இந்தியாவில் மின்சார கார்களை தயாரிக்க மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்!!

இந்தியாவில் மின்சார கார்களை தயாரிக்க மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் புனே அருகிள் உள்ள சகன் தொழிற்பேட்டையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் ஆலை அமைந்துள்ளது. இந்த

By Saravana Rajan

இந்தியாவில் மின்சார கார்களை தயாரிக்க மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் மின்சார கார்களை தயாரிக்க மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்!!

சுற்றுச்சூழலை பாதுகாக்க மின்சார கார் தயாரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மின்சார கார் தயாரிப்பை ஊக்குவிக்க அரசாங்கமும் பல முக்கிய திட்டங்களை வகுத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த திட்டங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன.

இந்தியாவில் மின்சார கார்களை தயாரிக்க மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்!!

இந்த சூழலில், ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் மின்சார கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் புனே அருகிள் உள்ள சகன் தொழிற்பேட்டையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் ஆலை அமைந்துள்ளது.

இந்தியாவில் மின்சார கார்களை தயாரிக்க மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்!!

இந்த தொழிற்சாலையில் மின்சார கார்களை தயாரிக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதற்கான திட்டங்கள் குறித்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தீவிரமாக பரீசிலித்து வருகிறது.

இந்தியாவில் மின்சார கார்களை தயாரிக்க மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்!!

எனினும், இந்தியாவில் மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்களின் கட்டமைப்பு மிக குறைவாக இருப்பதும், திடமான கொள்கை இல்லாதிருப்பதும் கவனத்தில் கொண்டு பரிசீலிக்கப்படுகிறது. அரசு கொள்கைகளின் அடிப்படையில் மின்சார கார்களுக்கான முதலீட்டு திட்டங்களை முன்னெடுக்க மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் மின்சார கார்களை தயாரிக்க மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்!!

இதனிடையே, EQ என்ற புதிய பிராண்டில் மின்சார கார்களை விற்பனை செய்வதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த புதிய பிராண்டை முறைப்படி அறிமுகம் செய்வதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் மின்சார கார்களை தயாரிக்க மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்!!

இந்த புதிய EQ பிராண்டில் மின்சார கார்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கான்செப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. EQ பிராண்டில் அனைத்து மின்சார கார்களும் ஒரே பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மின்சார கார்களை தயாரிக்க மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்!!

அடுத்த தசாப்தத்தில் மின்சார கார்களுக்கான அவசியமும், வரவேற்பும் மிக அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல் இப்போதே அதற்கான திட்டங்களை கையில் எடுத்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ்.

Most Read Articles
English summary
Mercedes-Benz is planning to manufacture electric vehicles at its Chakan plant, Pune.
Story first published: Thursday, June 21, 2018, 12:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X