இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

அம்பாஸிடர்... வரலாற்றில் இருந்து அழிக்க முடியாத ஒரு சொல். இந்திய சாலைகளின் கிங் அம்பாஸிடர்தான். இந்தியாவின் தேசிய கார் என அங்கீகாரம் பெறும் அளவிற்கு, அனைத்து தரப்பினரையும் வசீகரித்த கார் அது.

By Arun

அம்பாஸிடர்... ஆட்டோமொபைல் வரலாற்றில் இருந்து அழிக்க முடியாத ஒரு சொல். இந்திய சாலைகளின் கிங் அம்பாஸிடர்தான். இந்தியாவின் தேசிய கார் என அங்கீகாரம் பெறும் அளவிற்கு, அனைத்து தரப்பினரையும் வசீகரித்து வைத்திருந்தது அம்பாஸிடர். இன்று பல அதிநவீன லக்ஸரி கார்கள் வந்து விட்டாலும் கூட, அம்பாஸிடரில் பயணித்த பொற்காலம் திரும்பி வராது. அப்படிப்பட்ட அம்பாஸிடர் கார் குறித்து பலருக்கும் தெரியாத விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

'மேக் இன் இந்தியா' திட்டத்தை பின்பற்றிய முதல் கார்!

'மேக் இன் இந்தியா' திட்டம், பிரதமர் நரேந்திர மோடியால், கடந்த 2014ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் மோடி தொடங்கி வைப்பதற்கு முன்னதாக, சுதந்திரம் பெற்ற கால கட்டத்திலேயே, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை அம்பாஸிடர் பின்பற்ற தொடங்கி விட்டது என்றால் பார்த்து கொள்ளுங்கள்!

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

ஆம், இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் கார் அம்பாஸிடர்தான். அம்பாஸிடர் காரின் புரொடக்ஸனை, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த 1957ம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. அந்த சமயத்தில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரே பயணிகள் காரும் அம்பாஸிடர் மட்டுமே.

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

மாருதி சுசூகி நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தியை கடந்த 1983ம் ஆண்டு தொடங்கியது. அதற்கு முன்பு வரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு கொண்டிருந்த ஒரே கார் என்ற பெருமையையும் மிக நீண்ட வருடங்களாக அம்பாஸிடர் மட்டுமே தக்க வைத்து கொண்டிருந்தது.

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

57 ஆண்டுகள்... தகர்க்க முடியாத சாதனை

கடந்த 2014ம் ஆண்டு வரை அம்பாஸிடர் உற்பத்தி செய்யப்பட்டது. அதாவது 1957ம் ஆண்டு தொடங்கி 2014ம் ஆண்டு வரை மொத்தம் 57 ஆண்டுகள் அம்பாஸிடர் கார் உற்பத்தியில் இருந்தது. இதன்மூலம் இந்தியாவில் மிக அதிக ஆண்டுகள் உற்பத்தியில் இருந்த கார் என்ற பெருமையையும் அம்பாஸிடர் பெறுகிறது.

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

இந்த வரிசையில் 2வது இடத்தை பெறும் கார் மாருதி ஆம்னி. மாருதி ஆம்னி கடந்த 1984ம் ஆண்டு தொடங்கி இன்று வரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை வெறும் 34 ஆண்டுகள் மட்டுமே மாருதி ஆம்னி உற்பத்தியில் இருந்துள்ளது.

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

எனவே 57 ஆண்டுகள் என்ற அம்பாஸிடரின் சாதனையை மாருதி ஆம்னி முறியடிப்பது மிக மிக சிரமமே. அத்துடன் இந்தியாவில் அதிக ஆண்டுகள் உற்பத்தியில் இருந்த கார் என்ற அம்பாஸிடரின் சாதனையை, வேறு எந்த ஒரு நிறுவனத்தின் காராலும் முறியடிக்க முடியாது என்றே கருதப்படுகிறது.

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

பிரிட்டிஸ் சாயல்!

இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட மோரிஸ் ஆக்ஸ்போர்டு சீரிஸ் III என்ற கார் மாடலை அடிப்படையாக கொண்டதுதான் அம்பாஸிடர். இதற்கு ஏற்ப இந்தியாவில் அம்பாஸிடர் காரை உற்பத்தி செய்வதற்கான லைசென்ஸை கடந்த 1954ம் ஆண்டு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் பெற்றது.

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

இங்கிலாந்து நாட்டில் மோரிஸ் ஆக்ஸ்போர்டு சீரிஸ் III காரின் உற்பத்தி முடிவுக்கு வந்தபின், இந்தியாவில் அம்பாஸிடர் காரின் உற்பத்தியை 1957ம் ஆண்டு தொடங்கி, காரை விற்பனைக்கு கொண்டு வந்தது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம்.

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

உலகின் மிகச்சிறந்த டாக்ஸி

'உலகின் மிகச்சிறந்த டாக்ஸி' என்ற விருதை இந்தியாவின் அம்பாஸிடர் 2013ம் ஆண்டு வென்றது. மெர்ஸிடிஸ் பென்ஸ் E-கிளாஸ், டொயோட்டா ஹைஏஸ், போக்ஸ்வேகன் பீட்லி, ஃபோர்டு க்ரவுன் விக்டோரியா என அதிநவீன வசதிகள் கொண்ட கார்களுடன் போட்டியிட்டு, இந்த மகுடத்தை வென்றது அம்பாஸிடர்.

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

16 சதவீத அம்பாஸிடர்களை வாங்கிய இந்திய அரசு

ஒரு காலத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் அதிகாரப்பூர்வ காராக அம்பாஸிடர் மட்டுமே இருந்து வந்தது. அவ்வளவு ஏன்? இந்திய பிரதமர்களின் அதிகாரப்பூர்வ காராகவும் கூட ஒரு காலத்தில் அம்பாஸிடர்தான் இருந்தது.

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

இதனால் இந்திய அரசாங்கம் அதிகப்படியான அம்பாஸிடர் கார்களை வாங்கியுள்ளது. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மொத்த அம்பாஸிடர் கார்களில் 16 சதவீதத்தை இந்திய அரசாங்கம் மட்டுமே வாங்கியுள்ளது என்பது ஆச்சரியம் அளிக்கும் செய்தி.

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

மோனோகோயூக் சேஸிஸ்

அம்பாஸிடர் கார்கள், மோனோகோயூக் சேஸிஸ்களை சுற்றி டிசைன் செய்யப்பட்டன. மோனோகோயூக் சேஸிஸ்கள் பயன்படுத்தப்பட்ட ஒரே காராகவும் அம்பாஸிடர்தான் மிக நீண்ட வருடங்களாக இருந்து வந்தது. அம்பாஸிடர் கார் மிக விசாலமானதாக இருக்க இந்த சேஸிஸ்தான் காரணம்.

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

14 பேர் பயணிக்கலாம்!

பிக் அப் டிரக், சரக்கு ஏற்றி செல்லும் வாகனம், ஸ்டேஷன் வேகன் என பல வகை வாகனங்களாக அம்பாஸிடர் கார்களை பலர் மாற்றம் செய்தனர். இதில், ஸ்டேஷன் வேகன் என்ற ஒரு வகையான வாகனத்தில் டிரைவர் உள்பட 14 பேர் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

கொல்கத்தா மக்களுடன் பின்னி பிணைந்த அம்பாஸிடர்...

செயலிழந்து போன ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்று மேற்குவங்க மாநிலத்தின் உட்டர்பாரா என்ற பகுதியில் உள்ளது. ஆசிய கண்டத்தின் 2வது பழமையான தொழிற்சாலை என்ற பெருமை பெற்ற கட்டிடம் அது.

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

இதனாலோ என்னவோ இந்தியாவின் மற்ற பகுதிகளை காட்டிலும் கொல்கத்தா மக்களுடன் அம்பாஸிடர் மிக நெருக்கமாக பின்னி பிணைந்து விட்டது. இந்திய சாலைகளில் தற்போது அம்பாஸிடர் காரை பார்ப்பது என்பது மிகவும் அரிதான விஷயம்.

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

ஆனால் கொல்கத்தா பெருநகர சாலைகளில் மட்டும், கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் ஓடும் அம்பாஸிடர் டாக்ஸிகளை இன்றளவும் பார்க்க முடிகிறது. அம்மாநிலத்தின் முக்கியமான அரசு அதிகாரிகள், இன்றளவும் கூட அம்பாஸிடர் கார்களை தங்களின் அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

ஒரு சிலருக்கு நம்பிக்கை இல்லை!

வலுவான பாடி, விசாலமான இட வசதி உள்ளிட்ட காரணங்களால் அரசாங்கமே அம்பாஸிடர் காரை நம்பி வாங்கியது. எனினும் ஒரு சிலருக்கு அம்பாஸிடர் கார்களின் மீது சந்தேகம் இருக்கவே செய்தது. இதன் காரணமாக அம்பாஸிடர் கார்களுக்கு என பிரத்யேகமான ஒர்க் ஷாப்கள் முளைக்க செய்தன.

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

அம்பாஸிடர் காரை வாங்கும் சிலர் நேராக அதனை ஒர்க் ஷாப்புக்கு அனுப்பி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அங்குள்ள மெக்கானிக்குகள் காரை முழுவதுமாக பரிசோதனை செய்து, ஏதேனும் போல்ட் லூசாக இருந்தால் டைட் செய்து, 'ரெடி பார் தி ரோடு' என்பதற்கு ஏற்ப தயார் செய்து கொடுப்பார்கள்.

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

6 தலைமுறை...

1957ம் ஆண்டு தொடங்கி 2014ம் ஆண்டு வரை 6 முறை அம்பாஸிடர்கள் கார்கள் திருத்தியமைக்கப்பட்டது. மார்க்-I, மார்க்-II, மார்க்-III, மார்க்- IV, நோவா மற்றும் அவிகோ ஆகியவைதான் அந்த 6 ஜென்ரேஷன்கள்.

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

விற்பனையிலும் சாதனை

பொருளாதார நிலை உயர்ந்து வாங்கும் திறன் அதிகரித்துள்ள இன்றைய சூழலிலும் கூட, ஒரு சில நிறுவனங்களின் கார்கள் ஒரு மாதத்திற்கு 5,000 என்ற எண்ணிக்கையில் கூட விற்பனையாவதில்லை. ஆனால் 1980களிலேயே ஒரு மாதத்திற்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்பாஸிடர் கார்கள் விற்பனையானது.

இந்திய சாலைகளின் கிங்... ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அம்பாஸிடர் ரகசியங்கள்...

14 ஆயிரம் டூ 5.22 லட்சம்

1958ம் ஆண்டு மாடல் அம்பாஸிடர் கார் வெறும் 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் 2014ம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட அம்பாஸிடர் காரின் விலை 5.22 லட்ச ரூபாய். 2014ம் ஆண்டுடன் அம்பாஸிடர் காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

Image Source: Wiki Commons

Most Read Articles
English summary
Secrets of hindustan ambassador cars. Read in tamil
Story first published: Tuesday, July 3, 2018, 11:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X