புதிய வால்வோ எஸ்60 சொகுசு கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

By Saravana Rajan

புதிய வால்வோ எஸ்60 சொகுசு செடான் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் படங்கள் மற்றும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய வால்வோ எஸ்60 சொகுசு கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

அமெரிக்காவில் சவுத் கரோலினா மாகாணத்தில் சார்லெஸ்டன் பகுதியில் அமைந்துள்ள வால்வோ கார் ஆலையில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டது. மின்சார கார் தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நோக்கி செல்வதற்காக இந்த கார் பெட்ரோல் மாடலில் மட்டுமே வருகிறது. டீசல் மாடல் தவிர்க்கப்பட்டு இருக்கிறது.

புதிய வால்வோ எஸ்60 சொகுசு கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

புதிய வால்வோ எஸ்60 செடான் கார் வால்வோ நிறுவனத்தின் புதிய ஸ்கேலபிள் புராடெக்ட் ஆர்க்கிடெக்ச்சர் என்ற பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. உயரிய வகை மாடலாக விற்பனையாகும் வால்வோ எஸ்90 காருக்கு இணையான பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது. இதனால், உலகின் மிக பாதுகாப்பான கார்களில் ஒன்றாக இருக்கும்.

புதிய வால்வோ எஸ்60 சொகுசு கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

இந்த காரின் ஆக்டிவ் சேஸீ மற்றும் டிரைவிங் மோடுகள் ஓட்டுனருக்கு மிகச் சிறந்த கையாளுமையையும், கட்டுப்பாட்டு திறனையும் வழங்கும் என்று வால்வோ கார் நிறுவனத்தின் கார் வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைவர் ஹென்ரிக் க்ரீன் தெரிவித்துள்ளார்.

புதிய வால்வோ எஸ்60 சொகுசு கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

வால்வோ எஸ்60 காரில் புதிய எல்இடி பகல்நேர விளக்குகள் மற்றும் புதிய க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. பம்பர், பானட் அமைப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டு மிகவும் சிறப்பான வசீகரத்தை பெற்றிருக்கிறது.

புதிய வால்வோ எஸ்60 சொகுசு கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

இந்த காரில் 9 அங்குல தொடுதிரையுடன் கூடிய சென்சஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. மரத் தகடுகள் அல்லது அலுமினியத் தகடுகள் கொண்ட அலங்கார வேலைப்பாடுகளுடன் கிடைக்கும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய வால்வோ எஸ்60 சொகுசு கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

புதிய வால்வோ எஸ்60 காரில் டர்போசார்ஜர் மற்றும் சூப்பர் சார்ஜர் துணையுடன் இயங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. வால்வோ டி5 மாடல் 250 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வருகிறது.

புதிய வால்வோ எஸ்60 சொகுசு கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

டி6 மாடலில் பெட்ரோல் எஞ்சின் 316 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருப்பதுடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கும். இதுதவிர, இந்த பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் கொண்ட மாடல்களிலும் கிடைக்கும்.

புதிய வால்வோ எஸ்60 சொகுசு கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

டி6 ஹைப்ரிட் மாடலில் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்மோட்டார் இணைந்து 340 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தாக இருக்கும். டி8 ஆல் வீல் டிரைவ் மாடல் 400 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். இதுதவிர்த்து, டி8 மாடல் போல்ஸ்டார் மாடல் 415 பிஎஸ் பவரை அளிக்க வல்லதாக இருக்கும் என்பதுடன் சக்கரங்கள், பிரேக்குகள் மற்றும் சஸ்பென்ஷன் மேம்பட்ட அம்சங்களை பெற்றிருக்கும்.

புதிய வால்வோ எஸ்60 சொகுசு கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

இந்த காரில் அவசர காலத்தில் தானியங்கி முறையில் செயல்படும் பிரேக் சிஸ்டம், தடம் மாறுதல் குறித்து எச்சரிக்கும் கருவி, பாதசாரிகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது.

புதிய வால்வோ எஸ்60 சொகுசு கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!

புதிய வால்வோ எஸ்60 கார் ஆடி ஏ4, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் கார்களுக்கு நேரடி போட்டியாக வர இருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் சர்வதேச அளவில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

Tamil
மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo Cars have revealed their new midsize premium sedan offering, the S60. The Volvo S60 was unveiled at the company's manufacturing plant in Charleston, South Carolina, USA.
Story first published: Thursday, June 21, 2018, 14:34 [IST]
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more