பஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...!

பஜாஜ் டோமினோர் பைக்கின் விலை 2018ம் ஆண்டில் நான்காவது முறையாக மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த முறை பைக்கிற்கு ரூ 2000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவி

By Balasubramanian

பஜாஜ் டோமினோர் பைக்கின் விலை 2018ம் ஆண்டில் நான்காவது முறையாக மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த முறை பைக்கிற்கு ரூ 2000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

பஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...!

இந்திய டூவிலர் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ தங்கள் வாகனமான டோமினோர் - 400 பை்கின் விலையை இந்தாண்டில் 4 வது முறையாக உயர்த்தியுள்ளது. சுமார் 2000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...!

டோமினோர் பைக் பஜாஜ் நிறுவனத்தின் சிறந்த பைக்காக கருதப்படுகிறது. இந்த பைக்கின் விளம்பரமே இந்தியர் இளைஞர்கள் அதிகம் விரும்பும் ராயல் என்பீல்டு பைக்கை கிண்டல் செய்வது போல அமைக்கப்பட்டிருக்கும்.

பஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...!

இந்த விளம்பரத்தால் பைக் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதமே கிளம்பியது. பல இடங்களில் ராயல் என்பீல்டு ரசிகர்கள், ராயல் என்பீல்டை கிண்டல் செய்பவர்கள் என இரண்டு குரூப்களாக பிரிந்து கொண்டனர். சமூகவலைதளங்களில் இவர்களது விவாதங்கள் எல்லை மீறி போய் கொண்டிருக்கும்.

பஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...!

இதை எதையும் பொருட்படுத்தாமல் பஜாஜ் நிறுவனம் தொடர்ந்து தங்கள் பைக்கிற்கான விளம்பரத்தை ராயல் என்பீல்லடை கிண்டல் செய்யும் வகையிலேயே செய்து வெளியிட்டு வருகிறது. என்னதான் அவர்கள் ராயல் என்பீல்டை கிண்டல் செய்தாலும் அந்த வாடிக்கையாளர்களை அவர்களால் ஈர்க்க முடியவில்லை.

பஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...!

ஓவ்வொரு மாதமும் ராயல் என்பீல்டு விற்பனை அதிகரித்து கொண்டே போகிறது. அதே நேரத்தில் டோமினோர் பைக் எதிர்பார்த்த அளவில் விற்பனையாகிவில்லை. ஆனால் மெது மெதுவாக அதன் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது.

பஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...!

இந்நிலையில் இந்த 2018ம் ஆண்டில் மட்டும் ஏற்கனவே 3 முறை அந்த பைக்கிற்கான விலையை ஏற்றியது. கடைசியாக கடந்த மே மாதம் தான் அதன் விலை ஏற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது அதன் வீலை மீண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

பஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...!

ஏற்றப்பட்ட விலையுடன் எக்ஸ்ஷோரூம் விலையாக பஜாஜ் டோமினோர் 400- ஏபிஎஸ் இல்லாத வேரியன்ட் ரூ 1.48 லட்சமும், ஏபிஎஸ் உடன் கூடிய வேரியன்ட் ரூ 1.62 லட்சம் என விற்பனையாகி வருகிறது. இந்த பைக் முதன் முதலாக கடந்த 2016 ஆண்டு விற்பனைக்கு வந்த போது இதன் விலை 1.36 லட்சம் ஆகும்.

பஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...!

இந்த பைக் அறிமுகமானதில் இருந்து அதன் விலை சுமார் ரூ 12,000 வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த பைக்கின் 2018ம் ஆண்டிற்கான எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் புதிய கலர் ஸ்கீம்கள், தங்க நிற அலாய் வில்கள், மட்டும் மாற்றம் செய்யப்பட்டது மற்ற மெக்கானிக்கல் அம்சங்கள் பழைய பைக்கில் இருந்த அதே அம்சங்களும் விற்பனையாகிறது.

பஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...!

இந்த டோமினோர் பைக் கே.டி.எம் பைக் இன்ஜினை ஒத்த ஒரு இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இதில் 343 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 34.5 பிஎச்பி பவரையும், 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுகிறது.

பஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...!

மேலும் இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கியர் பாக்ஸ் ஸ்லிப்பர் கிளட்ஸ் மூலம் அசிஸ்ட் செய்ய முடியும் அளவிற்கு டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் இரண்டு சேனல் ஏபிஎஸ் வசதி ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

பஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...!

இந்த பைக்கின் சஸ்பென்ஸனை பொருத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ்களும், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஸனும் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கின் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

பஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...!

டோமினோர் 400 பைக்கை பொருத்தவரை 182 கிலோ எடை கொண்டது. இந்த பைக் அதிகபட்சமாக 145 கி.மீ. வேகத்தை கொண்டுள்ளது,. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலையேற்றதால் விற்பனை பாதிக்க கூடாது என அந்நிறுவனம் பல திட்டங்களை முன்னேடுத்து வருகிறது.

பஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...!

பஜாஜ் நிறுவனம் தற்போது மாதம் 1,000 வாகனங்களையாவது விற்கவேண்டும் என முடிவு செய்துள்ளது. ஆனால் இந்நிறுவனம் இந்த பைக் அறிமுகமாகும் போது மாதம் 10,000 வாகனங்களை விற்பதே இலக்காக அறிவித்தது. தற்போது இந்தியாவில் இந்த பைக்கிற்கு பெரிய அளவில் மார்கெட் இல்லாவிட்டாலும் ஏற்றுமதியில் நல்ல மார்கெட் உள்ள பைக் இது.

பஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...!

பஜாஜ் நிறுவனம் தற்போது இந்த ஆண்டிலேயே 4 வது முறையாக இந்த பைக்கிற்கு விலையை ஏற்றியுள்ளது. இந்த விலையேற்றத்திற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. தற்போது விற்பனையாகும் விலையும் இந்த பைக்கில் உள்ள அம்சங்களை பார்தால் கொடுக்கும் காசுக்கு ஒர்த்தான பைக் தான் இது.

பஜாஜ் டோமினோர் பைக் மீண்டும் விலையேற்றம்...!

இந்த பைக் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அனைத்து பைக்குகள், மஹிந்திரா மோஜோ எக்ஸ்டி300 மற்றும் யூடி300 ஆகிய பைக்குகளுக்கு நேரடி போட்டியாக இந்த பைக் திகழ்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி
  2. வெறும் 12 ஆயிரம் ரூபாய்க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விற்பனைக்கு கொண்டு வர கல்லூரி மாணவர்கள் தீவிரம்
  3. ஹோண்டா பைக் பந்தயத்தில் சென்னையை சேர்ந்த முகம்மது மிக்கைல் அசத்தல்!!
  4. புதிய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!!
  5. பிஎம்டபிள்யூ காரை விட இந்த பைக்குகள் வேகமாக சீறிப்பாயும்.. விலையும் கூட பல மடங்கு குறைவுதான்..
English summary
Bajaj Dominar 400 Prices Increased — Fourth Price Hike In 2018. Read inTamil
Story first published: Wednesday, July 11, 2018, 14:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X