இந்தியாவின் சிறந்த பாதுகாப்பான கார்களின் பட்டியலை இந்த பக்கத்தில் காணலாம். சிறந்த மதிப்பீட்டை பெற்ற இந்தியாவில் விற்பனையில் உள்ள பாதுகாப்பான கார்களின் விலை, தொழில்நுட்ப விபரம், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல தகவல்களை இங்கே பார்க்கலாம்.
டொயோட்டா யாரிஸ் செடான் கார் இந்தியாவின் சிறந்த பாதுகாப்பு அளிக்கும் கார் மாடல்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த காரின் பேஸ் வேரியண்ட்டிலேயே அதிக பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்படுகின்றன. போட்டியாளர்களை ஒப்பிடும்போது அதிசிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாகவும் இருக்கிறது. இந்த காரில் 7 ஏர்பேக்குகள் நிரந்தர அம்சமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஏசியன் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருக்கிறது.
இந்தியாவின் மிக பாதுகாப்பான கார் மாடல்களில் முக்கிய இடத்தை டாடா நெக்ஸான் பெற்றிருக்கிறது. குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில், 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற இந்தியாவின் முதல் கார் என்ற பெருமையையும் டாடா நெக்ஸான் பெற்றுள்ளது. சிறப்பான கட்டமைப்பு தரம், அதிக பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை இந்த காரின் மதிப்பை உயர்த்தும் விஷயங்களாக கூறலாம். மேலும், தொழில்நுட்ப வசதிகளிலும், விலையிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக உள்ளது.
இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் அதிகம் விரும்பப்படும் மாடலாக ஜீப் காம்பஸ் மாறி இருக்கிறது. கம்பீரமான தோற்றம், இடவசதி, தொழில்நுட்ப அம்சங்களில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த கார் சிறந்த கட்டுமானத் தரத்தை பெற்றிருப்பதுடன், பாதுகாப்பு அம்சங்களிலும், தொழில்நுட்பங்களிலும் அசத்தலாக இருக்கிறது. நேர்த்தியான இன்டீரியர் மற்றும் இடவசதி ஆகியவையும் வாடிக்கையாளர்களை கவர்ந்த விஷயங்களாக உள்ளன.
ஹேட்ச்பேக் கார்களில் அழகான மாடல் ஃபோக்ஸ்வேகன் போலோ. வடிவமைப்பில் மிக நேர்த்தியாகவும், கச்சிதமாகவும் இருக்கும் இந்த கார் பாதுகாப்பு தரத்திலும் சிறந்த மாடலாக பெயர் பெற்றிருக்கிறது. இந்த கார் சிறந்த கட்டுமானத் தரத்தை பெற்றிருப்பதுடன், அதிக பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது. யூரோ என்சிஏபி அமைப்பின் கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பு அம்சங்களுக்கு பெயர் பெற்றவை. அந்த வகையில், டொயோட்டா எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக் கார் சிறந்த பாதுாப்பு அம்சங்களை கொண்ட கார் மாடலாக கூறலாம். இந்த கார் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. மேலும், டொயோட்டா நிறுவனத்தின் சிறப்பான கட்டுமானமும் இந்த காருக்கு முக்கிய சிறப்பம்சமாக கூறலாம்.
ஃபோர்டு கார்கள் சிறப்பான கட்டுமானத் தரம் கொண்டவை. அந்த வகையில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியும் மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை பெற்ற கார் மாடலாக இருக்கிறது. வலிமையான கட்டுமானம், அதிக தொழில்நுட்ப வசதிகளை இந்த காம்பேக்ட் எஸ்யூவி பெற்றிருக்கிறது. இந்த காரில் விபத்து உள்ளிட்ட சமயங்களில் அவசர உதவி கோருவதற்கான தானியங்கி தொடர்பு வசதியும் உள்ளது. இந்த கார் யூரோ என்சிஏபி அமைப்பின் கிராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் ரேட்டிங்கையும், லத்தீன் என்சிஏபி அமைப்பின் கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.