புதிய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!!

ரேஸ் டிராக்குகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட அதிசக்திவாய்ந்த போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் கார் ரூ.3.88 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்ந்துள்ளது. இந்த இந்த மாடல் கடந்த ஆ

By Saravana Rajan

போர்ஷே நிறுவனத்தின் அதிசக்திவாய்ந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!!

ரேஸ் டிராக்குகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட அதிசக்திவாய்ந்த போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் என்ற இந்த மாடல் கடந்த ஆண்டு குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. போர்ஷே 911 வரிசையில் அதிக சக்திவாய்ந்த மாடலாகவும் இது நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!!

புதிய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் காரில் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 686 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இசட்எஃப் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. ரியர் வீல் டிரைவ் சிஸ்டத்தில் இயங்குகிறது.

புதிய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை வாய்ந்தது. மணிக்கு 340 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. இந்தியாவில் விற்பனையில் இருக்கும் சாதாரண சாலையில் பயன்படுத்துவதற்கான அனுமதி பெற்ற மிகவும் சக்திவாய்ந்த கார் மாடல்களில் ஒன்றாக இதனை கூறலாம்.

புதிய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!!

புதிய போர்ஷே ஜிடி2 ஆர்எஸ் காரில் ஆக்டிவ் சஸ்பென்ஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் உள்ளது. சாலை நிலையை பொறுத்து டேம்பர் தானாக அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதியை பெற்றிருக்கிறது. மேலும், ரியர் வீல் ஆக்சில் ஸ்டீயரிங் தொழில்நுட்பமுமம், டார்க் வெக்டரிங் சிஸ்டமும் இதன் முக்கிய தொழில்நுட்ப அம்சங்களாக இருக்கின்றன.

புதிய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!!

இந்த காரில் கார்பன் செராமிக் பிரேக் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட இதர பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. மெக்னீசியத்திலான கூரை அமைப்பு இருப்பதால், இலகு எடை கொண்டதாக இருக்கிறது. பானட், முன்புற ஸ்பிளிட்டர்கள், பூட் லிட் ஆகியவை கார்பன் ஃபைபர் பாகங்கள் என்பதும் எடை குறைந்தற்கான காரணமாக இருக்கிறது.

புதிய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!!

இந்த காரின் ஜன்னல்களில் பிளாஸ்டிக் போன்ற கலப்பு மூலப்பொருளில் உருவாக்கப்பட்ட உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், எடை குறைப்பு மேலும் சாத்தியமாகி இருக்கிறது. ஜிடி2 ஆர்எஸ் டைட்டானியம் புகைக்போக்கி அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!!

இந்த காரில் கார்பன் ஃபைபர் ரீ-இன்ஃபோர்ஸ்டு பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட பக்கெட் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. கருப்பு- சிவப்பு வண்ணத்திலான அல்காண்ட்ரா லெதர் இருக்கைகள் முக்கிய அம்சமாக இருக்கிறது.

புதிய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!!

மேலும், ஆப்ஷனலாக வெய்சாக் பேக்கேஜ் என்ற மாடலிலும் கிடைக்கிறது. இந்த மாடலில் கூரை, ஆன்ட்டி ரோல் பார், கப்ளிங் ராடுகள் மற்றும் மெக்னீசியம் சக்கரங்கள் மூலமாக எடை மேலும் 30 கிலோ குறைவாக இருக்கிறது. அதேநேரத்தில், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் இதில் இருக்காது.

புதிய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!!

இந்த புதிய போர்ஷே கார் நர்பர்க்ரிங் ரேஸ் டிராக்கில் மிக குறைந்த நேரத்தில் ஒரு சுற்றை கடந்த சக்திவாய்ந்த கார் மாடல் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த கார் 6:47:30 நிமிடத்தில் ஒரு சுற்றை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!!

புதிய போர்ஷே ஜிடி2 ஆர்எஸ் கார் ரூ.3.88 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ரேஸ் டிராக்குகளில் பயன்படுத்துவதற்கான காரை வாங்க திட்டமிட்டிருப்போருக்கு மிகச் சிறந்த சாய்ஸாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 11, 2018, 11:01 [IST]
English summary
Porsche has launched their most powerful and track-focussed 911 in India, the GT2 RS. The powerful road-legal Porsche comes with a price tag of Rs 3.88 crore, ex-showroom (India).
மேலும்... #போர்ஷே #porsche
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+