பறக்கும் டாக்ஸியை தயாரிக்க களம் இறங்கியது ஆடி நிறுவனம்

இன்று உலகம் முழுவதும் மக்கள் நெருக்கடி என்பது அதிகரித்து கொண்டே போகிறது. நாள் தோறும் மக்கள் தங்களுக்கு தேவையான இடத்தை சுறுக்கி கொண்டு போகும் நிலையே உருவாகிறது. இதை நீங்கள் உணர வேண்டும் என்றால் பெ

By Balasubramanian

இன்று உலகம் முழுவதும் மக்கள் நெருக்கடி என்பது அதிகரித்து கொண்டே போகிறது. நாள் தோறும் மக்கள் தங்களுக்கு தேவையான இடத்தை சுறுக்கி கொண்டு போகும் நிலையே உருவாகிறது. இதை நீங்கள் உணர வேண்டும் என்றால் பெரு நகரங்களில் உள்ள ரோட்டில் பயணம் செய்தாலே போதும்.

பறக்கும் டாக்ஸியை தயாரிக்க களம் இறங்கியது ஆடி நிறுவனம்

ஒரு ரோட்டில் ஒரே நேரத்தில் இத்தனை வாகனங்களா? என்று உங்களை மலைத்து போக வைக்கும் அளவிற்கு வாகன நெருக்கடி இன்று அதிகரத்து விட்டது. இந்தியாவை பொருத்தவரை மும்பை, பெங்களூரு, சென்னை, டில்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி என்பது சமாளிக்க முடியாத வகையில் இருக்கிறது.

பறக்கும் டாக்ஸியை தயாரிக்க களம் இறங்கியது ஆடி நிறுவனம்

இந்த பிரச்னை இந்தியாவிற்கு மட்டும் அல்ல உலகம் முழவதும் இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையினர் இதற்கு தீர்வு காண பல்வேறு வகையில் முயன்று வருகின்றனர். இதுவரை எந்த முயற்சியும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை கூட தரவில்லை.

பறக்கும் டாக்ஸியை தயாரிக்க களம் இறங்கியது ஆடி நிறுவனம்

ஆனால் இந்த பிரச்னைக்கு உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ஒரு தீர்வாக பார்ப்பது ஏர் டேக்ஸி தான். அதவாது நாம் ரோட்டில் சென்றால் தானே டிராபிக் ஏற்படுகிறது. பறந்து சென்றால் தாராளமான இடம் கிடைக்கும் என்று அட்டோமொபைல் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

பறக்கும் டாக்ஸியை தயாரிக்க களம் இறங்கியது ஆடி நிறுவனம்

இதையடுத்து உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் பறக்கும் டாக்ஸிகளை தயார் செய்யும் பணியில் இறங்கி வருகின்றனர். பறக்கும் காரை தயாரிக்க அதிகமான பொருட்செலவு மற்றும் அதை பராமரிக்க அதிக செலவு செய்ய வேண்டியது இருக்கிறது.

பறக்கும் டாக்ஸியை தயாரிக்க களம் இறங்கியது ஆடி நிறுவனம்

இதை கருத்தில் கொண்ட நிறுவனங்கள் ஏர் டேக்ஸியை தயார் செய்ய முடிவு செய்து அதற்கான பணியை துவங்கி விட்டனர். இவ்வாறு செய்வதால் பறக்கும் வாகனங்களை சுலபமாக கட்டுப்படுத்த இயலும்.

பறக்கும் டாக்ஸியை தயாரிக்க களம் இறங்கியது ஆடி நிறுவனம்

மேலும் பறக்கும் கார்களை கட்டுப்படுத்த பல்வேறு பராமரிப்பு கட்டுப்பாடுகள் உள்ளதால் அதை நேரடியாக மக்கள் பயன்படுத்த அனுமதிப்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன.

பறக்கும் டாக்ஸியை தயாரிக்க களம் இறங்கியது ஆடி நிறுவனம்

இப்படியாக எல்லா நிறுவனங்களும் பறக்கும் டாக்ஸியை உருவாக்க பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் தற்போது அதில் அடி நிறுவனமும் இறங்கியுள்ளது. ஆடி நிறுவனம் மற்றும் ஏர் பஸ் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பறக்கும் டாக்ஸிகளை கண்டறிய தயாராகிவிட்டனர்.

பறக்கும் டாக்ஸியை தயாரிக்க களம் இறங்கியது ஆடி நிறுவனம்

அதற்கு அந்நிறுவனம் "அர்பன் ஏர் மொபிலிட்டி புரோஜெக்ட் என்று பெயரிட்டுள்ளது. மேலும் இவர் தயாரிக்க முடிவு செய்துள்ள டாக்ஸி என்பது முழுவதும் எலெக்ட்ரிக் பவரில் இயங்கும் படியும். இதனால் சுற்று சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலும் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பறக்கும் டாக்ஸியை தயாரிக்க களம் இறங்கியது ஆடி நிறுவனம்

இந்த டாக்ஸி மேல், கீழ் மற்றும் முன் பின் என எல்லா வகையிலும் இதை செயல்படுத்த முடியும். முக்கிமாக இது ஆட்டோமெட்டிக் கான்செப்டில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

பறக்கும் டாக்ஸியை தயாரிக்க களம் இறங்கியது ஆடி நிறுவனம்

இந்த ஏர்டாக்ஸி அறிவிப்பை ஏற்கனவே ஜெனிவாவில் நடந்த ஆட்டோமொபைல் கண்காட்சியில், இந்த ஏர் டாக்ஸிக்கான மாடல் ஏற்கனவே கடந்த ஆண்டே ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படை இது எலெக்ட்ரிக் காராகவும், பறக்கும் டாக்ஸியாகவும் பயன்படும் வகையில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பறக்கும் டாக்ஸியை தயாரிக்க களம் இறங்கியது ஆடி நிறுவனம்

பல பெரிய நிறுவனங்கள் இந்த பறக்கும் டாக்ஸியை தயாரிக்க முன்வருவது இந்த வகையான வாகனங்களுக்கான தேவையை அதிகரிக்கவுள்ளது என்பதை நாம் உணர வேண்டும். எதிர்காலத்தில் இந்த பறக்கும் டாக்ஸியை இந்தியாவிலும் பார்க்கலாம்.

பறக்கும் டாக்ஸியை தயாரிக்க களம் இறங்கியது ஆடி நிறுவனம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. புதிய வால்வோ எஸ்60 சொகுசு கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!
  2. இந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு சலுகை! டிரையம்ப் சூப்பர் பைக்குகளை இலவசமாக ஓட்டலாம்!
  3. லாரி மீது மோதிய வால்வோ கார்; எந்தவித காயமும் இன்றி தப்பிய டிரைவர் - அதிர்ச்சி வீடியோ
  4. இந்தியாவில் மின்சார கார்களை தயாரிக்க மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்!!
  5. பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும் விலை குறையாதாம்...! மத்திய அரசு மாஸ்டர் பிளான்...
Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi And Airbus To Work On Air Taxis In Germany. Read in Tamil
Story first published: Thursday, June 21, 2018, 17:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X