டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு வல்லுனர் 'சுமோ' பற்றிய சுவாரஸ்ய கதை!!

இந்தியாவின் மாபெரும் வாகன உற்பத்தி குழுமமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியில் பல்வேறு அதிகாரிகள் பணியாற்றி இருக்கின்றனர். ஆனால், அந்த நிறுவனத்தை கட்டமைத்து கொடுத்தவர் என்ற பெருமைக்க

இந்தியாவின் மாபெரும் வாகன உற்பத்தி குழுமமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியில் பல்வேறு அதிகாரிகள் பணியாற்றி இருக்கின்றனர். ஆனால், அந்த நிறுவனத்தை கட்டமைத்து கொடுத்தவர் என்ற பெருமைக்குரியவர், அந்நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சுமந்த் மூல்கவ்கர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு வல்லுனர் 'சுமோ' பற்றிய சுவாரஸ்ய கதை!!

சுமந்த் மூல்கவ்கரின் நினைவை டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து போற்றி வருகிறது. அவர் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு எடுத்துக் கொண்ட வித்தியாசமான முயற்சி குறித்து சுவாரஸ்யமான தகவலை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு வல்லுனர் 'சுமோ' பற்றிய சுவாரஸ்ய கதை!!

டாடா மோட்டார்ஸ் அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் அனைவரும் மதிய உணவின்போது ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். இதில், சுமந்த் மூல்கவ்கரும் உயரதிகாரிகளுடன் ஒன்றாக சேர்ந்து மதிய உணவு சாப்பிடுவார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு வல்லுனர் 'சுமோ' பற்றிய சுவாரஸ்ய கதை!!

ஆனால், சில நாட்கள் மட்டும் அவர் தனது காரை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று சாப்பிட சென்றுவிடுவார். பின்னர், உணவு இடைவேளை முடியும் நேரத்திற்கு சரியாக அலுவலகத்திற்கு வந்துவிடுவார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு வல்லுனர் 'சுமோ' பற்றிய சுவாரஸ்ய கதை!!

இது உடன் இருந்த மற்ற அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. டாடா டீலர்கள் சிலர்தான் அவருக்கு 5 நட்சத்திர ஓட்டலில் மதிய உணவு விருந்து கொடுப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. இது அலுவலகம் முழுவதும் தெரிந்த ரகசியமாக மாறியது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு வல்லுனர் 'சுமோ' பற்றிய சுவாரஸ்ய கதை!!

இந்த நிலையில், சுமந்த் மூல்கவ்கர் அவ்வப்போது மதிய உணவு இடைவேளையின்போது வெளியில் செல்வது சிலருக்கு மண்டை காய்ச்சலை ஏற்படுத்தியது. இதற்கு முடிவுக்கு கொண்டு வரும் விதத்தில், அவர் ஒருநாள் மதிய உணவு இடைவேளையின்போது வெளியில் கிளம்பியபோது உடன் இருந்த சில அதிகாரிகள் ரகசியமாக பின்தொடர்ந்து சென்றனர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு வல்லுனர் 'சுமோ' பற்றிய சுவாரஸ்ய கதை!!

சுமந்த் மூல்கவ்கரின் கார் நெடுஞ்சாலை ஓரம் இருந்த தாபா ஓட்டலில் போய் நின்றது. இது பின்தொடர்ந்து சென்றவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை தந்தது. ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் எதற்கு சாலையோரத்தில் இருக்கும் சிறிய தாபாவில் நிறுத்துகிறார் என்று குழம்பி போயினர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு வல்லுனர் 'சுமோ' பற்றிய சுவாரஸ்ய கதை!!

பின்னர், அந்த தாபாவில் மதிய உணவை ஆர்டர் செய்து பெற்றுக் கொண்டு அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த டாடா டிரக் ஓட்டுனர்களுடன் அமர்ந்து சாப்பிட்டதுடன், அவர்களை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார். டாடா டிரக்குகளில் உள்ள நிறைகள், குறைகள் குறித்து அவர் வினவியுள்ளார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு வல்லுனர் 'சுமோ' பற்றிய சுவாரஸ்ய கதை!!

இதனை பார்த்த பின்தொடர்ந்து சென்ற அதிகாரிகள் அவரது எண்ணத்தை புரிந்து கொண்டனர். ஓட்டுனர்கள் சொல்லும் கருத்துக்களின் அடிப்படையில் டாடா டிரக்குகளை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார். இதனால், டாடா டிரக்குகள் தொழில்நுட்பத்தில் உலகத் தரத்திற்கு மேம்பட உதவியதுடன், ஓட்டுனர்களுக்கான வாகனமாக வெகு விரைவில் மாறியது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு வல்லுனர் 'சுமோ' பற்றிய சுவாரஸ்ய கதை!!

1972 முதல் 1988 வரை சுமந்த் மூல்கவ்கர் தலைவராக இருந்த சமயத்தில், டாடா மோட்டார்ஸ் நல்ல வளர்ச்சியை பெற்றது. முன்னணி தொழிலதிபராகவும் இருந்த சுமந்த் மூல்கவ்கர் டாடா மோட்டார்ஸ் வளர்ச்சியில் மறக்க முடியாத நபர். இன்று வர்த்தக வாகன தயாரிப்பில் இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் டாடா மோட்டார்ஸ் முன்னணியில் இருப்பதற்கு அடித்தளமிட்டவர் சுமந்த் மூல்கவ்கர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு வல்லுனர் 'சுமோ' பற்றிய சுவாரஸ்ய கதை!!

அவரது நினைவாகவே, அவரது பெயரின் ஆங்கில முதல் எழுத்துக்களை சேர்த்து டாடா சுமோ [Sumant Moolgaokar(Su-Mo)] எஸ்யூவிக்கு பெயர் சூட்டி கவுரப்படுத்தியது டாடா மோட்டார்ஸ். 1994ல் வெளியிடப்பட்ட டாடா சுமோவுக்கு கிடைத்த வரவேற்பை நீங்கள் அறிந்ததே.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு வல்லுனர் 'சுமோ' பற்றிய சுவாரஸ்ய கதை!!

கிட்டத்தட்ட 4 தசாப்தங்கள் வரை டாடா மோட்டார்ஸ் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தவர். நிறுவனத்தின் வளர்ச்சியோடு நின்றிராமல், சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தார். ஜாம்ஷெட்பூர் ஆலையிலும், பணியாளர் குடியிருப்புகளிலும் மரக்கன்றுகளை நட்டு இயற்கையை காக்க அப்போதே முயற்சி எடுத்தவர். அங்குள்ள ஹட்கோ ஏரியின் பூங்காவிற்கும் அவரது பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு வல்லுனர் 'சுமோ' பற்றிய சுவாரஸ்ய கதை!!

ஒவ்வொரு ஆண்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுமந்த் மூல்கவ்கரை நினைவு கூற தவறுவதில்லை. இதற்காக, விசேஷ நிகழ்ச்சிகளை டாடா மோட்டார்ஸ் நடத்தி மரியாதை செய்து வருகிறது. மேலும், பத்மபூஷன் விருது பெற்றவர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு வல்லுனர் 'சுமோ' பற்றிய சுவாரஸ்ய கதை!!

சுமந்த் மூல்கவ்கரின் மனைவி லீலா சமூக ஆர்வலராக இருந்தவர். இந்தியாவில் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சீரிய முயற்சிகளை மேற்கொண்டவர். இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Image Source:1,13

இன்றைய ஸ்பெஷல்... போர்ஷே பற்றி அறிந்திராத சுவாரஸ்யங்கள்!

1.போர்ஷே லோகோ

ஸ்டட்கர்ட் பகுதியில் குதிரை வளப்புப் பண்ணையாக இருந்த இடத்தில்தான் போர்ஷே கார் நிறுவனம் அமைக்கப்பட்டது. அதனை நினைவூட்டும் வையில், குதிரை உருவத்துடன் போர்ஷே லோகோ வடிவமைக்கப்பட்டது.

இன்றைய ஸ்பெஷல்... போர்ஷே பற்றி அறிந்திராத சுவாரஸ்யங்கள்!

2. முதல் கார்

போர்ஷே நிறுவனம் துவங்கப்பட்ட 10 ஆண்டுகள் வரை கார் தயாரிப்பில் ஈடுபடவில்லை. வாகன டிசைனில் மட்டுமே கவனம் செலுத்தியது. 1939ம் ஆண்டு போர்ஷே நிறுவனம் 64 என்ற கார் மாடலை வடிவமைத்தது. ஃபோக்ஸ்வேகன் மாடல் 64 பீட்டில் காரின் பல முக்கிய பாகங்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதில் பொருத்தப்பட்டிருந்த எஞ்சின் 50 பிஎச்பி ஆற்றலை மட்டுமே வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருந்தது. ஆனால், அப்போது இருந்த தொழில்நுட்ப வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இது சிறந்ததாக கருதப்படுகிறது. பின்னர், 1948ல் 200 தொழிலாளர்களுடன் முறைப்படி போர்ஷே நிறுவனம் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. முதல் தயாரிப்பு நிலை மாடலாக போர்ஷே 356 கூபே கார் வெளியிடப்பட்டது.

இன்றைய ஸ்பெஷல்... போர்ஷே பற்றி அறிந்திராத சுவாரஸ்யங்கள்!

3. போர்ஷே ஸ்பைடர் 550

தங்களது தொழில்நுட்ப வல்லமையை காட்டுவதற்காக மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையை முக்கிய விளம்பர மையமாக பயன்படுத்திக் கொள்ள போர்ஷே முடிவு செய்தது. இதன் காரணமாக ரேஸ் கார் மாடல்களை உருவாக்குவதில் ஃபெர்ரி போர்ஷே தீவிரம் காட்டினார். அதன்விளைவாக போர்ஷே 356 மாடல் உருவாக்கி வெற்றிக் கண்டது. ஆனால், அதைவிட ஒரு சிறந்த காரை உருவாக்க வேண்டும் என்று போர்ஷே காட்டிய ஆர்வத்தில் உருவான மாடல்தான் போர்ஷே 550 ஸ்பைடர்.

இன்றைய ஸ்பெஷல்... போர்ஷே பற்றி அறிந்திராத சுவாரஸ்யங்கள்!

4. போர்ஷே 917/30

1970 மற்றும் 71ம் ஆண்டுகளில் 24 ஹவர்ஸ் லீமான்ஸ் பந்தயத்தில் வெற்றி பெற்ற போர்ஷே நிறுவனம் வெற்றி பெற்றது. அதற்கு பயன்படுத்தப்பட்ட கார் மாடல் போர்ஷே 917 என்ற மாடல்தான். 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.3 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது. இந்த காரில் பொருத்தப்பட்டிருந்த எஞ்சின் 1,100 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மணிக்கு 390கிமீ வேகம் வரை பறக்கும்.

இன்றைய ஸ்பெஷல்... போர்ஷே பற்றி அறிந்திராத சுவாரஸ்யங்கள்!

5. போர்ஷே 928

உற்பத்தி பிரிவிலிருந்து வெளிவரும்போதே முன்புறம் மற்றும் பின்புறத்திலும் ஃபிளிப் சன்வைசர் கொண்ட ஒரே கார் மாடல் போர்ஷே 928 கார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஸ்பெஷல்... போர்ஷே பற்றி அறிந்திராத சுவாரஸ்யங்கள்!

6. போர்ஷே 911

1963ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போர்ஷே 911 கார் இன்றைக்கும் விற்பனையில் இருந்து வருகிறது. அவ்வப்போது புதுப்பொலிவுடன் நாகரீக மாற்றத்துக்கு ஏற்ப மாறுதல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இன்றைக்கும் நவநாகரீக டிசைன் கொண்டதாக மார்க்கெட்டில் இருந்து வருகிறது.

இன்றைய ஸ்பெஷல்... போர்ஷே பற்றி அறிந்திராத சுவாரஸ்யங்கள்!

7. எண்ணம்போல் வண்ணம்

ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் போன்றே போர்ஷே நிறுவனமும் வாடிக்கையாளரின் விரும்பிய எந்தவொரு வண்ணத்திலும் காரை பெயிண்ட் செய்து கொடுக்கிறது. ஆனால், அதற்கு கூடுதல் விலையை கொடுக்க வேண்டும். சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு ஆகியவைதான் போர்ஷே நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் வண்ணங்களாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய ஸ்பெஷல்... போர்ஷே பற்றி அறிந்திராத சுவாரஸ்யங்கள்!

8. பூஜ்யத்தால் பிரச்னை

போர்ஷே நிறுவனத்தின் 911 கார் முதலில் 901 என்று அழைக்கப்பட்டது. ஆனால், காரின் மூன்றெழுத்து எண்களை கொண்ட மாடல் பெயர்களின் நடுவில் பூஜ்யத்தை பயன்படுத்துவதை எதிர்த்து பீஜோ நிறுவனம் வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றது. இதையடுத்து, 911 என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இன்றைய ஸ்பெஷல்... போர்ஷே பற்றி அறிந்திராத சுவாரஸ்யங்கள்!

9. முதல் எஸ்யூவி

ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் சிறந்து விளங்கிய போர்ஷே முதன்முதலாக 2003ல்தான் எஸ்யூவி மார்க்கெட்டில் நுழைந்தது. விற்பனை ஆட்டம் கண்டதால், வர்த்தக விரிவாக்க நடவடிக்கையாக எஸ்யூவி தயாரிக்க முடிவு செய்தது.

இன்றைய ஸ்பெஷல்... போர்ஷே பற்றி அறிந்திராத சுவாரஸ்யங்கள்!

10. அதிவேக சுற்று

நர்பர்க்கிரிங் ரேஸ் டிராக்கில் போர்ஷே 956 காரில் ஸ்டீபன் பெல்லாஃப் என்பவர் அதிவேகத்தில் கடந்து சாதனை புரிந்தார். மணிக்கு சராசரியாக 201கிமீ வேகத்தில் 6.11.13 நிமிடங்களில் ஒரு சுற்றை கடந்து உலக சாதனை படைத்தார்.

இன்றைய ஸ்பெஷல்... போர்ஷே பற்றி அறிந்திராத சுவாரஸ்யங்கள்!

டிட்ஸ் பிட்ஸ்- 1

போர்ஷே நிறுவனம் சூப்பர் என்ற பெயரில் டிராக்டரை தயாரித்தது. இந்த டிராக்டரில் 38 பிஎச்பி பவரை அளிக்கும் 2,625சிசி ஏர்கூல்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. 1957 முதல் 1963 வரை டிராக்டர் தயாரிப்பில் ஈடுபட்டது. எப்படி விண்டேஜ் கார்களை பலர் பராமரித்து வருகிறார்களோ, அதேபோன்று போர்ஷே டிராக்டர்களையும் பலர் பராமரித்து அவ்வப்போது நடைபெறும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிக்கு வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இன்றைய ஸ்பெஷல்... போர்ஷே பற்றி அறிந்திராத சுவாரஸ்யங்கள்!

டிட்ஸ் பிட்ஸ்- 2

மென்ஸ் கார் என்ற ஜெர்மன் பத்திரிக்கை ஒன்று நடத்திய ஆய்வில் 50 சதவீத போர்ஷே உரிமையாளர்கள் தங்களது வாழ்க்கை துணையை ஏமாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைத்துணையிடம் மிகவும் நம்பிக்கைகுரியவர்களாக ஒபெல்- வாக்ஸ்ஹால் உரிமையாளர்கள் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Story Of Tata Motors Former MD Sumant Moolgaokar.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X