மாருதி காரின் விலை குறைப்பு.. இவ்ளோ ரூபா குறைச்சிருக்கா!! மத்த நிறுவனங்கள் எல்லாம் வீட்டுக்குதான் போகணும் போல!

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதன் குறிப்பிட்ட கார் மாடல் ஒன்றின் விலையை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது எந்த கார் மாடல்? எவ்வளவு ரூபாய் குறைக்கப்பட்டு இருக்கின்றது? விலை குறைப்பிற்கு பின்னால் ஏதேனும் காரணம் இருக்கின்றதா? இதுபோன்ற அனைத்து சந்தேகங்களுக்குமான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் விலை குறைவான கார் மாடல்களில் ஒன்றாக மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யின் வேகன்ஆர் (WagonR) இருக்கின்றது. இந்த கார் மாடலின் விலையையே மாருதி தற்போது குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பிட்ட சில தேர்வுகளின் விலையையே அது குறைத்திருக்கின்றது.

Maruti suzuki wagonr prices slashed

இந்த விலை குறைப்பிற்கான காரணம் வெளியிடப்படவில்லை. அதேவேளையில், இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்கள் புதிய ஆண்டு தொடங்கியதும் புத்தாண்டு பரிசாக விலை உயர்வையே வழங்கின. அந்தவகையில், மாருதி சுஸுகி நிறுவனமும் அதன் தயாரிப்புகள் சிலவற்றின் விலையை மாற்றி அமைத்தது. இதனால் தற்போது புதிய விலைகளிலேயே மாருதி கார்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே வேகன்ஆர் கார் மாடலின் விலை குறைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஜனவரி மாதத்தில் விலையை உயர்த்திய நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுஸுகி மட்டிமே இருக்கின்றது என நினைத்துக் கொள்ள வேண்டாம். டாடா, ஹூண்டாய் மற்றும் கியா போன்ற நிறுவனங்களும் அதன் தயாரிப்புகள் சிலவற்றின் விலையை உயர்த்தின.

இந்த நிலையிலேயே மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் மாடலின் விலையை குறைத்திருக்கின்றது. போட்டி நிறுவனங்களுக்கு கூடுதல் போட்டியை இதன் வாயிலாக வழங்க வேண்டும் என்கிற நோக்கில் அந்நிறுவனம் விலையை குறைத்திருக்கலாம் என்றே யூகிக்கப்படுகின்றது. ஐந்தாயிரம் ரூபாய் வரையிலேயே மாருதி சுஸுகி விலை குறைப்பைச் செய்திருக்கின்றது.

இந்த விலை குறைப்பான குறிப்பிட்ட சில வேரியண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். விஎக்ஸ்ஐ 1.0 ஏஜிஎஸ் (VXi 1.0 AGS), இசட்எக்ஸ்ஐ 1.2 ஏஜிஎஸ் (ZXi 1.2 AGS), இசட்எக்ஸ்ஐ பிளஸ் 1.2 ஏஜிஎஸ் (ZXi+ 1.2 AGS) மற்றும் இசட்எக்ஸ்ஐ பிளஸ் 1.2 ஏஜிஎஸ் டூயல் டோன் (ZXi+ 1.2 AGS dual tone) ஆகிய நான்கு தேர்வுகளின் விலையிலேயே ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கின்றது.

மற்ற தேர்வுகளின் விலையில் எந்த மாற்றத்தையும் மாருதி சுஸுகி செய்யவில்லை. குறிப்பாக ஆரம்ப நிலை தேர்வின் விலைகள் அப்படியே இருக்கின்றன. இதன் விலை ரூ. 5.54 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. வேகன்ஆர் கார் மாடலின் உச்சபட்ச விலை ரூ. 7.37 லட்சம் ஆகும்.

இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் அதன் ஆஃப்-ரோடு எஸ்யூவி ரக கார் மாடலான ஜிம்னியின் விலையை குறைத்திருந்தது. வேகன்ஆர் கார் மாடலை போலவே ஜிம்னியின் குறிப்பிட்ட வேரியண்டுகளின் விலையே குறைக்கப்பட்டது. ஜெட்டா ஏடி, ஆல்ஃபா ஏடி மற்றும் ஆல்ஃபா ஏடி டூயல் ஜோன் ஆகியவற்றின் விலையே குறைக்கப்பட்டு இருக்கின்றது.

ரூ. 10 ஆயிரம் வரை இந்த வேரியண்டுகளின் விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் மாருதி சுஸுகி ஜிம்னி ரூ. 12.74 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் பிரீமியம் தர அம்சங்கள் நிறைந்த ஆஃப்ரோடு எஸ்யூவி ரக காராகும்.

இந்தியாவின் ஹேட்ச்பேக் கார் பிரிவின் மிக சிறந்த விற்பனையாகும் என்கிற புகழுக்குரிய கார் மாடலே வேகன்ஆர் ஆகும். ஆனால், இந்த கார் கடந்த 2023 ஆம் ஆண்டில் மிகப் பெரிய விற்பனைச் சரிவைச் சந்தித்து இருக்கின்றது. கடந்த 2022ம் ஆண்டில் வேகன்ஆர் கார் மாடலின் விற்பனை 2,17,317 ஆக இருந்த நிலையில் அது 2023 ஆம் ஆண்டில் 7 சதவீதம் விற்பனைச் சரிவைச் சந்தித்துள்ளது.

2,01,301 யூனிட் வேகன்ஆர் கார்களே விற்பனையாகி இருக்கின்றது. இது ஒட்டுமொத்த இந்தியா வாகன உலகிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய தகவல் ஆகும். இத்தகைய சரிவை இந்த கார் மாடல் சந்தித்து இருப்பதாலும் விற்பனையை ஊக்குவிக்கும் அக்கார் மாடலின் விலையை மாருதி சுஸுகி குறைத்திருக்கின்றது என்றும் யூகிக்கப்படுகின்றது.

இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் கார் மாடல்களில் வேகன்ஆர்-ம் ஒன்றாகும். இதன் பெட்ரோல், மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ஆப்ஷன் ஒரு லிட்டருக்கு 24.35 கிலோ மீட்டர் மைலேஜையும், பெட்ரோல் - ஏஜிஎஸ் ஆப்ஷன் ஒரு லிட்டருக்கு 25.19 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்கும். அதுவே இதன் சிஎன்ஜி வெர்ஷன் இருப்பதிலேயே அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 34.05 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் மாடலின் விலையை குறைத்திருப்பதால் அதன் விற்பனை இந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிக மைலேஜ் மற்றும் விலை குறைவு என்கிற காரணத்தாலேயே இந்த கார் அதிகம் விற்பனையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, February 5, 2024, 20:00 [IST]
English summary
Maruti suzuki wagon r price slashed here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+