ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள பைக்குகள் இது தான்

ஜூலை மாதம் இந்தியாவில் வெளியாகவுள்ள டூவீலர்கள் குறித்த பட்டியலை இங்கே பட்டியலிட்டுள்ளோம். நீங்கள் பைக்குகள் வாங்குவதாக இருந்தால் இருந்தால் இந்த செய்தியை முழுமையாக படித்து பாருங்கள் உங்களுக்கு தேவையாக

By Balasubramanian

ஜூலை மாதம் இந்தியாவில் வெளியாகவுள்ள டூவீலர்கள் குறித்த பட்டியலை இங்கே பட்டியலிட்டுள்ளோம். நீங்கள் பைக்குகள் வாங்குவதாக இருந்தால் இருந்தால் இந்த செய்தியை முழுமையாக படித்து பாருங்கள் உங்களுக்கு தேவையாக நிறைய தகவல்கள் அடங்கியுள்ளது.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள பைக்குகள் இது தான்

2018-2019ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான துவக்கமும், 2018ம் ஆண்டிற்கான இரண்டாம் பாதியும் இந்த ஜூலை மாதம் முதல் துவங்கியது. இந்தியாவில் பொதுவாக ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிகமான பண்டிகை நாட்கள் வரும்.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள பைக்குகள் இது தான்

இதை கணக்கில் கொண்டு இரண்டாம் காலாண்டு காலத்தில் புதிய வாகன அறிமுகங்கள் நடக்கும். பண்டிகை காலங்களில் மக்கள் மத்தியில் வாங்கும் திறன்அதிகரிப்பதால் அதை பயன் படுத்தி கொள்ள அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் முனைப்பு காட்டும், அந்த வகையில் இந்த ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள பைக்குகளின் பட்டியலை இங்கு காணலாம்.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள பைக்குகள் இது தான்

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்

இந்த பைக் 2015ம் ஆண்டே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத கால தாமதம் காரணமாக, பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் நிறுவனம் இணைந்து உருவாக்கிய இந்த பைக் முன் முதன் முறையாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போ 2018ல் காட்சி படுத்தப்பட்டது.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள பைக்குகள் இது தான்

ஓசூரில் உள்ள டிவிஎஸ் வாகன தயாரிப்பு நிறுவனத்தில் இந்த பைக் தயார் செய்யப்பட்டது. இந்த பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் ஸ்டிரீட் பைட்டர் பைக் 313 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின், ரிவர்ஸ் சிலிண்டர் லே அவுட் உடன் விற்பனைக்கு வருகிறது.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள பைக்குகள் இது தான்

இந்த பைக் 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதின் முன் பக்க சஸ்பென்ஸனிற்காக டெலஸ்கோபிக் ஃபோக்ஸ், மற்றும் பின் பக்க சஸ்பென்ஸனிற்காக மோனோஷாக் சஸ்பென்ஷன்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள பைக்குகள் இது தான்

மேலும் இந்த பிஎம்டபிள்யூ பைக் ஏபிஎஸ் வசதியுடன் வருகிறது. இந்த பைக் வரும் 18ம் தேதி அறிமுகமாகிறது. இந்த பைக் நேரடியாக கேடிஎம் 390 டியூக், பெனில்லி டிஎன்டி 300 ஆகிய பைக்களுடன் நேரடியாக போட்டியிடுகிறது. இந்த பைக்கின் விலை ரூ 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை அறிவிக்கப்படலாம்.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள பைக்குகள் இது தான்

பிஎம்டபிள்யூ310 ஜிஎஸ்

பஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கின் காலதாமத்திற்கு இடையில் அந்நிறுவனம் பிஎம்டபிள்யது 310 ஜிஎஸ் பைக்கையும் தயாரித்து விட்டது. ஜி310 ஆர் பைக் ஸ்டிரீட் பைட்டர் என்றால் 310 ஜிஎஸ் பைக் டூரிங் பைக்காக செயல்படும்.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள பைக்குகள் இது தான்

இந்த பைக் 313 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உடன் வருகிறது. இந்த பைக் ஆப் ரோடில் சிறப்பாக செயல்படும் இதற்காக அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், நீண்ட சஸ்பென்ஸன் டிராவல், ஆகிய வசதிகள் இந்த பைக்கில் இருக்கிறது.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள பைக்குகள் இது தான்

இந்த பைக் நேரடியாக ராயல் என்பீல்டு ஹிமாலயன், கவாஸகி வெர்சிஸ் எக்ஸ்-300 மற்றும் விரைவில் வரவுள்ள கேடிஎம் 390 அட்வெஞ்சர் ஆகிய பைக்குகளுக்கு நேரடிய போட்டியாக திகழ்கிறது. வரும் ஜூலை 18ம் தேதி விற்பனைக்கு வரவுள்ள இந்த பைக்கின் விலை ரூ 3-3.5 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள பைக்குகள் இது தான்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர்

ஹீரோ மோட்டோ கார்ப் பிரிமியம் கம்முட்டர் செக்மெண்டில் இந்த எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மூலம் ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறது. இந்த பைக் 200 சிசி, ஏர் கூலண்டு, 2 வால்வு இன்ஜின் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த இன்ஜின் 18.1 பிஎச்பி பவர் மற்றும் 17.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள பைக்குகள் இது தான்

இந்த ரக பைக்குகளில் இருக்கும் அளவிற்கு இதில் பவர் இல்லை என்றாலும், சிங்கிள் சேனல் ஏபிஎஸ், அப்ரைட் ரைடிங் போஷிஷன், எல்இடி டெயில் லைட், 8 ஸ்டெப் அட்ஜெட்டபிள் மேனோ ஷாக் ஆகிய வசதிகள் இந்த பைக்கில் உள்ளது.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள பைக்குகள் இது தான்

இந்த பைக் நேரடியாக பஜாஜ் பல்சர் என்எஸ் 200, அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி, சுஸூகி ஜிக்ஸர், ஹோண்டா சிபி ஹார்னட் 160 ஆர் ஆகிய பைக்குகளுடன் நேரடியாக போட்டியிடுகிறது. இந்த பைக்கின் அறிமுக தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் இந்த மாதம் அறிமுகமாகிவிடும் என பேசப்படுகிறது. இந்த பைக்கின் விலை ரூ 85 ஆயிரம்-90 ஆயிரம் வரை இருக்கலாம்.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள பைக்குகள் இது தான்

சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட் 125

125 சிசி செக்மென்டில் இந்தாண்டு நிறைய பைக்குகள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா, அப்ரில்லா, டிவிஎஸ் ஆகிய நிறுவனங்கள் பைக்குகளை ரிலீஸ் செய்து விட்ட நிலையில் சுஸூகி நிறுவனம் பர்க்மேன் ஸ்டிரீட் 125 என்ற பைக்கை கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போ வில் அறிமுகப்படுத்தியது. இதை இந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள பைக்குகள் இது தான்

இந்த ஸ்கூட்டரில் 125 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது சுஸூகி ஆக்ஸஸ் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள அதே இன்ஜின் தான் இதிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின முன்பக்கம் பெரிய கவர் பகுதி, உயரமான விண்ட் ஸ்க்ரீன், அலாய் வீல் உள்ளிட்ட வசதிகள் இதில் இருக்கிறது.

ஜூலை மாதம் விற்பனைக்கு வரவுள்ள பைக்குகள் இது தான்

மேலும் இந்த பைக்கில் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ஸ் கண்சோல், புதிய எக்ஸாட் மஃப்லர் டிசைன், எல்இடி ஹெட்லைட், 12 வி சார்ஜிங் சாக்கெட், டியூப்லெஸ் டயர், முன்பக்க வீலில் டிஸ்க் பிரேக், ஆகிய வசதிகள் இருக்கிறது. இந்த ஸ்கூட்டர், டிவிஎஸ் என்டார்க், ஹோண்டா க்ரெஸியா, அப்ரில்லா எஸ்ஆரு்125ஆகிய ஸ்கூட்டர்களுடன் நேரடியாக போட்டியிடுகிறது. இந்த பைக்கின் அறிமக தேதி வெளியாகவில்லை. இதை விலை ரூ 65 ஆயிரம் வரை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Upcoming Two-Wheeler Launches In July, 2018.Read in Tamil
Story first published: Tuesday, July 3, 2018, 11:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X