மஹிந்திரா ஆசை காட்டி மோசம் செய்யாது... இந்தியாவே காத்து கொண்டுள்ள காரின் சோதனை ஓட்டம் தொடங்கியது...
இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக மஹிந்திரா (Mahindra) உள்ளது. மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6), மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e) மற்றும் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9S) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
இந்த வரிசையில் மஹிந்திரா நிறுவனத்தின் அடுத்த எலெக்ட்ரிக் கார் வரும் 2027ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த தகவலை மஹிந்திரா நிறுவனம் வெகு சமீபத்தில்தான் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. மஹிந்திரா நிறுவனத்தின் அடுத்த எலெக்ட்ரிக் கார் அனேகமாக மஹிந்திரா பிஇ.07 கான்செப்ட்டின் (Mahindra BE.07 Concept) தயாரிப்பு நிலை வெர்ஷனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி மஹிந்திரா பிஇ.07 கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த கான்செப்ட் மாடலைதான், மஹிந்திரா நிறுவனம் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தி, அடுத்ததாக விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் இந்திய சாலைகளில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டம் ஒன்று தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
அனேகமாக சாலைகளில் சோதனை செய்யப்படும் இந்த புதிய எலெக்ட்ரிக் கார், மஹிந்திரா நிறுவனம் அடுத்ததாக விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள பிஇ.07 கான்செப்ட்டின் தயாரிப்பு நிலை வெர்ஷனாக இருக்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து Autocar India தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த வருடம் விற்பனைக்கு வரவுள்ள மஹிந்திரா பிஇ.07 கான்செப்ட்டின் தயாரிப்பு நிலை மாடலில் ஏராளமான அதிநவீன வசதிகளை (Features) நம்மால் எதிர்பார்க்க முடியும். இதில், முன் பக்க டேஷ்போர்டில் வழங்கப்படும் 3 ஸ்க்ரீன் லேஅவுட் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஒன்று 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆக இருக்கும். மற்றொன்று 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக இருக்கும். அதே நேரத்தில் மற்றொரு திரை முன் பக்க பயணியின் இருக்கை முன்பாக வழங்கப்ட்டிருக்கும். அதுவும் 12.3 இன்ச் அளவில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர மஹிந்திரா பிஇ.07 கான்செப்ட்டின் தயாரிப்பு நிலை வெர்ஷனில், பனரோமிக் சன்ரூஃப், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 540 டிகிரி கேமரா, 7 ஏர்பேக்குகள் மற்றும் அடாஸ் (Advanced Driver Assistance Systems) போன்ற வசதிகளையும் நம்மால் உறுதியாக எதிர்பார்க்க முடியும்.
அதே நேரத்தில் 59 kWh, 70 kWh மற்றும் 79 kWh போன்ற பேட்டரி ஆப்ஷன்களை (Battery Options) இந்த எலெக்ட்ரிக் கார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) அதிகபட்சமாக சுமார் 650 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மஹிந்திரா பிஇ.07 கான்செப்ட்டின் தயாரிப்பு நிலை வெர்ஷனின் வருகை, இந்திய சந்தையில் டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப்7 (Vinfast VF7) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








