புதிய பட்ஜெட் கார் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தும் சுஸுகி!!
நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்களுடன் புதிய பட்ஜெட் ரக கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 2ந் தேதி துவங்க இருக்கும் 2018 கெய்கின்டோ இந்தோனேஷியா சர்வதேச ஆட்டோ எக்ஸ
நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்களுடன் புதிய பட்ஜெட் ரக கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. சுஸுகி நிறுவனம். அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வரும் ஆகஸ்ட் மாதம் 2ந் தேதி துவங்க இருக்கும் 2018 கெய்கின்டோ இந்தோனேஷியா சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கான்செப்ட் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய கார் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு இந்தோனேஷியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

சுஸுகி நிறுவனத்தின் புதிய பிராண்டில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும், இந்தோனேஷிய மார்க்கெட்டிற்கு தக்க அம்சங்களுடன் வடிவமைப்பு மற்றும் வசதிகளை பெற்றிருக்கும். இது இந்தோனேஷிய மார்க்கெட்டுக்கு மட்டுமான மாடலாக சுஸுகி அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த புதிய கான்செப்ட் மாடலின் அடிப்படையில், புதிய குட்டி கார் மாருதி பிராண்டில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது. விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு இணையான ரகத்தில் இந்த புதிய கார் மாடல் இருக்கும்.

இளைய சமுதாய வாடிக்கையாளர்களை கவரும் டிசைன் அம்சங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் இந்த கார் பெற்றிருக்கும். 35 வயது வரை உடைய வாடிக்கையாளர் வட்டத்தை குறிவைத்து களமிறக்கப்பட இருப்பதாகவும் சுஸுகி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தோனேஷியாவுக்கான புதிய கார் பிராண்டு மற்றும் அதில் வெளிவர இருக்கும் இந்த புதிய கார் மாடல் குறித்த அதிக விபரங்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாருதி சுஸுகி நிறுவனம் தனது சந்தையை வலுப்படுத்திக் கொள்ளும் விதத்தில், இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கான்செப்ட் கார் அடிப்படையில், புதிய சிறிய ரக காரை அறிமுகப்படுத்தும் வாய்ப்பும் இருப்பதாகவே கருதலாம்.


Click it and Unblock the Notifications








