ஏழைகளும் இனி எஸ்யூவி கார் வாங்கலாம்! டாடா கர்வ் காரின் விலை இவ்வளவு கம்மியா?

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் டாடா நிறுவனம் தனது கர்வ் என்ற காரை காட்சிப்படுத்தியிருந்தது. இந்த கார் டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், இதில் பெட்ரோல் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகிய மூன்று பவர்டெரயின்களுடன் விற்பனைக்கு வர உள்ளது. இந்த காரின் விலை குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்நிலையில் இந்த காரின் விலை எவ்வளவு இருக்கும் என்ற விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

டாடா நிறுவனம் கர்வ் என்ற கூப்பே வடிவ எஸ்யூவி காரை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போகிறது. இதற்கான கான்செப்ட் வெர்ஷன்கள் எல்லாம் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் வரும் ஏப்ரல் மாதம் இந்த கார் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படும் என மக்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காரின் விலை என்ன இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் தோன்றுகிறது.

tata curvv Expected Price in india

இந்த கார் வரும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என நினைத்திருந்தாலும் நாம் நினைப்பது போல பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட கார் முதலில் அறிமுகமாக வாய்ப்பு குறைவாக தான் இருக்கிறது. முதலில் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட காரும் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்ட காரும் தான் அறிமுகமாக வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து பின்னர் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட கார் அறிமுகமாக அதிகமான வாய்ப்பு உள்ளன.

புதிதாக 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட கார் தற்போது நெக்ஸான் காரில் பொருத்தப்பட்டுள்ள டர்போ பெட்ரோல் இன்ஜினை விட அதிக பவர் மற்றும் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டீசல் இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

tata curvv Expected Price in india

காரை விட அதிகமான விலையிலும் ஹாரியர் காரை விட குறைவான விலையிலும் விற்பனைக்கு அறிமுகமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அப்படிப்பட்டால் நெக்ஸான் கார் தற்போது மார்க்கெட்டில் ரூபாய்11 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அதனால் கர்வ் டீசல் கார் ரூபாய்13 லட்சம் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாரியர் கார் ரூ15.4 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.

கர்வ் இவி காரை பொருத்தவரை பெரிய பேட்டரி பேக் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இது ரூபாய் 17 லட்சம் முதல் ரூ 22 லட்சம் என்ற விலையில் அறிமுகமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இருப்பதிலேயே குறைவாக பெட்ரோல் இன்ஜின் கொண்ட கார்தான் அறிமுகமாக வாய்ப்புள்ளன. இது கடைசியாக தான் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் இன்ஜின் கொண்ட டாடா கர்வ் காரை பொறுத்தவரை ரூபாய் 10 முதல் 11 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட எஸ்யூவி கார்களில் டாடா கர்வ் கார் குறைந்த விலை காராக இருக்கும் என எதிர்பார்க்கலாம். டாடா நெக்ஸான் காரை விட சற்று அதிக நீளம் கொண்ட காராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நிறுவனம் கர்வ் காரை வரும் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தி அதற்கான புக்கிங் துவங்கும் நிலையில் வரும் ஜூன் மாதம் முதல் இதன் விற்பனை துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆட்டோமொபைல் உலகில் மிகப்பெரிய அளவில் புரட்சி ஏற்படவே வாய்ப்பு உள்ளது. டாடா நிறுவனத்தின் கார் ஏகப்பட்ட மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் நிச்சயம் இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

டாடா நிறுவனம் என்றாலே பாதுகாப்பு அம்சங்களுக்கு எந்தவித குறைபாடும் இல்லாத வகையில் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமாக கருதப்படுகிறது. இதனால் டாடா கர்வ் காரும் இதேபோல எந்த விதமான பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லாமல் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற காராக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் தனது கர்வ் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த போவதாக அறிவித்தது முதல் டாடா ரசிகர்கள் பலர் இந்த காருக்காக காத்திருக்கிறார்கள். பலர் இதற்கு பிறகுதான் புதிய கார் வாங்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார்கள். இதன் மூலம் குறைந்த விலையில் இந்த கார் அதிகமானால் நிச்சயம் மார்க்கெட்டில் மிகப்பெரிய விற்பனை நடக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 7, 2024, 13:16 [IST]
English summary
Tata curvv expected price india between nexon harrier
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+