ஜப்பானுக்கு மிக பெரிய அடியை கொடுத்த சீனா! இந்தியா கிட்டையும் வாங்கியாச்சு, சீனாவிடமும் வாங்கிருச்சு!

ஜப்பானுக்கு சீனா பெருத்த அடியை வழங்கி இருக்கின்றது. யாரும் எதிர்பார்த்திராத ஓர் மிகப் பெரிய அடியாக இது அமைந்திருக்கின்றது. அப்படி எந்த விஷயத்தில் சீனா ஜப்பானுக்கு மிகப் பெரிய அடியைக் கொடுத்து இருக்கின்றது? என்பது பற்றிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

கடந்த 2023 ஆம் ஆண்டு யாருக்கு நல்ல ஆண்டாக அமைந்ததோ, இல்லையோ, வாகன உலகிற்கு மிக சிறப்பான ஆண்டாக அது அமைந்தது. வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல இதுவரை கண்டிராத மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியை சென்ற ஆண்டிலேயே பெற்றன. உதாரணமாக, இந்திய நிறுவனங்களான டாடா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களை கூறலாம்.

Worlds top vehicle exporter

மிகப் பெரிய விற்பனை வளர்ச்சியை 2023இல் இந்த நிறுவனங்கள் பெற்றதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக உலக அளவில் வாகன விற்பனையில் இந்தியாவாலும் முன்னேற முடிந்திருக்கின்றது. மூன்றாவது இடத்தையே இந்தியா உலக அளவிலான வாகன விற்பனையில் பிடித்துள்ளது. ஜப்பானை பின்னுக்கு தள்ளியே இந்த இடத்தை இந்தியா பிடித்தது.

இந்த நிலையிலேயே இந்தியாவிடம் வாங்கியதைபோலவே பெருத்த அடியை மற்றுமொரு நாட்டிடம் இதே ஆட்டோமொபைல்துறை வாயிலாக ஜப்பான் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாகன ஏற்றுமதி பிரிவிலேயே அது பெரிய அடியை வாங்கி இருக்கின்றது. உலக அளவில் வாகன ஏற்றுமதியில் கிங்காக இருந்து வந்த ஜப்பான் இந்த முறை அதில் பின் தங்கி இருக்கின்றது.

Vehicle exporter

மேலும், அரசனாக சீனா மாறி இருக்கின்றது. சமீபத்தில் ஜப்பான் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு சங்கம் அந்நாட்டின் வாகன விற்பனை மற்றும் ஏற்றுமதி பற்றிய புள்ளி விபரங்களை வெளியிட்டது. இதேபோல், சீனாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு சங்கமும் தரவுகளை வெளியிட்டது. இந்த தரவுகளின் அடிப்படையிலேயே சீனா சென்ற 2023 ஆம் ஆண்டில் அதிக அளவில் வாகனங்களை ஏற்றுமதி செய்ததும், ஜப்பானின் ஏற்றுமதி செயல்பாடு லேசாக பின்னடைவைச் சந்தித்து இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது.

சீனா அதிகபட்சமாக 4.91 மில்லியன் வாகனங்களை ஏற்றுமதி செய்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், ஜப்பான் 4.42 மில்லியன் வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருக்கின்றது. அதேவேளையில், சீனாவின் சுங்கத்துறையோ சீனாவில் இருந்து இதுவரை 5.22 மில்லியன் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன கூடுதல் புள்ளி விபரங்களை தெரிவித்து இருக்கின்றது.

China overtakes japan in vehicle exports

இது மிக மிக பெரிய எண்ணிக்கையாகும். இதன் வாயிலாக சுமார் 57 சதவீதம் வளர்ச்சியை வாகன ஏற்றுமதியில் சீனா சந்தித்து இருக்கின்றது என்பது துள்ளியமாக தெரிகின்றது. இதில் மூன்றில் ஒன்று மின்சார வாகனங்கள் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. சீனா ஏற்கனவே மாத நிலவரப்படி ஜப்பானைக் காட்டிலும் அதிக வாகனங்களை ஏற்றுமதி செய்ய தொடங்கிவிட்டது.

இதன் விளைவாகவே அதனால் இந்த முறை வாகன ஏற்றுமதி பிரிவில் அரசனாக மாற முடிந்திருக்கின்றது. உலகின் முன்னணி கார் விற்பனையாளராக டொயோட்டா (ஜப்பானை தாயகமாகக் கொண்ட நிறுவனம்) இருக்கின்றபோதிலும் ஜப்பான் பின் தங்கி இருப்பதுதான் பெருத்த அதிர்ச்சியாக அமைந்திருக்கின்றது. அதேவேளையில், சீனாவில் உலகின் பிற முன்னணி நிறுவனங்களான டெஸ்லா, பிஒய்டி ஆகியவை இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை சீனாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே ஏற்றுமதியில் சீனா முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவும் இந்த போட்டியில் முன்னணி வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான முயற்சியிலேயே இந்தியாவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மேலும், இந்தியாவின் வாகன உற்பத்தித் துறை ஊக்குவிக்கும் விதமாக தற்போது இந்தியாவில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே அடுத்த வரும் மாதங்களில் வாகன உலகின் மிகப் பெரிய மையமாக இந்தியா உருவெடுக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 1, 2024, 15:14 [IST]
English summary
China overtakes japan in vehicle exports by 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X