மாற்றங்களுடன் அடுத்த மாதம் வெளியாகிறது ஹோண்டா நவி; விற்பனையில் கலக்குமா?

ஹோண்டா நவி பைக் சில அப்டேட்களை பெற்று அடுத்த மாதம் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கடும் மந்த விற்பனையில் உள்ள இந்த பைக் அப்டேட் வெர்ஷன் மூலம் விற்பனையை சூடுபிடிக்க வைக்க அந்

By Balasubramanian

ஹோண்டா நவி பைக் சில அப்டேட்களை பெற்று அடுத்த மாதம் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கடும் மந்த விற்பனையில் உள்ள இந்த பைக் அப்டேட் வெர்ஷன் மூலம் விற்பனையை சூடுபிடிக்க வைக்க அந்நிறுவனம் முயற்சி செய்து வருவதாக தெரிகிறது.

மாற்றங்களுடன் அடுத்த மாதம் வெளியாகிறது ஹோண்டா நவி; விற்பனையில் கலக்குமா?

ஹோண்டா தயாரிப்பில் மிக மோசமாக விற்பனையாகி வரும் பைக் நவி தான். இந்த பைக் விற்பனைக்கு வரும் போது இதன் லுக் வித்தியாசமாக இருப்பதால் பலர் இந்த பைக் நல்ல விற்பனை பெறும், குறிப்பாக ஆண்கள் மற்றும் இளம் வயது இளைஞர்கள் இந்த பைக்கை அதிகமாக விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

மாற்றங்களுடன் அடுத்த மாதம் வெளியாகிறது ஹோண்டா நவி; விற்பனையில் கலக்குமா?

ஆனால் இந்த பைக் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்த பைக் பார்க்க சாதாரண பைக் போல இருந்தாலும் அதன் உயரம் மிக குறைவாக இருந்தது. இதனாலேயே பலர் இதை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

மாற்றங்களுடன் அடுத்த மாதம் வெளியாகிறது ஹோண்டா நவி; விற்பனையில் கலக்குமா?

மேலும் ஸ்கூட்டர் ரக பைக்காக இருக்கிறது. ஸ்கூட்டரை பொருத்தவரை அதன் பிளஸ் பாயிண்டே பைக்கிற்கு முன் கால் வைக்கும் இடத்தில் நாம் பொருட்களை வைத்து எடுத்து செல்ல முடியும் என்பதுதான். இதில் அதற்கும் சாத்தியம் இல்லாமல் போனது. அதனால் அந்நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு இந்த பைக் போனியாவில்லை.

மாற்றங்களுடன் அடுத்த மாதம் வெளியாகிறது ஹோண்டா நவி; விற்பனையில் கலக்குமா?

இதற்கிடையில் அந்த பைக்கின் விற்பனையை ஹோண்டா நிறுவனம் நிறுத்தப்போவதாக கூட வதந்திகள் கிளம்பின. ஆனால் அதற்கு பதில் அளித்த ஹோண்டா நிறுவனம் அவ்வாறு எந்த எண்ணமும் எங்களிடம் இல்லை. வரும் காலத்தை இந்த பைக்கின் விற்பனையை அதிகரிக்க வைப்போம் என கூறினர்.

மாற்றங்களுடன் அடுத்த மாதம் வெளியாகிறது ஹோண்டா நவி; விற்பனையில் கலக்குமா?

இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் தற்போது நவி பைக்கின் அப்டேட்டன் வெர்ஷனை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. அது வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

மாற்றங்களுடன் அடுத்த மாதம் வெளியாகிறது ஹோண்டா நவி; விற்பனையில் கலக்குமா?

புதிதாக மாற்றம் பெறும் நவி பைக்கில் புதிய அம்சங்களாக சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. சிறந்த ஓட்டும் அனுபவத்திற்காக சில பாகங்களும் இணைக்கப்படவுள்ளன.

மாற்றங்களுடன் அடுத்த மாதம் வெளியாகிறது ஹோண்டா நவி; விற்பனையில் கலக்குமா?

இந்த பைக் கடந்த 2016 ஆட்டோ எக்ஸ்போவில் முதன் முறையாக அறிமுகமானது. ஸ்கூட்டர் மற்றும் பைக்கின் இரண்டு தன்மைகளையும் இணைத்து இந்த பைக் தயாரிக்கப்பட்டிருந்தது. அறிமுகமான புதிதில்இது நல்ல விற்பனையை பெற்றாலும் தொடர்ந்து விற்பனையை தக்க வைக்க முடியவில்லை.

மாற்றங்களுடன் அடுத்த மாதம் வெளியாகிறது ஹோண்டா நவி; விற்பனையில் கலக்குமா?

புதிதாக மாற்றம் பெரும் நவி பைக்கில் பெட்ரோல் டேங்க், டிஜிட்டல் மற்றும் அனலாக் யூனிட் உடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதிய பெயிண்ட்கள், கிராபிக்ஸ்கள், முக்கிய குறையாக கருதப்பட்ட லக்கேஜ் ஏற்று செல்லும் வசதி என பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாற்றங்களுடன் அடுத்த மாதம் வெளியாகிறது ஹோண்டா நவி; விற்பனையில் கலக்குமா?

தற்போது வெளியாகி வரும் ஹோண்டா நவி பைக் 110 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆக்டிவா பைக்கில் உள்ள அதே இன்ஜின் தான் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது 8 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தம். இதன் டேங்க் கொள்ளளவு 3.8 லிட்டர் தான். ஆனால் இந்த பைக் லிட்டருக்கு 60 கி.மீ. வரை மைலேஜ் கிடைக்கும்.

மாற்றங்களுடன் அடுத்த மாதம் வெளியாகிறது ஹோண்டா நவி; விற்பனையில் கலக்குமா?

தற்போது இந்த பைக் ஸ்டிரீட், அட்வெஞ்சர் மற்றும் ஆஃப் ரோடு, ஆகிய 3 விதமான வேரியன்ட்களில் கிடைக்கிறது. மேலும் சிவப்பு, பச்ைச, வெள்ளை, காவி, மற்றும் கருப்பு கலரில் இந்த பைக்குகள் விற்பனையாகின்றன.

மாற்றங்களுடன் அடுத்த மாதம் வெளியாகிறது ஹோண்டா நவி; விற்பனையில் கலக்குமா?

இந்த பைக் அடுத்த மாதமே விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பைக்கின் லுக் குறித்துஎந்த படங்களும் வெளியாகவில்லை. அதை ரகசியமாக வைத்து மக்களுக்கு சர்பிரைஸ் ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர். மேலும் இதன் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் தற்போது விற்பனையாகும் பைக்கில் இருந்து சற்று அதிக விலைக்க விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் அறிமுக தேதி விபரம் வெளியானது!
  2. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு வல்லுனர் 'சுமோ' பற்றிய சுவாரஸ்ய கதை!!
  3. ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள பைக்குகள் இது தான்
  4. இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...
  5. இந்தியாவில் ரூ 8000 கோடி முதலீடு செய்ய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முடிவு

More from DriveSpark

Article Published On: Tuesday, July 3, 2018, 13:24 [IST]
English summary
Honda Is Working On An Updated Version Of The Navi — Launch Details Revealed.Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+