரேட்களுக்கு மட்டும் சலுகை! பொதுமக்களுக்கான சலுகை 'கட்'; எலெக்ட்ரிக் கார் விஷயத்தில் அரசு தீவிர ஆலோசனை

முதல் கட்டமாக ரூ 1000 கோடி நிதியுடன் ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த குழு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களுக்கு ரூ 1.3 லட்சம் வரை மானியம் வழங்கியது. பைக்குகளுக்கு ரூ 30 ஆயிரம் வரை மானியங்கள் வழங்கியது.

கார்பரேட்களுக்கு மட்டும் சலுகை! பொதுமக்களுக்கான சலுகை 'கட்'; எலெக்ட்ரிக் கார் விஷயத்தில் அரசு தீவிர ஆலோசனை

இதனால் எலெக்ட்ரிக் கார்கள் சாதாரண காரை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் இந்த மானியம் இருப்பதால் மக்களுக்க சாதாரண காரின் விலையிலேயே இந்த காரும் கிடைத்தது. மேலும் பெட்ரோல்/டீசல் கார்களை காட்டிலும், எலெட்க்ரிக் காரில் குறைந்த செலவில் அதிக தூரம் பயணிக்க முடிகிறது.

கார்பரேட்களுக்கு மட்டும் சலுகை! பொதுமக்களுக்கான சலுகை 'கட்'; எலெக்ட்ரிக் கார் விஷயத்தில் அரசு தீவிர ஆலோசனை

தற்போது ஃபேம் குழுமத்தின் முதற்கட்ட பணி காலம் வரும் செப் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின் துவங்கவுள்ள இரண்டாம் நிலையை கட்டமைக்கும் பணியில் அந்த குழு இறங்கியுள்ளது. தற்போதும் இரண்டாம் கட்டமாக இந்த குழுவிற்காக ரூ 9000 கோடியை ஒதுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கார்பரேட்களுக்கு மட்டும் சலுகை! பொதுமக்களுக்கான சலுகை 'கட்'; எலெக்ட்ரிக் கார் விஷயத்தில் அரசு தீவிர ஆலோசனை

மேலும் இந்த கட்டத்தில் மெத்தமாக எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் ஓலா, உபேர் போன்ற கேப்ஸ் நிறுவனங்களுக்கு மானியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது எலெக்ட்ரிக் கார் வாங்கும் அனைவருக்கும் இந்த மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

கார்பரேட்களுக்கு மட்டும் சலுகை! பொதுமக்களுக்கான சலுகை 'கட்'; எலெக்ட்ரிக் கார் விஷயத்தில் அரசு தீவிர ஆலோசனை

விரைவில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மானியம் நீக்கப்பட்டு, கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே மானியம் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பொதுமக்களை விட இது போன்ற கார்பரேட் நிறுவனங்கள் தான் எலெக்ட்ரிக் கார்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதில் முனைப்பு காட்டுவதாக கூறப்படுகிறது.

கார்பரேட்களுக்கு மட்டும் சலுகை! பொதுமக்களுக்கான சலுகை 'கட்'; எலெக்ட்ரிக் கார் விஷயத்தில் அரசு தீவிர ஆலோசனை

பல பெரு நகரங்களில் பெருகி வரும் மாசுவை கட்டுப்படுத்த அரசு வரும் 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவிற்குள் இயங்கும் எல்லா வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும் என முடிவு செய்துள்ளது.

கார்பரேட்களுக்கு மட்டும் சலுகை! பொதுமக்களுக்கான சலுகை 'கட்'; எலெக்ட்ரிக் கார் விஷயத்தில் அரசு தீவிர ஆலோசனை

ஆனால் கடந்தாண்டு 32 லட்சம் பெட்ரோல்/ எலெக்ட்ரிக்/ சிஎன்ஜி ரக கார்கள் விற்பனையாகியுள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் காரை பொறுத்தவரையில் வெறும் 1500 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இது அரசின் முயற்சியை பின்னடைவிற்கு கொண்டு சென்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் எலெக்ட்ரிக் கார்கள் மீது மக்களுக்கு இருக்கும் அவ நம்பிக்கையே

கார்பரேட்களுக்கு மட்டும் சலுகை! பொதுமக்களுக்கான சலுகை 'கட்'; எலெக்ட்ரிக் கார் விஷயத்தில் அரசு தீவிர ஆலோசனை

அதனால் ஃபேம்மின் இரண்டாம் கட்டத்தில் அதிகமாக கார்களை வாங்கும் கேப்ஸ் நிறுவனங்களுக்கு சலுகை மூலம் கார் வழங்கி அந்த கார்கள் இந்திய ரோட்டில் ஓடும் போது மக்களுக்கு எலெட்ரிக் கார்களுக்கு மெதுமெதுவாக நம்பிக்கை ஏற்படும் அதன் மூலம் மக்களும் அந்த கார்களை வாங்க துவங்குவர் என்று அரசு திட்டமிட்டுள்ளது.

கார்பரேட்களுக்கு மட்டும் சலுகை! பொதுமக்களுக்கான சலுகை 'கட்'; எலெக்ட்ரிக் கார் விஷயத்தில் அரசு தீவிர ஆலோசனை

அதே நேரத்தில் எலெக்ட்ரிக் பைக்களுக்கான மானியங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் எலெக்ட்ரிக் பஸ்களை வாங்கவும் அரசு மானியம் வழங்கி வருகிறது. இதுவும் இரண்டாம் கட்ட ஃபேமிலும் தொடரும் என கூறப்படுகிறது.

கார்பரேட்களுக்கு மட்டும் சலுகை! பொதுமக்களுக்கான சலுகை 'கட்'; எலெக்ட்ரிக் கார் விஷயத்தில் அரசு தீவிர ஆலோசனை

ஆனால் தற்போது பஸ்களுக்கான விலையில்இருந்து 60 சதவீதம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இனி அது 40 சதவீதமாக மாற்றப்படும் எனவும் கூறப்படுகிறது. 2030க்குள் எல்லா வாகனங்களையும் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கார்பரேட்களுக்கு மட்டும் சலுகை! பொதுமக்களுக்கான சலுகை 'கட்'; எலெக்ட்ரிக் கார் விஷயத்தில் அரசு தீவிர ஆலோசனை

தற்போது ஃபேம் குழுமத்தின் இந்த வரையறை மத்திய கனரக தொழிற்துறைக்கு அனுமதிக்காக அனுப்பபட்டுள்ளது. மத்திய அரசு அனுமதியளித்தால் தற்போது அனைவருக்கும் வழங்கப்பட்டு வரும் சலுகைகள் இனி கார்பரேட் கம்பெனிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது.

கார்பரேட்களுக்கு மட்டும் சலுகை! பொதுமக்களுக்கான சலுகை 'கட்'; எலெக்ட்ரிக் கார் விஷயத்தில் அரசு தீவிர ஆலோசனை

விரைவில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஓலா, உபேர் நிறுவனங்கள் சார்பில் பல எலெக்ட்ரிக் கார்கள் இயங்கப்படும் என தெரிகிறது. மேலும் ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களை வாங்கவும் முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த 2030ல் எல்லா கார்களையும் எலெக்ட்ரிக் மயமாக்கும் திட்டம் சற்று தாமதமானலும் உறுதியாக நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ் எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!!
  2. ஸ்கூட்டருக்கு வழி விடாத டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?
  3. பறக்கும் டாக்ஸியை தயாரிக்க களம் இறங்கியது ஆடி நிறுவனம்
  4. புதிய வால்வோ எஸ்60 சொகுசு கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!
  5. இந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு சலுகை! டிரையம்ப் சூப்பர் பைக்குகளை இலவசமாக ஓட்டலாம்!
Most Read Articles
English summary
Govt to scrap subsidy for private electric cars. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X