டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் 8 வேரியண்ட்டுகளில் 9 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரை எஸ்யூவி ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
வேரியண்ட்டுகள் | எக்ஸ்ஷோரூம் விலை |
---|---|
எஸ்யூவி | Gearbox
|
₹ 8,40,509 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 9,15,553 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 9,80,588 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 9,80,588 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 9,98,000 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 10,65,632 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 11,30,676 |
எஸ்யூவி | Gearbox
|
₹ 11,55,000 |
கியர்பாக்ஸ் | எரிபொருள் வகை | மைலேஜ் |
---|---|---|
பெட்ரோல் | 18.76 |
காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் அர்பன் க்ரூஸர் என்ற புத்தம் புதிய மாடலுடன் களமிறங்கி உள்ளது டொயோட்டா கார் நிறுவனம். மாருதி விட்டாரா பிரெஸ்ஸா அடிப்படையில் சில மாற்றங்களுடன் டொயோட்டா பிராண்டில் இந்த புதிய எஸ்யூவி மாடல் வந்துள்ளது.
வெளிப்புற வடிவமைப்பு
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியிலிருந்து வேறுபடுத்தும் விதத்தில் க்ரோம் பட்டைகளுடன் கூடிய புதிய க்ரில் அமைப்பு மூலமாக வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது. க்ரில் அமைப்பின் இருபுறத்திலும் எல்இடி பகல்நேர விளக்குகளுடன் கூடிய எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் இடம்பெற்றுள்ளன. கருப்பு வண்ண பிளாஸ்டிக் க்ளாடிங் சட்டத்துடன் கூடிய முன்புற பம்பர் அமைப்பு எஸ்யூவிக்கு உரிய தோரணையை வழங்குகிறது. க்ரில் அமைப்புக்கு கீழாக பெரிய ஏர்டேம் அமைப்பு, பனி விளக்குகளுடன் வசீகரமாக இருக்கிறது.
பக்கவாட்டில் அதிக மாற்றங்கள் இல்லை. ஆனால், புதிய 16 அங்குல டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள் டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவிக்கு வசீகரமான தோற்றத்தை பெற்றுத் தருகிறது. வலிமையான வீல் ஆர்ச்சுகள், ரூஃப் ரெயில்கள் ஆகியவை எஸ்யூவி மாடல் என்பதை காட்டுகின்றது.
பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள், அர்பன் க்ரூஸர் எழுத்துக்களுடன் கூடிய க்ரோம் பட்டை அமைப்பு, ரூஃப் ஸ்பாய்லர், ஸ்டாப் லைட், பிரதிபலிப்பு அம்சத்துடன் கூடிய பம்பர், ஸ்கிட் பிளேட், வலிமையான எஸ்யூவி தோற்றத்தை தருகின்றன.
உட்புற வடிவமைப்பு
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா டேஷ்போர்டு மற்றும் இதர அம்சங்களில் பெரிய வேறுபாடுகள் இல்லை. டொயோட்டா பேட்ஜுக்கு மாறி இருக்கிறது. அதேநேரத்தில், கருப்பு வண்ண டேஷ்போர்டு மற்றும் அடர் பழுப்பு வண்ண அப்ஹோல்ஸ்ட்ரி மூலமாக வேறுபடுத்தப்பட்டு இருக்கிறது. தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் முக்கிய அம்சமாக இருக்கிறது.
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியிலும் இடம்பெற்றுள்ளது. பிஎஸ்6 தரத்திற்கு இணையான இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.
புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் மைலேஜ் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் அதே மைலேஜை டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியும் வழங்கும் என கூறலாம்.
புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், 7 அங்குல ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டியூவல் டோன் இன்டீரியர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், மடக்கும் வசதியுடன் பின் இருக்கை ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் சக்கைபோடு போட்டு வருவதுடன் வாடிக்கையாளர் மத்தியில் அதிக நன்மதிப்பையும் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், அர்பன் க்ரூஸர் எஸ்யூவி டொயோட்டா மீதான அதீத நம்பிக்கையையும், பிணைப்பும் கொண்டவர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக அமையும். டிசைன், வசதிகள், எஞ்சின், மைலேஜ், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும்.
புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் மிட், ஹை மற்றும் பிரிமீயம் என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.
புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியானது 9 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. சுயவ் சில்வர், க்ரூவீ ஆரஞ்ச், ஐகானிக் க்ரே, ஸ்புங்கி புளூ, சன்னி ஒயிட், ரஸ்ட்டிக் பிரவுன் ஆகிய ஒற்றை வண்ணத் தேர்வுகளிலும், ஸ்புங்கி புளூ- சிஸ்லிங் பிளாக், ரஸ்ட்டிக் பிரவுன் - சிஸ்லிங் பிளாக் மற்றும் க்ரூவீ ஆரஞ்ச் - சன்னி ஒயிட் ஆகிய இரட்டை வண்ணக் கலவையிலும் கிடைக்கிறது.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியானது கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய எஸ்யூவிகளுடன் போட்டி போடுகிறது.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியில் டீசல் எஞ்சின் தேர்வு இல்லை.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவியின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.