TRENDING ON ONEINDIA
-
காஷ்மீர் தாக்குதல்... அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம்.. மவுனமாக இருக்கும் பாக், சீனா
-
திடீரென நடத்தப்பட்ட ரெய்டில் நடிகை நயன்தாராவின் சொகுசு வேன் பறிமுதல்... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்...
-
கார்த்தி வெள்ளத்தில் சிக்கி கஷ்டப்பட்டு நடித்த தேவ் படம் எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம்
-
தலைவர் முதல் தளபதி வரை - வாழ்க்கையில் நடந்த காதல் முதல் கசமுசாக்கள் வரை
-
வேற லெவல் பிளான் உடன் மீண்டும் நிலவிற்கு செல்லும் நாசா; பின்னணி என்ன?
-
ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு ஏன் முக்கியம் தெரியுமா? “நச்”சுன்னு நாலு காரணம் சொன்ன ஆஷிஷ் நெஹ்ரா
-
ஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு
-
ஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம்! இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்!
இந்தியாவில் ரூ 8000 கோடி முதலீடு செய்ய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முடிவு
இந்தியாவில் சுமார் ரூ 8 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு வர ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஸ்கோடா பிராண்ட் காரின் விற்பனையை அதிகமாக்கவும், இந்தியாவில் தங்கள் நிறுவன கார்கள் தயாரிப்பை அதிகரிக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது
ஃபோர்க்ஸ்வாகன் குழுமம் தனது ஸ்கோடா கார் நிறுவனம் இந்தியாவிற்குள்ள சுமார் 8 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் தங்களது மொத்த மார்கெட்டில் 5 சதவீத பங்கை இந்தியாவில் வைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த முதலீட்டை கொண்டு அந்நிறுவனம் புதிய தொழிற்சாலை, புதிய ரக கார்கள் தயாரிப்பு, மற்றும் அதற்கான உதரிபாகங்கள் தயாரிப்பு, எம்க்யூபி ஏ0 பிளாட்பார்ம் கார்கள் தயாரிப்பு, சிறிய ரக எஸ்யூவிகள் தயாரிப்பு என செலவிட முடிவு செய்துள்ளது.
ஃபோர்க்ஸ்வாகன் நிறுவனத்தின் இந்த முடிவால் இந்தியாவில் முதற்கட்டமாகவே 4000 முதல் 5000 வரையிலான இன்ஜியர்களுக்கு தொழிற்சாலை மற்றும் ஆய்வு மேம்பாடு பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் உருவாகவுள்ளது.
இது குறித்து ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி பெர்ன்ஹார்ட் கூறுகையில் : " இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக மாறியுள்ளது. இந்த சந்தை இன்னும் வளர்வதற்கு இன்னும் அதிகமான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இந்தியாவின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பெரிய சாதனைகளை எதுவும் செய்யவில்லை. எங்களுக்கும் அது தெரியும்.
அதனால் தான் இந்தியா 2.0 என்ற பெயரில் இத்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம். இதற்காக கிட்டத்தட் ரூ 8 ஆயிரம் கோடியை முதலீடு செய்யவுள்ளோம். இதை கொண்டு இந்தியர்களை வைத்தே, இந்தியர்களுக்கான காரை டிசைன் செய்து தயாரிக்க முடிவு செய்துள்ளோம்.
இது குறித்து டாடா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்கள் எப்பொழுதும் கூட்டுமுயற்சிக்கு தயாராக இருக்கிறார்கள் ஆனால் முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தை சரியாக அமையவில்லை. அதை தான் நாங்களே இதை செய்து விடலாம் என முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளோம்" என கூறினார்.
இந்நிறுவனம் முதற்கட்டமாக ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகிய பிராண்ட்களில் தலா ஒரு கார் விதம் இரண்டு கார்களை வெளியிட முடிவு செய்துள்ளது ஸ்கோடாவில் இருந்து வெளியாகும் காருக்கு எஸ்கே 216 என்றும், ஃபோக்ஸ்வாகனில்இருந்து வெளியாககும் காருக்கு விடபிள்யூ 216 எனவும் பெயரிட்டுள்ளது. இந்த கார்கள் தற்போது விற்பனையாகும் ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்நிறுவனம் இரண்டாவதாக நடுத்தர செடன் ரக காராக எஸ்கே 271, மற்றம் விடபிள்யூ271 என்ற கார்களை களம் இறக்கவுள்ளன. இது ஹோண்டா சிட்டி காருக்கு பெரும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது விற்பனையில் இருக்கும் ஃபோக்ஸ்வேகன் வென்டோ மற்றும் ஸ்கோடா ராப்பிட் ஆகிய கார்களுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஸ்கோடா நிறுவனம் டாடா நிறுவனத்திற்கு நெக்ஸா என்ற டீலர் நெட்வொர்க் அமைந்தது. போல தங்களுக்கும் ஒரு டீலர் நெட்வோர்க் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. வாடிக்கையாளர்கள் திருப்தியை அதிகம் விரும்பும் டீலர்களுக்கே முன்னுரிமை வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.தற்போது ஸ்கோடா நிறுவனம் டாடா நிறுவனத்திற்கு நெக்ஸா என்ற டீலர் நெட்வொர்க் அமைந்தது. போல தங்களுக்கும் ஒரு டீலர் நெட்வோர்க் கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. வாடிக்கையாளர்கள் திருப்தியை அதிகம் விரும்பும் டீலர்களுக்கே முன்னுரிமை வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
01. தண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்?
02. புது எர்டிகா வந்தாலும் பழைய எர்டிகாவும் விற்பனையில் இருக்கும்... ஆனால்... ?!
03. திருடு போன இரண்டே நாட்களில் கேடிஎம் பைக்கை மீட்டு பொல்லாதவன் தனுஸையே மிஞ்சிய உரிமையாளர்...
04. புதிய ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி இந்திய வருகை விபரம்!!