எம்80 விட்டு இடத்தை பிடிக்க களம் இறக்குகிறது ஹோண்டா சூப்பர் கப் 125 பைக்

இந்தியாவில் எம்80 பைக் விட்டு சென்ற இடத்தை படிக்க ஹோண்டா நிறுவனம் சூப்பர் கப் 125 என்ற பைக்கை அறிமுகப்படுத்தவுள்ளது. ஆண்கள் பெண்கள் என இருபாலரும் ஓட்டும் விதத்தில் வடிவமைக்கப்பட் இந்த பைக் உலகளவில் ந

By Balasubramanian

இந்தியாவில் எம்80 பைக் விட்டு சென்ற இடத்தை படிக்க ஹோண்டா நிறுவனம் சூப்பர் கப் 125 என்ற பைக்கை அறிமுகப்படுத்தவுள்ளது. ஆண்கள் பெண்கள் என இருபாலரும் ஓட்டும் விதத்தில் வடிவமைக்கப்பட் இந்த பைக் உலகளவில் நல்ல விற்பனையை பெற்று தற்போது இந்தியாவிற்குள் தன் ஆதித்தை செலுத்த வருகிறது.

எம்80 விட்டு இடத்தை பிடிக்க களம் இறக்குகிறது ஹோண்டா சூப்பர் கப் 125 பைக்

ஹோண்டா நிறுவனம் தனது புதிய வாகனமாக சூப்பர் கப் 125 என்ற பைக்கை அறிமுகப்படுத்த விருக்கிறது. ஹோண்டா சூப்பர் கப் குடும்பத்தில் இணையும் 125 சிசி பைக் இது.

எம்80 விட்டு இடத்தை பிடிக்க களம் இறக்குகிறது ஹோண்டா சூப்பர் கப் 125 பைக்

இந்த சூப்பர் கப் 125 பைக்கில் 125 சிசி இன்ஜின், இரண்டு வாழ்வு, 4 ஸ்டோக், சிங்கிள் சிலிண்டர், பியூயல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 7000 ஆர்பிஎம்மில் 9.5 பிஎச்பி பவரையும், 5250 ஆர்பிஎம்மில் 10.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

எம்80 விட்டு இடத்தை பிடிக்க களம் இறக்குகிறது ஹோண்டா சூப்பர் கப் 125 பைக்

இந்த சூப்பர் கப் 125 பைக் காலில் கியர் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 4 ஸ்பீடு கியர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் ஆட்டோமெட்டிக் கிளட்ச் உடன் வருகிறது.

எம்80 விட்டு இடத்தை பிடிக்க களம் இறக்குகிறது ஹோண்டா சூப்பர் கப் 125 பைக்

இந்த பைக் லிட்டருக்க 66.7 கிலோ மீட்டர் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் சிறந்த ரேஞ்சில் 3.7 லிட்டர் பெட்ரோலில் 245 கி.மீ. கடந்துள்ளது.

எம்80 விட்டு இடத்தை பிடிக்க களம் இறக்குகிறது ஹோண்டா சூப்பர் கப் 125 பைக்

இந்த பைக்கை ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் ஓட்ட வசதியான வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இன்ஜின் பெர்பாமென்ஸ், மற்றும் பைக்கின் ஹெண்டிலிங் புதிய அனுபவத்தை தரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எம்80 விட்டு இடத்தை பிடிக்க களம் இறக்குகிறது ஹோண்டா சூப்பர் கப் 125 பைக்

இந்த பைக்கின் ஹெட்லைட் முழுவதும் எல்.இடி வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளுது. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பகுதி பாதி டிஜிட்டல் மற்றும் பாதி அனலாக் என்ற முறையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதில் டிஸ்க் பிரேக் வசதியும்உள்ளது.

எம்80 விட்டு இடத்தை பிடிக்க களம் இறக்குகிறது ஹோண்டா சூப்பர் கப் 125 பைக்

இந்த பைக்கின் சீட் 780 மிமீ சீட் உயரத்துடன் வருகிறது. முக்கிய அம்சமாக இந்த பைக் கீ லெஸ் ஸ்மார்ட் கீ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளுது. இந்த பைக் ஐரோப்ப நாடுகளில் இரண்டு விதமான கலர் வேரியன்ட்களில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் விலை இது வரை அறிவிக்கப்படவில்லை

எம்80 விட்டு இடத்தை பிடிக்க களம் இறக்குகிறது ஹோண்டா சூப்பர் கப் 125 பைக்

ஹோண்டா கப் ரக பைக்குகள் நீண்ட நாட்களாக அதிக அளவில் விற்பனையாகும் ரக பைக்காக இருக்கிறது. சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் உலகளவில் 10 கோடி வாகனங்களை தயாரித்து சாதனை படைத்தது. இதற்கு இந்த கப் ர பைக்கும் முக்கிய இடம் வகிக்கிறது.

எம்80 விட்டு இடத்தை பிடிக்க களம் இறக்குகிறது ஹோண்டா சூப்பர் கப் 125 பைக்

இந்த கப் ரக பைக் ஜப்பானில் மிக பிரபலமான ரக பைக். ஜப்பானில் மட்டும் அல்லாமல் ஆசிய கண்டத்தில் பல்வேறு நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளிலும் இந்த ரக பைக் பிரபலம் தற்போது இந்த ரக பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்த அந்நிறுவனம் சூப்பர் கப், 125 அல்லது 110 சிசி பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்தது.

எம்80 விட்டு இடத்தை பிடிக்க களம் இறக்குகிறது ஹோண்டா சூப்பர் கப் 125 பைக்

இந்த பைக்கின் ஒட்டு மொத்த லுக்கை பார்க்கும் போது இந்தியாவில் ஏற்கனவ நல்ல விற்பனையில் இருந்த பஜாஜ் நிறுவனத்தின் எம்80 பைக்கை போலவே இருக்கிறது. அந்நிறுவனம் எம்80யில் 4 ஸ்டோக் என்ற பைக்கை ரிலீஸ் செய்தது. அந்த பைக் அதிக விற்பனையை எட்ட வில்லை எந்த பைக்கின் லுக்கை கிட்டத்தட்ட அப்படியே பெற்றிருக்கிறது.

எம்80 விட்டு இடத்தை பிடிக்க களம் இறக்குகிறது ஹோண்டா சூப்பர் கப் 125 பைக்

அதில் இல்லாத செமி டிஜிட்டஸ் கிளஸ்டர், டிஸ்க் பிரேக்,ஸ்மார்ட் கீ, ஆட்டோமெட்டிக் கிளட்ச், எல்.இ.டி ஹெட் லைட், அலாய் வீல், ஆகிய அம்சங்கள் இதில் இருக்கிறது.இதன் ஹேட்லைட் அமந்திருக்கும் பகுதியும் சிறிது மாற்றப்பட்டுள்ளது. பின் பக்கத்தில்உள்ள மட்கார்டு பகுதி ராயல் என்பீல்டு பைக்கில் உள்ளதை போன்ற லுக்கை தருகிறது. இந்த பைக் எப்பொழுது வெளியாகிறது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. புதிய பட்ஜெட் கார் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தும் சுஸுகி!!
  2. பெங்களூரு ரோட்டில் ஒரே நேரத்தில் சென்ற 15 லாம்போர்கினி... என்ன காரணம்?
  3. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 4 வீல் டிரைவ் மாடல் சோதனை ஓட்டம்!
  4. இந்திய ரயில்வே இப்போ வேற லெவல்! பயணிகள் நலனுக்காக பல நவீன வசதிகள் அறிமுகம்!
  5. OLX மூலம் கார் வாங்க வந்தவரிடம் ரூ.1.5 லட்சம் அபேஸ்... உஷார் மக்களே!!
Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Super Cub 125 Unveiled.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X