ரூ69ஆயிரத்திற்கு இ-லூனா, மாருதியில் 35+ மைலேஜ் தரும் இன்ஜின் என இந்த வார டாப் 10 செய்திகள் இது தான்!
ஆட்டோமொபைல் துறையில் தினந்தோறும் புதிய புதிய செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் அதை ஆர்வமாக படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ஆட்டோமொபை துறையில் வெளியான டாப் 10 செய்திகள் என்னென்ன என்பதை தான் நாம் இங்கே சுருக்கமாக சொல்லியுள்ளோம். வாருங்கள் இந்த டாப் 10 செய்திகளை காணலாம்.
கைனெடிக் இ-லூனா அறிமுகம்: கைனெடிக் கிரீன் நிறுவனத்தின் சார்பில் இந்த வாரம் என்ற எலெக்ட்ரிக் மொபெட் பை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வாகனம் ரூபாய் 69,990 என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. ஒரு முறை சார்ஜ் போட்டால் 110 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான புக்கிங்கும் ஏற்கனவே துவங்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே படியுங்கள்.

சிறுவனுக்கு ஆனந்த் மஹிந்திரா கொடுத்த பரிசு: ரூபாய் 700க்கு புதிய மஹிந்திரா தார் கார் வேண்டும் என கேட்ட நொய்டாவை சேர்ந்த சிறுவனுக்கு அந்நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது தொழிற்சாலையை சுற்றி பார்க்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார். இதனால் அந்த சிறுவன் மகிழ்ச்சி அடைந்துள்ளான். இது குறித்த விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம்: சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் துவங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் எல்லாம் அங்கிருந்துதான் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கிளம்பாக்கத்தில் புதிதாக ரயில் நிலையம் ஒன்று அமைக்க இந்த வாரம் முடிவானது. இன்னும் 6 மாதத்தில் இந்த ரயில் நிலையம் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை இங்கே படியுங்கள்.

டாடா கர்வ் காரின் விலை விபரங்கள்: டாடா நிறுவனத்தின் கார் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட காராக இருக்கிறது. இந்த கார் எலெக்ட்ரிக், பெட்ரோல், டீசல் என மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த காரின் எதிர்பார்ப்பு விலை குறித்த விபரங்கள் எல்லாம் தற்போது வெளியாகி உள்ளன. இந்த விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
HSRP நம்பர் பிளேட் கட்டாயம்: கர்நாடக மாநில அரசு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் எல்லாம் நிச்சயம் HSRP என்ற உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட்டை கட்டாயம் பொருத்த வேண்டும் என கூறியுள்ளது. இந்நிலையில் பல வாகனங்கள் இந்த நம்பர் பிளேட் உடன் இல்லாமல் தனியாக வேறுவிதமான நம்பர் பிளேட் உடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் HSRP நம்பர் பிளேட்டை மாற்றுவதற்கான கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.

ஜப்பானை பின்னுக்கு தள்ளிய சீனா: கடந்த 2023-ம் ஆண்டு ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல உலக நாடுகள் கொரானாக்கு பிறகு அதிகமான எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்துள்ளன. இந்நிலையில் இந்தியா ஜப்பானிய பின்னுக்கு தள்ளி உலகில் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் மார்க்கெட் கொண்ட நாடாக மாறிய நிலையில் தற்போது சீனாவும் ஜப்பானின் பின்னுக்கு தள்ளியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே காணுங்கள்.
புதிய ஸ்கோடா சப்-காம்பேக்ட் எஸ்யூவி: ஸ்கோடா நிறுவனம் புதிதாக சப்-காம்பேக்ட் கார் ஒன்றை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த செக்மெண்டில் கார் விற்பனை சிறப்பாக இருப்பதால் புதிய காரை களம் இறக்க நிறுவனம் தயாராகி வரும் நிலையில் அந்த கார் குறித்த பல முக்கிய தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. அதை இங்கே கிளிக் செய்து விரிவாக படியுங்கள்.
மாருதி வேகன்ஆர் விலை குறைப்பு: மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த காரை நிச்சயம் மிடில் கிளாஸ் மக்கள் விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்நிலையில் மாருதி நிறுவனம் இந்த காரின் விலையை குறைத்து புதிய யுக்தி ஒன்றை கையாண்டு இதன் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை செய்து படியுங்கள்.
பல்சர் என்150 மற்றும் என் 160 பைக்குகளின் விலை விபரங்கள்: பஜாஜ் நிறுவனம் ஏற்கனவே கடந்த வாரம் தனது பல்சர் என்150 மற்றும் என்160 ஆகிய இரண்டு பைக்குகளை பொது வழியில் காட்சிப்படுத்தி இருந்தது. இந்த பைக்குகளின் விலை விவரங்களை இந்த வாரம் அறிவித்துள்ளது. மிக குறைவான விலையில் இந்த பைக்கில் அறிமுகமாகியுள்ளன. இந்த பைக்குகளின் விலை குறித்த அனைத்து தகவல்களையும் இங்கே காணுங்கள்.
மாருதி ஜெனரேட்டர் ஹைபிரிட்: மாருதி நிறுவனம் தனது புதிய ஹைபிரிட் தொழில்நுட்பதற்காக காருக்குள்ளேயே ஜெனரேட்டரை பொருத்தி குறைவான பெட்ரோலில் மின்சாரம் தயாரித்து அதை வைத்து மின் மோட்டாரை இயக்க வைத்து வாகனத்தை உருவாக்கும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து வருகிறது. இது குறித்த விரிவான விவரங்களை இங்கே கிளிக் செய்து படியுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த வாரம் ஆட்டோமேட்டிக் துறையில் ஏகப்பட்ட தகவல்கள் மற்றும் புதிய செய்திகள் எல்லாம் வெளியாகி உள்ளன. இது நிச்சயம் பலரை கவர்ந்திருக்க கூடும். இதில் சில செய்திகளை நீங்கள் மிஸ் செய்திருக்கலாம். உங்களுக்காகவே இந்த செய்திகளை எல்லாம் நாங்கள் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.


Click it and Unblock the Notifications









