ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 4 வீல் டிரைவ் மாடல் சோதனை ஓட்டம்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் 4 வீல் டிரைவ் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் தகவல் ஸ்பை படங்கள் தெரிய வந்துள்ளது. படங்கள், விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 4 வீல் டிரைவ் மாடல் சோதனை ஓட்டம்!

சந்தைப் போட்டியால் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் விசேஷ அம்சங்களுடன் புதிய வேரியண்ட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில், ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலும் வர இருப்பது தெரிய வந்துள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 4 வீல் டிரைவ் மாடல் சோதனை ஓட்டம்!

4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி பாண்டிச்சேரியில் சோதனை செய்யப்பட்டுள்ளது. நடுத்தர வசதிகள் கொண்ட எஸ்இ வேரியண்ட் மாடல்தான் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 4 வீல் டிரைவ் மாடல் சோதனை ஓட்டம்!

4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவிலும் இந்த் புதிய மாடலை களமிறக்க ஃபோர்டு முடிவு செய்துள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 4 வீல் டிரைவ் மாடல் சோதனை ஓட்டம்!

வெளிநாடுகளுக்கு செல்லும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் 4 வீல் டிரைவ் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 163 பிஎச்பி பவரையும், 202 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 4 வீல் டிரைவ் மாடல் சோதனை ஓட்டம்!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 2 வீல் டிரைவ் மாடலில் பின்கதவில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டு இருக்கும். ஆனால், சோதனை ஓட்டத்தில் இருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் பின்புற கதவில் ஸ்பேர் வீல் இல்லை. அதற்கு பதிலாக நம்பர் பிளேட் இடம்பெற்றுள்ளது. 4 வீல் டிரைவ் சிஸ்டத்திற்கான பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 4 வீல் டிரைவ் மாடல் சோதனை ஓட்டம்!

தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் புதிய 1.5 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் ்ல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 4 வீல் டிரைவ் மாடல் சோதனை ஓட்டம்!

டீசல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 98.6 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்தியாவில் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் மாடல் விற்பனையில் இருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 4 வீல் டிரைவ் மாடல் சோதனை ஓட்டம்!

தற்போது 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக இருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களில் 4 வீல் டிரைவ் மாடல் இல்லை. எனவே, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 4 வீல் டிரைவ் மாடல் வந்தால், போட்டியாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
The Ford EcoSport has been one of the best-selling compact SUVs in the Indian market. The facelifted EcoSport was introduced recently with styling updates. Now, IAB has spotted the Ford EcoSport four-wheel-drive variant being tested on Indian roads.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X