ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

By Balasubramanian

ஜி.எஸ்.டி அமலுக்கு வந்ததால் ஆட்டோமொபைல் துறையில் பெரிய பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜி.எஸ்.டி அமலுக்கு வந்து ஒர் ஆண்டு ஆகியுள்ள நிலையில் ஜி.எஸ்.டி அமலுக்கு வருவதற்கு முன்பு இருந்த விற்பனையை விட தற்போது அட்டோமொபைல் துறை 18.1 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

இந்தியாவில் 2018-2019ம் நிதியாண்டின் முதல் காலாண்டு கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்தது. தற்போது இந்த முதல் காலாண்டில் ஆட்டோமொபைல் விற்பனையின் ஒட்டு மொத்த ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதன் படி ஒட்டு மொத்த ஆட்டோமொபைல் துறையும் 18.1 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

இதில் பயணிகள் வாகனம் 8,73,501 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி 19.91 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. அதில் முக்கியமாக வேன்கள் 55,078 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி 27.29 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

பயணிகள் அல்லாத மற்ற பயன்பாட்டு வாகனங்கள் கடந்தாண்டை விட 2,34,876 அதிகமாக விற்பனையாகி 23.22 சதவீத உயர்ந்துள்ளது. கமர்ஷியரல் வாகனங்கள் 2,30,095 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி 51.55 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

நடுத்தர மற்றும் கனரக கமர்ஷியல் வாகனங்கள் மொத்தம் 89,027 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி 83.59 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இலகு ரக கமர்ஷியல் வாகனங்களை பொருத்தவரை 1,41,068 வானகங்கள் அதிகமாக விற்பனையாகி 36.51 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.+

Segment Domestic Sales April-June % Change Domestic sales - June
2017-18 ---------- 2018-19 2017-18 ------- 2018-19
Total Passenger Vehicle 728,483 ----------- 873501 19.91 199,036 -------- 273,759
Total Commercial Vehicle 151,831 ----------- 230,095 51.55 56,890 ---------- 80,624
Total two-wheelers 4,897,622 ------- 5,677,343 15.92 1,572,509------1,867,884
Total three-wheelers 104,976 ----------- 161,673 54.01 36,491 ---------- 56,884
Grand total of all categories 5,882,912---------6,942,612 18.01 1,819,926 -----2,279,151
ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

முன்று சக்கர வாகனங்க ரகத்தை பொருத்தவரை கடந்தாண்டை விட 1,61,673 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி 54.01 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வாகனங்களின் மார்கெட்டை பொருத்தவரை மாருதி சுஸூகி நிறுவனத்தின் வாகனங்கள் சிறப்பாக விற்பனையாகியுள்ளது. புதிய ஸிப்ட், பெலேனோ, விட்டாரா பிரெஸ்ஸா, ஆகிய வாகனங்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளது.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

மாருதியை தொடர்ந்து நல்ல வளர்ச்சியை கண்ட கார்கள் என்றால் ஹோண்டா அமேஸ், மற்றும டொயோட்டா யாரீஸ் ஆகிய கார்களின் விற்பனையனை தான். புதிதாக வந்த யாரீஸ் கார் மக்கள் மனதில் நற்பெயரை பெற்றுள்ளது.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

டூவீலர் மார்கெட்டை பொரத்தவரை ராயல் என்பீல்டு, பஜாஜ் ஆட்டோ போன்ற சில சில நிறுவனங்கள் இரண்டு இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளது.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

கடந்தாண்டு ஜூலை மாதம் தான் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அமலுக்கு கொண்டு வந்தது. இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார சீர் திருத்த முடிவாக பார்க்கப்பட்ட இந்த ஜிஎஸ்டி வரி, மக்கள் மத்தியில் நெகட்டிவ்வாக பார்க்கப்பட்டது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறைகள் பெரிதும் பாதிக்கப்படும் என் பேச்சுக்கள் உலா வந்தன.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

ஆனால் இவை எல்லாவற்றையும் பொய்யாக்கும் வகையில் ஆட்டோ மொபைல் துறையின் ஒட்டு மொத்த வளர்ச்சி 18.1 ஆகி உள்ளது.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

இது குறித்து இந்திய ஆட்டோமொபல் தயாரிப்பாளர்கள் சொசைட்டி இயக்குநர் விஷ்ணு கூறுகையில் : "இந்தியாவில் இந்த முதல் காலாண்டு வளர்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. இந்திய அரசு பேக்குவரத்திற்காக கட்டமைக்கும் உட்கட்டமைப்பு, மக்கள் மத்தியில் உருவான வருமான உயர்வு,

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

புதிக வாகனங்களின் அறிமுகம் மற்றும் கிராமப்புறங்களில் வாகனங்களின் தேவை அதிகரிப்பு ஆகியன காரணங்களாக இருக்கலாம். இந்தியாவை சமீபத்தில் சில ஆண்டுகளாக பயணிகள் வாகனங்களின் விற்பனை மிக அளவில் அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

கடந்தாண்டு பிஎஸ் 3 இல் இருந்து பிஎஸ் 4க்காகன புகை உமிழ்வு கட்டுப்பாடிற்கு வாகன தயாரிப்பு மாறியது. இதனால் சில காலங்கள் தொழிற்சாலைகளில் உற்பத்திகள் பாதிக்கப்பட்டன. அதே போல ஜூலை மாதம் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படுவது இருந்ததால் உற்பத்திகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் கடந்தாண்டு விற்பனை சற்று மத்தமாகவே இருந்தது. அதனால் இந்தாண்டு வளர்ச்சி அபாரமாக உள்ளது. " என கூறினார்.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

இந்தியாவில் கார் உற்பத்தியாளர்களின் வளர்ச்சியை பொருத்தவரை மாருதி சுஸூகி நிறுவனம் இந்த காலாண்டில் மட்டும் 4,58,967 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது உள்நாட்டு சந்தையில் 24.93 சதவீத வளர்ச்சியாகும். டொயோட்டா நிறுவனம் கடந்தாண்டு இருந்த 51 சதவீத வளர்ச்சியை இந்தாண்டு 52.54 ஆக உயர்த்தியுள்ளது.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

டாடா நிறுவனம் கடந்தாண்டு இருந்த 6 சதவீத வளர்ச்சியை இந்தாண்டு 6.75 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஹேண்டா கார்ஸ் இந்தியா, மஹிந்திரா, ஹூண்டாய் ஆகிய கடந்தாண்டு வளர்ச்சியை காட்டிலும் இந்தாண்டு வளர்ச்சி சற்று குறைவாகவே இருக்கிறது.

Passenger Vehicle Mkt Share in Q1 FY 2019 (%) Mkt Share in Q1 FY18 (%)
Maruti Suzuki 52.54 51
Hyundai 15.69 17
M&M 6.93 8
Tata Motors 6.75 6
Honda 4.87 5
ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

ஹீண்டாய் கிரெட்டா வாகனஙம் மொத்தம் 31,505 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. மாருதி நிறுவனத்தின் ஒட்டு மொத்த எஸ்யூவி செகண்மெண்ட்களாக ள்ள விட்டாரா பிரெஸ்ஸா, ஜிப்ஸி, எர்டிகா மற்றும் எஸ்கிராஸ் ஆகிய வாகனங்கள் எல்லாம் சேர்த்து கடந்தாண்டு மொத்தம் 57125 வானகங்கள் தான் விற்பனையாகிருந்தது. இந்தாண்டு 65,754 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

ஹீண்டாய் கிரெட்டா வாகனம் மெல்ல மெல்ல மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா காரின் விற்பனையை நெருங்குகிறது. கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 11,111 கிரெட்டா வாகனங்கள் விற்பனையானது. அதே காலகட்டத்தில் மொத்தம் 10,713 விட்டாரா பிரெஸ்ஸா வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

மஹிந்திரா நிறுவனத்தை பொருத்தவரை மொத்தம் 60,539 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது 8.52 சதவீத வளர்ச்சியாகும். அதே நேரத்தில் 240 எலெக்ட்ரிக் வாகனங்களும் விற்பனையாகியுள்ளது. இது 14.29 சதவீத வளர்ச்சியாகும்.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த முதல் காலாண்டில் மொத்தம் 58,969 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 48.49 சதவீத வளர்ச்சியாகும். இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் டியாகோ, டிகோர், ஹெக்ஸா, நெக்ஸான் ஆகிய கார்களின் விற்பனை தான்.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

ஹோண்டா கார்களை பொருத்தவரை கடந்த காலாண்டில் மொத்தம் 42,609 வாகனங்களை விற்பனை செய்துள்ளனர். இது 10.49 சதவீத வளர்ச்சியாகும். இந்த விற்பனைக்கு ஹோண்டா அமேஸ்காரின் விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

டொயோட்டா நிறுவனத்தை பொருத்தவரை மொத்தம் 39,238 வாகனங்களை விற்பனை செய்து 51.79 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளனர். ஃபோர்டு நிறுவனம் 24,941 வாகனங்களை விற்பனை செய்து 18.18 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளனர்.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

ரெனால்ட் நிறுவனம் மொத்தம் 20,790 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 16.92 சதவீத வளர்ச்சியாகும். நிஸான் நிறுவனம் மொத்தம் 10,605 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 15.2 சதவீத வளர்சியாகம். ஃபோக்ஸ்வாகனம் நிறுவனம் 9159 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 14.99 சதவீத வளர்ச்சியாகும்.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

டூவீலர் மார்கெட்டை பொருத்த வரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தான் கடந்த காலண்டில் 10.46 சதவீத வளர்ச்சியை பெற்று முன்னேறியுள்ளது. மற்ற முக்கிய தயாரிப்பாளர்கள் சற்று சரியவையே சந்தித்துள்ளனர்.

Two Wheelers Mkt Share in Q1 FY 2019 (%) Mkt Share in Q1 FY18 (%)
Hero MotoCorp 36.29 37
Bajaj Auto 10.46 9
HMSI 29.77 30
TVS Motors 12.92 14
Royal Enfield 3.87 4
ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

ஹீரோ நிறுவனம் கடந்தாண்டு முதல் காலாண்டில் 37 சதவீத வளர்ச்சியை பெற்றிருந்தது. கடந்தகாலாண்டில் இது 36.29 சதவீமாக குறைந்துள்ளது. ஹோண்டா மோட்டார் சைக்கிளை பொருத்தவரை கடந்தாண்டு இருந்த 30 சதவீத வளர்ச்சி இந்தாண்டு 29.77 சதவீதமாக குறைந்துள்ளது.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

டூவீலர்களை பொருத்தவரை இந்தியாவில் 22.7 சதவீத வளர்ச்சி 110 சிசிக்கு குறைவாகன வாகனங்களின் விற்பனையில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஸ்கூட்டர் ரக டூவீலர்கள் விற்பனை வளர்ச்சி இரண்டு இலக்க எண்களாக இருக்கிறது.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

கமர்ஷியல் வானகங்களை பொருத்தவரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1,05,610 வாகனங்கள் விற்பனையாகி 74.72 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இது மார்கெட்டில் 40 சதவீத பங்காக இருந்த இந்த செக்மெண்டின் விற்பனையை 45.89 சதவீதமாக மாற்றியுள்ளது.

Commercial Vehicle Mkt Share in Q1 FY 2019 (%) Mkt Share in Q1 FY18 (%)
Tata Motors 45.89 40
M&M 24.74 31
Ashok Leyland 16.56 17
VECV 6.15 6
Force Motors 2.11 3
ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

பிஎஸ் 3 ல் இருந்து பிஎஸ் 4 ஆக மாற்றப்பட்ட போது இந்தியாவில் ஆட்டோமொபல் துறையில் அதிகம் பாதிக்கப்பட்டது. இந்த செக்மெண்ட் தான். ஆனால் முழுமையாக பிஎஸ் 4 ரக வாகனங்கள் வந்த பின்பு விற்பனை அதிகரித்தது.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

மூன்று சக்கர வாகனங்கள்

மூன்ற சக்கர வாகன சந்தையை பொருத்தவரை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 94,431 வாகனங்களை விற்பனை செய்து 80.39 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. பியாஜியோ நிறுவனம் மொத்தம் 40,401 வாகனங்களை விற்பனை செய்து 25.83 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.

Three Wheelers Mkt Share in Q1 FY 2019 (%) Mkt Share in Q1 FY18 (%)
Bajaj Auto 58.40 50
Piaggio 24.98 31
M&M 8.04 9
Atul Auto 5.46 8
TVS Motors 2.64 2.9
ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

இந்த மார்கெட்டில் பஜாஜ் நிறுவனம் தான் வகித்த 50 சதவீத இடத்தை 58.4 சதவீதமாக உயர்த்தியுள்ளது. பியாஜியோ நிறுவனம் தான் வைத்திருந்த 31 சதவீத மார்கெட்டை தற்போது 24 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

ஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி

மூன்றாவது இடத்தை மஹிந்தியா நிறுவனம் 13,005 வாகனங்களை விற்பனை செய்து 29.34 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. அதுல் ஆட்டோ மொத்தம் 8835 வாகனங்களை விற்பனை செய்து 8.95 சதவீத வளர்ச்சியும், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மொத்தம் 4276 வாகனங்களை விற்பனை செய்து 84.79 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது

டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. புதிய போர்ஷே 911 ஜிடி2 ஆர்எஸ் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!!
  2. பிஎம்டபிள்யூ காரை விட இந்த பைக்குகள் வேகமாக சீறிப்பாயும்.. விலையும் கூட பல மடங்கு குறைவுதான்..
  3. ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசனுக்கு முண்டியடித்த கூட்டம்... இணையப் பக்கம் செயலிழந்தது!!
  4. CD 110 ட்ரீம் DX பைக்கின் புதிய எடிசனை லான்ச் செய்தது ஹோண்டா.. குறி வைப்பது இவர்களைதான்.
  5. டயர்களை மாற்றியே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிகள்!!

Tamil
English summary
Complete Auto Sales Analysis Q1 FY 2019. Read in Tamil
Story first published: Wednesday, July 11, 2018, 13:21 [IST]
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more