இந்தியர்களின் ஆவலைத் தூண்டிய சுஸுகி ஜிம்னி வெளியீடு!

சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக புதிய தலைமுறை ஜிம்னி எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் மாருதி பிராண்டில் எதிர்பார்க்கப்படும் இந்த மினி எஸ்யூவியில் 1

By Saravana Rajan

சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக புதிய தலைமுறை ஜிம்னி எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் மாருதி பிராண்டில் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய ஆஃப்ரோடு எஸ்யூவி குறித்த தகவல்களை தொடர்ந்து காணலாம்.

இந்தியர்களின் ஆவலைத் தூண்டிய சுஸுகி ஜிம்னி வெளியீடு!

புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவி நான்காம் தலைமுறை மாடலாக வெளியிடப்பட்டு இருக்கிறது. வரும் ஜூலை மாதம் 5ந் தேதி சர்வதேச அளவில் முறைப்படியாக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியர்களின் ஆவலைத் தூண்டிய சுஸுகி ஜிம்னி வெளியீடு!

இந்த மினி எஸ்யூவி இரண்டு மாடல்களில் வெளியிடப்பட இருக்கிறது. ஒன்று குறைந்தபட்ச சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்டான்டர்டு மாடலாகவும், மற்றொன்று ஆஃப்ரோடு தகவமைப்பு அம்சங்கள் அதிகம் பொருந்திய சியரா என்ற மற்றொரு மாடலிலும் வருகிறது. இரு மாடல்களும் XG, XL மற்றும் XC ஆகிய தலா 3 வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

இந்தியர்களின் ஆவலைத் தூண்டிய சுஸுகி ஜிம்னி வெளியீடு!

சர்வதேச அளவில் செல்லும் ஜிம்னி ஸ்டான்டர்டு மாடலில் 3 சிலிண்டர்கள் கொண்ட 660சிசி டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். ஜிம்னி சியாரா மாடலில் டர்போசார்ஜர் இல்லாமல் இயங்கும் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 100 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

இந்தியர்களின் ஆவலைத் தூண்டிய சுஸுகி ஜிம்னி வெளியீடு!

அதேநேரத்தில், இந்தியாவில் மாருதி பலேனோ காரில் பயன்படுத்தப்படும் 101 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 74 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்களின் ஆவலைத் தூண்டிய சுஸுகி ஜிம்னி வெளியீடு!

இந்த இரு மாடல்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. அதேபோன்று, ஆஃப்ரோடுக்கு ஏற்ற வகையில், 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இடம்பெற்று இருக்கும்.

இந்தியர்களின் ஆவலைத் தூண்டிய சுஸுகி ஜிம்னி வெளியீடு!

இந்த மினி எஸ்யூவிக்கும் அதன் க்ரில் அமைப்பு 5 ஸ்லாட் க்ரில் அமைப்பு மிரட்டலான தோற்றத்தை தருகிறது. வட்ட வடிவிலான ஹெட்லைட்டுகள், வலிமையான பம்பர் அமைப்பு உள்ளிட்டவை முக்கிய அம்சங்கள். 5 ஸ்போக் அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. கூரை, ரியர் வியூ மிரர்கள் கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியர்களின் ஆவலைத் தூண்டிய சுஸுகி ஜிம்னி வெளியீடு!

உட்புறத்தில் கருப்பு நிற தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இக்னிஸ் காரில் இருப்பது போன்ற ஏசி வென்ட்டுகள் இடம்பெற்றுள்ளது. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், புஷ் ஸ்டார்ட் வசதி, கீ லெஸ் என்ட்ரி வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

இந்தியர்களின் ஆவலைத் தூண்டிய சுஸுகி ஜிம்னி வெளியீடு!

புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவி 3,300 மிமீ நீளமும், 1,475 மிமீ அகலமும், 1,715 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது.. 2,250 மிமீ வீல் பேஸ் கொண்டது. சியாரா மாடலில் கூடுதல் ஆக்சஸெரீகள் மூலமாக நீளம் 300 மிமீ கூடுதலாக இருக்கிறது.

இந்தியர்களின் ஆவலைத் தூண்டிய சுஸுகி ஜிம்னி வெளியீடு!

வரும் ஜூலையில் புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மினி எஸ்யூவியில் பிரிமியம் மாடலாக நிலைநிறுத்தப்படும். எனவே, ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The 2018 Jimny has been spied several times before. But now, the Japanese car manufacturer has listed the Suzuki Jimny on their official website, indicating a global launch soon.
Story first published: Saturday, June 23, 2018, 11:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X