இந்திய ரயில்வே இப்போ வேற லெவல்! பயணிகள் நலனுக்காக பல நவீன வசதிகள் அறிமுகம்!

இந்திய ரயில்களில் பயணிப்பது சவாலான விஷயம்தான். ஆனால் இந்திய ரயில்வேயின் சேவை தரம் சமீப காலமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பல நவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

By Arun

இந்திய ரயில்களில் பயணிப்பது என்பதே சவாலான விஷயம்தான். ஆனால் இந்திய ரயில்வேயின் சேவை தரம் சமீப காலமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பல நவீன வசதிகள் மற்றும் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

இந்திய ரயில்வே இப்போ வேற லெவல்... பயணிகள் நலனுக்காக பல நவீன வசதிகள் அறிமுகம்!

இந்திய ரயில்வே மிகப்பெரியது. இந்திய ரயில்வேயில் ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர். ஒரு ஆண்டுக்கு இந்திய ரயில்வே 35 கோடி டன் சரக்குகளை கையாள்கிறது. 16 லட்சம் பணியாளர்கள் இந்திய ரயில்வேயில் பயணம் செய்கின்றனர்.

இந்திய ரயில்வே இப்போ வேற லெவல்... பயணிகள் நலனுக்காக பல நவீன வசதிகள் அறிமுகம்!

ஆனால் இந்திய ரயில்களில் பயணிக்கும் பயணிகள் சந்திக்கும் இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ரயில்கள் தாமதம், கழிவறை மோசம் என புகார்களை அடுக்கி கொண்டே செல்லலாம். இதை எல்லாம் சகித்து கொள்ளாமல் புகார் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.

இந்திய ரயில்வே இப்போ வேற லெவல்... பயணிகள் நலனுக்காக பல நவீன வசதிகள் அறிமுகம்!

எனினும் சமீப காலமாக இந்திய ரயில்வே முன்னேற்றம் கண்டு வருகிறது என்றே சொல்லலாம். ஆம், அதன் சேவை தரம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த 4 ஆண்டு கால அளவில், இந்திய ரயில்வேயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சேவைகள் குறித்து இனி பார்க்கலாம்.

இந்திய ரயில்வே இப்போ வேற லெவல்... பயணிகள் நலனுக்காக பல நவீன வசதிகள் அறிமுகம்!

இலவச வைபை

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் இலவச வைபை வசதி வழங்குவதற்காகவும், கூகுள் நிறுவனத்துடன் கடந்த 2016ம் ஆண்டில், ரயில்வே துறை கைகோர்த்தது.

இந்திய ரயில்வே இப்போ வேற லெவல்... பயணிகள் நலனுக்காக பல நவீன வசதிகள் அறிமுகம்!

நாடு முழுவதும் உள்ள சுமார் 700 ரயில்வே ஸ்டேஷன்களில் இன்று இலவச வைபை வசதி வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒரு மாதத்திற்கு சுமார் 80 லட்சம் பயணிகள் பயனடைந்து வருகின்றனர். பயணிகள் சுமார் 30 நிமிடங்கள் இலவச வைபை-யை பயன்படுத்தி கொள்ள முடியும்.

இந்திய ரயில்வே இப்போ வேற லெவல்... பயணிகள் நலனுக்காக பல நவீன வசதிகள் அறிமுகம்!

பயோ டாய்லெட்

ரயில் பெட்டிகளில் வழக்கமான டாய்லெட்களுக்கு பதிலாக பயோ டாய்லெட்களை ரயில்வே மாற்றி வருகிறது. கடந்த மார்ச் மாதம் வரை மட்டும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயோ டாய்லெட்கள் ரயில் பெட்டிகளில் நிறுவப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வே இப்போ வேற லெவல்... பயணிகள் நலனுக்காக பல நவீன வசதிகள் அறிமுகம்!

ரயில் டாய்லெட்டிற்கு கீழே பொருத்தப்பட்டுள்ள பெட்டிக்கு மலம் சென்று விடுவதால், ரயில்வே டிராக்குகளில் அவை கொட்டப்படுவது இல்லை. இதன்மூலமாக ரயில்வே டிராக்குகளையும் சுத்தமாக பராமரிக்க முடிகிறது. இதுதவிர விரைவில் அழுக்காவதை தவிர்க்க டாய்லெட்களின் ப்ளோரையும் ரயில்வே மாற்றி வருகிறது.

இந்திய ரயில்வே இப்போ வேற லெவல்... பயணிகள் நலனுக்காக பல நவீன வசதிகள் அறிமுகம்!

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

குறைவான விலையில் சுத்திகரிப்பட்ட குடிநீரை பயணிகளுக்கு வழங்குவதற்காக, 345 ரயில்வே ஸ்டேஷன்களில், 1,100 குடிநீர் ஏடிஎம்-களை ரயில்வே நிறுவியுள்ளது. இந்த குடிநீர் ஏடிஎம்-களில் ஒரு லிட்டர் குடிநீரை ரூ.5க்கு பெற முடியும். இதுதவிர பேப்பர் கப்புக்காக 1 ரூபாய் வழங்க வேண்டும்.

இந்திய ரயில்வே இப்போ வேற லெவல்... பயணிகள் நலனுக்காக பல நவீன வசதிகள் அறிமுகம்!

வெயிட்டிங் லிஸ்ட்?

கடந்த 2016ம் ஆண்டில் விகால்ப் என்ற திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்தது. வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் பயணிகள், அதே பாதையில் செல்லும் மற்ற ரயில்களில், டிக்கெட்டை கன்பார்ம் செய்து கொள்ள உதவியாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய ரயில்வே இப்போ வேற லெவல்... பயணிகள் நலனுக்காக பல நவீன வசதிகள் அறிமுகம்!

அனைத்து வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளுக்கும் விகால்ப்ட் திட்டம் பொருந்தும். விகால்ப் திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக 7 ரயில்களை பயணிகளால் தேர்வு செய்து கொள்ள முடியும். இந்த திட்டம் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்திய ரயில்வே இப்போ வேற லெவல்... பயணிகள் நலனுக்காக பல நவீன வசதிகள் அறிமுகம்!

ஆக்ஸன் எடுப்பதை உறுதி செய்யலாம்

ஐவிஆர்எஸ் மற்றும் சமூக வலைதளங்களான டிவிட்டர் மற்றும் பேஸ்புக் மூலமாக ரயில்வே புகார்களை ஏற்றுக்கொள்கிறது. இதுதவிர பயணிகள் தங்களின் புகார்களை பதிவு செய்ய, 'மடாட்' என்ற மொபைல் அப்ளிகேஷனையும் ரயில்வே லான்ச் செய்துள்ளது.

இந்திய ரயில்வே இப்போ வேற லெவல்... பயணிகள் நலனுக்காக பல நவீன வசதிகள் அறிமுகம்!

இந்த 'மடாட்' ஆப் மூலமாக பல்வேறு பயன்கள் உள்ளன. ஒருவேளை நீங்கள் ஏதேனும் புகார் தெரிவித்தால், அந்த புகாரின் மீது என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை, 'மடாட்' ஆப் மூலம் உங்களால் லைவ்-ஆக டிராக் செய்ய முடியும்.

இந்திய ரயில்வே இப்போ வேற லெவல்... பயணிகள் நலனுக்காக பல நவீன வசதிகள் அறிமுகம்!

போர்வைகள் துர்நாற்றம் வீசியது அந்த காலம்

ரயில்களில் வழங்கப்படும் போர்வைகள் மிகுந்த துர்நாற்றம் வீசும். இதுகுறித்து ரயில்வே துறைக்கு பல முறை புகார்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு நைலான் போர்வைகளை வழங்க ரயில்வே முடிவு செய்தது.

இந்திய ரயில்வே இப்போ வேற லெவல்... பயணிகள் நலனுக்காக பல நவீன வசதிகள் அறிமுகம்!

இந்த போர்வைகள் மாதத்திற்கு இரண்டு முறை துவைக்கப்படும். முன்பெல்லாம் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே அவை துவைக்கப்பட்ட வந்தன. துவைப்பதை தவிர, வழக்கமான அடிப்படையில் அவை அடிக்கடி சுத்தம் செய்யப்படுகின்றன.

இந்திய ரயில்வே இப்போ வேற லெவல்... பயணிகள் நலனுக்காக பல நவீன வசதிகள் அறிமுகம்!

ரீடிங் விளக்குகள்

இது சிறிய முயற்சிதான் என்றாலும் கூட, பயணிகளுக்கு இடையேயான வாக்குவாதத்தை குறைக்கும். புதிய ரயில் பெட்டிகளில் பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதில், ரீடிங் விளக்குகள் குறிப்பிடத்தக்க வசதியாக உள்ளது.

இந்திய ரயில்வே இப்போ வேற லெவல்... பயணிகள் நலனுக்காக பல நவீன வசதிகள் அறிமுகம்!

இதன்படி ஒவ்வொரு பெர்த்திலும் ரீடிங் விளக்குகள் பொருத்தப்படுகின்றன. இதை பயன்படுத்தி மற்ற பயணிகளுக்கு தொந்தரவு தராமல் புத்தகங்களை வாசிக்க முடியும். ஹம்சபர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் ரீடிங் விளக்கு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே இப்போ வேற லெவல்... பயணிகள் நலனுக்காக பல நவீன வசதிகள் அறிமுகம்!

பன்ச்சுவாலிட்டி முக்கியம்

சரியான நேரத்திற்கு ரயில்கள் வருவதில்லை என்பதுதான் ரயில்வே துறையின் மீது இருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டுக்களில் ஒன்று. அதுவும் கடந்த 3 ஆண்டுகளில், குறித்த நேரத்துக்கு ரயில்கள் வருகை மிக மோசமான நிலையில் இருந்ததாக அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்திய ரயில்வே இப்போ வேற லெவல்... பயணிகள் நலனுக்காக பல நவீன வசதிகள் அறிமுகம்!

இந்த பிரச்னையை ஓரளவுக்கு களைய ரயில்வே முயன்று வருகிறது. அதாவது ரயில்கள் தாமதமாக வந்தால் அதை பயணிகளுக்கு மெசேஜ் மூலமாக தெரிவிக்கும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில் வருமா? வராதா? என வழி மேல் விழி வைத்து, பிளாட்பார்மில் காத்திருக்க வேண்டியதில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here's a list of services introduced during the last four years in indian railways. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X