ஸ்கூட்டருக்கு வழி விடாத டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?

சாலையில் வழிவிட மறுத்த ஆட்டோ ரிக்ஸா டிரைவரை ஸ்கூட்டரில் வந்த பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Arun

சாலையில் வழிவிட மறுத்த ஆட்டோ ரிக்ஸா டிரைவரை ஸ்கூட்டரில் வந்த பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்தும், சாலையில் பிற வாகன ஓட்டிகளுடன் தகராறில் ஈடுபடாமல் தவிர்ப்பது எப்படி? என்பது குறித்தும் பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஸ்கூட்டருக்கு வழி விடாத ஆட்டோ டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?

இந்தியாவில் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகளுக்கு இடையே தகராறு ஏற்படுவது என்பது வாடிக்கையாகி விட்டது. இரு வாகனங்களின் டிரைவர்கள், சாலைகளில் சண்டையிட்டு கொள்வதை அடிக்கடி காண முடியும்.

ஸ்கூட்டருக்கு வழி விடாத ஆட்டோ டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?

எனினும் அவை பெரும்பாலும் வாய் தகராறாகவே இருக்கும். ஆனால் ஹரியானா மாநிலம் குர்கானில், வழி விட மறுத்த ஆட்டோ ரிக்ஸா டிரைவரை, ஸ்கூட்டரில் வந்த பெண் ஒருவர் பட்டப்பகலில் நடுரோட்டில், பலர் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கூட்டருக்கு வழி விடாத ஆட்டோ டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?

ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள பவானி என்கிளேவ் சொசைட்டி பகுதியை சேர்ந்தவர் சுனில் கட்டாரியா. ஆட்டோ ரிக்ஸா ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள குறுகலான சாலையில் ஆட்டோ ரிக்ஸாவை நிறுத்தி விட்டு, போன் பேசி கொண்டிருந்தார்.

ஸ்கூட்டருக்கு வழி விடாத ஆட்டோ டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?

அப்போது சப்னா என்ற 35 வயது பெண் ஸ்கூட்டரில் அங்கு வந்தார். ஆனால் சுனில் கட்டாரியா ஆட்டோ ரிக்ஸாவை நிறுத்தியிருந்ததால், சாலை பிளாக் ஆகி விட்டது. சப்னாவால் ஆட்டோ ரிக்ஸாவை கடந்து செல்ல முடியவில்லை.

ஸ்கூட்டருக்கு வழி விடாத ஆட்டோ டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?

இதனால் ஸ்கூட்டரில் இருந்து இறங்கி வந்த சப்னா, வழிவிடும்படி சுனில் கட்டாரியாவிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சப்னா அங்கிருந்து சென்று விட்டார்.

ஸ்கூட்டருக்கு வழி விடாத ஆட்டோ டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?

சில வினாடிகளில் தனது கணவர் யூனுஸ் மற்றும் மற்றொரு இளைஞருடன் சப்னா மீண்டும் அங்கு வந்தார். பின்னர் சுனில் கட்டாரியாவிடம் மறுபடியும் தகராறில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த சப்னா துப்பாக்கியை கையில் எடுத்தார்.

ஸ்கூட்டருக்கு வழி விடாத ஆட்டோ டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?

பட்டப்பகலில் நடுரோட்டில், சுனில் கட்டாரியை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுனில் கட்டாரியாவின் காதுக்கு மிக நெருக்கமாக சென்ற புல்லட், அதிர்ஷ்டவசமாக அவர் மீது பாயவில்லை. இதனால் அங்கு குழுமியிருந்தவர்கள் வீடியோ எடுக்க தொடங்கினர்.

ஸ்கூட்டருக்கு வழி விடாத ஆட்டோ டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?

அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் இந்த தகராறை முதலில் சாதாரணமாகதான் நினைத்து கொண்டனர். சில நிமிடங்கள் தகராறில் ஈடுபட்டு விட்டு கலைந்து சென்று விடுவார்கள் என்றுதான் அவர்கள் நினைத்தனர். ஆனால் சப்னா துப்பாக்கியால் சுட்டபின்புதான் செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கினர்.

ஸ்கூட்டருக்கு வழி விடாத ஆட்டோ டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?

சுனில் கட்டாரியாவை மீண்டும் சுடுவதற்காக துப்பாக்கியை சப்னா ரீலோட் செய்யும் காட்சிகள் அதில் உள்ளன. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இதுகுறித்து செக்டார் 9ஏ போலீஸ் ஸ்டேஷனில், சுனில் கட்டாரியா புகார் அளித்தார். இதன்பேரில் சப்னா, அவரது கணவர் யூனுஸ் மற்றும் அவர்களுடன் வந்த ஒரு இளைஞர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்கூட்டருக்கு வழி விடாத ஆட்டோ டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?

அத்துடன் சப்னாவிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை 9 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்கூட்டருக்கு வழி விடாத ஆட்டோ டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?

இந்தியாவில் இப்படி வாகன ஓட்டிகளுக்கு இடையே தகராறு ஏற்படுவது என்பது வாடிக்கையாகி விட்டது. 'ரோட் ரேக்' எனப்படும் இத்தகைய விபரீதங்களில் இருந்து தப்பிக்க, வாகன ஓட்டிகள் சில வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது.

ஸ்கூட்டருக்கு வழி விடாத ஆட்டோ டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?

காரில் செல்லும் போது, டிரைவரின் கண்ணுக்கு தெரியாத பகுதிகள் பிளைண்ட் ஸ்பாட் எனப்படுகின்றன. அதாவது ரியர் வியூ மிரர், சைடு மிரர் ஆகியவற்றிலும் தெரியாத பகுதிகளை டிரைவர் திரும்பிதான் பார்க்க வேண்டும். அவ்வாறான பகுதிகளே பிளைண்ட் ஸ்பாட் என அழைக்கப்படுகின்றன.

ஸ்கூட்டருக்கு வழி விடாத ஆட்டோ டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?

சாலையின் ஒரு லேனில் இருந்து இன்னொரு லேனிற்கு மாறும்போது, பிளைண்ட் ஸ்பாட்டில் வரும் வாகனங்களை கவனிக்காவிடில் விபத்து ஏற்பட்டு விடும். எனவே பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் அதிக கவனம் செலுத்துங்கள். லேன் மாறும்போது சிக்னல் செய்யுங்கள்.

ஸ்கூட்டருக்கு வழி விடாத ஆட்டோ டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?

எந்த ஒரு இடத்திற்கு செல்வதாக இருந்தாலும், வீட்டில் இருந்து முன்கூட்டியே கிளம்புங்கள். போதுமான நேரம் இருந்தாலே, செல்லும் வழியில் பிற வாகன ஓட்டிகளுடன் ஏற்படும் அனாவசியமான தகராறுகளை பெரும்பாலும் குறைத்து விட முடியும்.

ஸ்கூட்டருக்கு வழி விடாத ஆட்டோ டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?

மிகவும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தாதீர்கள். சரியான அளவில் சப்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துங்கள். அதுமட்டுமல்லாமல் முன்னால் நின்று கொண்டிருக்கும், சென்று கொண்டிருக்கும் வாகன ஓட்டி எரிச்சல் அடையும் வகையில் தொடர்ச்சியாக ஹாரன்களை ஒலிக்காதீர்கள்.

ஸ்கூட்டருக்கு வழி விடாத ஆட்டோ டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?

எந்த ஒரு வாகனத்தையும் மிக நெருக்கமாக பின்தொடர்ந்து செல்ல வேண்டாம். உங்களை யாரேனும் நெருக்கமாக பின் தொடர்ந்து வந்தாலும் கூட, அந்த இடத்தை விட்டு சென்று விடுங்கள்.

ஸ்கூட்டருக்கு வழி விடாத ஆட்டோ டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?

எதிர்பாராத விதமாக யார் மீதாவது மோதுவது போல் சென்று விட்டால், சாரி என்பது போல் கைகளை உயர்த்தி சைகை காட்டுங்கள். அத்துடன் ஆத்திரமாக இருப்பவர்களுடன் 'ஐ கான்டேக்ட்டை' தவிர்த்து விடுவது நல்லது.

ஸ்கூட்டருக்கு வழி விடாத ஆட்டோ டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?

சாலைகளில் பிற வாகன ஓட்டிகளுடன் வாய் தகராறில் ஈடுபட்டால், கைகலப்பு உண்டாகும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் யாருடனும், எதற்காகவும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள்.

ஸ்கூட்டருக்கு வழி விடாத ஆட்டோ டிரைவர் மீது துப்பாக்கி சூடு! வாகன ஓட்டிகளுடன் தகராறை தவிர்ப்பது எப்படி?

ஒரு வேளை எதிர் பார்ட்டி ஆக்ரோஷமாக இருந்தால், காருக்குள்ளேயே அமர்ந்திருங்கள். காரை விட்டு இறங்கி வருவதற்கு பதிலாக, காருக்குள்ளேயே அமர்ந்து கொண்டு, போலீசாரை அழைக்கலாம். அவர்கள் வந்து நிலைமையை சரி செய்வார்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #எப்படி #how to
English summary
Women shoots at auto driver for not giving way! how to avoid road rage. Read in tamil.
Story first published: Thursday, June 21, 2018, 17:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X