பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும் விலை குறையாதாம்...! மத்திய அரசு மாஸ்டர் பிளான்...

பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி வரப்பிற்குள் கொண்டு வந்தாலும், மாநில அரசுகள் அந்த மதிப்பின் மீது மேலும் வாட் வரியை வதிக்கும் வகையில் தான் கொண்டு வரப்படும் என தெரியவந்துள்ளது.

By Balasubramanian

பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி வரப்பிற்குள் கொண்டு வந்தாலும், மாநில அரசுகள் அந்த மதிப்பின் மீது மேலும் வாட் வரியை வதிக்கும் வகையில் தான் கொண்டு வரப்படும் என தெரியவந்துள்ளது. இதனால் ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல் டீசல் வந்தாலும் அதன் விலையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என கூறப்படுகிறது. வரிவருவாய் நஷ்டத்தை சமாளிக்க மத்திய அரசு இந்த மாஸ்டர் பிளானை போட்டுள்ளது.

பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும் விலை குறையாதாம்...! மத்திய அரசு மாஸ்டர் பிளான்...

இந்தியாவில் கடந்தாண்டு ஜிஎஸ்டி வரியை இந்தியா கொண்டு வந்தது. இந்தியாவில் விற்பனையாகும் பொருட்களுக்கும், சேவைகளுக்கும் விதிக்கப்பட்டு வந்த பல்வேறு வகையான விதிகளை மொத்தமாக நீக்கி விட்டு ஒரே வரியாக ஜி.எஸ்.டி என்ற வரியை கொண்டு வந்தது. இந்த முறையான வரி பல்வேறு நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும் விலை குறையாதாம்...! மத்திய அரசு மாஸ்டர் பிளான்...

இந்த வரியில் இருந்து பெட்ரோல், டீசல், நேச்சுரல் கேஸ், க்ரூடு ஆயில் உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும் விலக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பெட்ரோல், டீசல் விலை மிக அதிகரித்து வருவதால் பலர் பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர வலியுறுத்தி வருகின்றனர்.

பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும் விலை குறையாதாம்...! மத்திய அரசு மாஸ்டர் பிளான்...

ஆனால் இதற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. இது குறித்த முழு விபரங்களை ஜி.எஸ்.டி. அமல் படுத்தும் குழுமத்தில் உள்ள ஒரு அதிகாரியிடம் பேசியபோது அவர் அவர் இது குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்

பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும் விலை குறையாதாம்...! மத்திய அரசு மாஸ்டர் பிளான்...

அவர் கூறியதாவது : " பெட்ரோலுக்கு மத்திய அரசு சார் பில் லிட்டருக்கு ரூ 19.48 வரியாகவும், டீசலுக்கு ரூ 15.33 வரியாகவும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் ஒவ்வொரு மாநிலமும் வாட் வரியை விதிக்கிறது.

பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும் விலை குறையாதாம்...! மத்திய அரசு மாஸ்டர் பிளான்...

இதில் அந்தமான் மாநிலம் பெட்ரோல் டீசலுக்கு குறைந்த வரியாக 6 சதவீத வரியை விதிக்கிறது. மும்பையில் அதிகபட்சமாக பெட்ரோலுக்கு 39.12 சதவீத வரி விதிக்கப்படுகிறது. தெலுங்கானா மாநிலத்தில் டீசலுக்கு அதிகபட்சமாக 26 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. தலைநகர் டில்லியை பொருத்தவரை பெட்ரோலுக்கு 27 சதவீதமும், டீசலுக்கு 17.24 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது.

பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும் விலை குறையாதாம்...! மத்திய அரசு மாஸ்டர் பிளான்...

தற்போது இந்த வரி விதிப்பின் மதிப்பு, ஜிஎஸ்டியில் உச்சவரம்பாக உள்ள 28 சதவீத்தை காட்டிலும், மிக அதிகமாக இருக்கிறத. தற்போது இந்த பெட்ரோல் டீசலை, ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வந்தால் மத்திய மாநில அரசுகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.

பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும் விலை குறையாதாம்...! மத்திய அரசு மாஸ்டர் பிளான்...

ஆனால் தற்போது ஜிஎஸ்டி விதிப்படி வரும் வரியில் பாதி மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் என பகிர்ந்தால் இரண்டு அரசும் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அந்த நஷ்டத்தை ஈடு செய்யும் அளவிற்கு வேறு வருமானங்கள் இல்லை.

பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும் விலை குறையாதாம்...! மத்திய அரசு மாஸ்டர் பிளான்...

தற்போது உள்ள பெட்ரோல் விலைப்படி அதற்கு ஜி.எஸ்.டியை மதிப்பிட்டாலே மெத்தமே 15-17 ரூபாய் தான் வரி வதிக்க முடியும். ஆனால் தற்போது மத்திய அரசிற்கான வரி மட்டுமே ரூ 19.48 மக்கள் செலுத்தி வருகின்னறனர். இதனால் தற்போது வரும் வரி வருவாயில் பெட்ரோலில் 45-50 சதவீதமும், 35-40 சதவீதமும் பாதிக்கப்படும்.

பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும் விலை குறையாதாம்...! மத்திய அரசு மாஸ்டர் பிளான்...

கடந்த 2014-15 ம்ஆண்டில் ரூ99,184 கோடி வருமானமும், 2017-18ல் 2,29,019 கோடி வருமானமும் மத்திய பெட்ரோல் மூலம் வந்துள்ளது. அதாவது 3 ஆண்டில் வரிவருவாய் 2.3 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் மாநில அரசுகளுக்கு ரூ1,37,157 கோடியாக இருந்த வருமானம் ரூ1,84,091 கோடியா உயர்ந்துள்ளது.

பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும் விலை குறையாதாம்...! மத்திய அரசு மாஸ்டர் பிளான்...

கடந்த 2014 நவம்பரில் இருந்து 2016 ஜனவரிக்கும் 6 முறை மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மீதான் வரியை 6 முறைய உயர்த்தி பெட்ரோலுக்கு ரூ 11.77 மற்றும் டீசலுக்கு 13.47 வரை வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. அதன் பின் கடந்தாண்டு மட்டும் ரூ 2 குறைக்கப்பட்டது. இதற்கு க்ரூடு ஆயிலின் விலை குறைவுதான் காரணம் என கூறப்படுகிறது.

பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும் விலை குறையாதாம்...! மத்திய அரசு மாஸ்டர் பிளான்...

வரும் காலத்தில் ஜி.எஸ்.டி வரம்பிற்குள் பெட்ரோல் டீசல் கொண்டு வரப்பட்டாலும் அந்த ஜி.எஸ்டியின் மீது மாநில அரசகள் வாட் வரி விதிக்க அனுமதிக்ப்படுவது தான் ஒரே மாற்றமாக இருக்கும். இது நடைமுறைக்கு வந்தால் பெட்ரோல் விலை ஒரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வரும்.

பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும் விலை குறையாதாம்...! மத்திய அரசு மாஸ்டர் பிளான்...

ஆனால் அவ்வாறு செய்வது ஜி.எஸ்.டியின் அடிப்படை பண்பையே மீறுவதாகவும் ஆனால் அது ஒன்று தான் நஷ்டத்தை சமாளிக்க இருக்கும் ஒரே வழி என்பதால் பெட்ரோலுக்கு மட்டும் விதி விலக்கு அறிவித்து இந்த நடைமுறை பின்பற்றபடலாம். இதனால் ஜி.எஸ்.டி வரம்பிற்குள் பெட்ரோல் கொண்டு வரப்பாட்டாலும் விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது" என கூறினார்.

பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும் விலை குறையாதாம்...! மத்திய அரசு மாஸ்டர் பிளான்...

பெட்ரோல் விலையேற்றத்தை சமாளிக்க நமக்கு இருக்கும் சிறந்த தீர்வு எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகஅளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தான். பெட்ரோல் வாகனங்கள் இந்தியாவில் அதிக அளவிற்கு பயன்பாட்டிற்கு வந்தால் பெட்ரோலுக்கான தேவை குறைந்துவிடும்.

பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும் விலை குறையாதாம்...! மத்திய அரசு மாஸ்டர் பிளான்...

மேலும் நவீன காலத்தில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பெட்ரோல் வாகனங்களை காட்டிலும் சிறந்த மைலேஜ் மற்றும் செயல்பாடுகளை கொண்டுள்ளது. தற்போது பெங்களூரு, டில்லி, உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டும் விற்பனையாகி வரும் இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் விரைவில் மற்ற நகரங்களுக்கும் வரும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
No pure GST on petrol, diesel; 28% tax plus VAT on anvil under GST. Read in Tamil
Story first published: Thursday, June 21, 2018, 11:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X