விஐபிகள் பாதுகாப்பிற்கு ரூ360 கோடிக்கு வாடகைக்கு கார் வாங்கிய டில்லி அரசு

டில்லி போலீசார் விஐபிகளுக்கு எஸ்கார்ட் பாதுகாப்பு வழங்க கார்களை வாடகைக்கு எடுத்து வருகின்றனர். அதற்காக கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் ரூ 360 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அந்த கார்களை சொந்தமாக வாங்கியி

டில்லி போலீசார் விஐபிகளுக்கு எஸ்கார்ட் பாதுகாப்பு வழங்க கார்களை வாடகைக்கு எடுத்து வருகின்றனர். அதற்காக கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் ரூ 360 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அந்த கார்களை சொந்தமாக வாங்கியிருந்தால் கூட இவ்வளவு செலவாகியிருந்திருக்காது போல. சரி அப்படி என்னதான் அங்கு நடக்கிறது வாருங்கள் இங்கு பார்ப்போம்.

Advertisement

இந்தியாவில் விஐபிகள் கலாச்சாரம் மிக அதிகமாக இருக்கிறது. ஒரு விஐபி ஒரு இடத்திற்கு வருகிறார் என்றால் அவர் வருவதற்காக ரோட்டை பிளாக் செய்வது, அவரது காருக்கு முன்னாடி 10 கார் பின்னாடி 10 கார் என அணி வகுத்து செல்வது என பழநெடுங்காலமாக இந்த கலாச்சாரம் இந்தியாவில் இருந்து வருகிறது.

Advertisement

பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அமைச்சர்கள், உட்பட என பலர் இந்தியாவில் விஐபிகளாக கருதப்படுகிறார்கள், இவர்களுக்கு எல்லாம் அரசு சார்பில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மத்திய அரசு டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருவதால் இந்தியாவில் டில்லியில் விஐபிகள் அதிக அளவில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் டில்லியில் உள்ள விஐபிகளுக்கு பாதுகாப்பு வழங்க மற்றும் பாதுகாப்பு படையினர் செல்வதற்காக பயன்படுத்தப்படும் கார்கள் எல்லாம் வாடகைக்கு எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் டில்லியை சேர்ந்த ஸீஷன் ஹைதர் என்பது தகவல் அறியும் உரிமை சட்த்தின் மூலம் டில்லியில் எந்தெந்த கார்கள் எல்லாம் விஐபிகளின் பாதுகாப்பிற்காக பயன்படுத்ப்படுகிறது?, எத்தனை கார்கள் சொந்தமானவை, எத்தனைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது, கார்களை வாடகைக்கு எடுக்க இதுவரை எவ்வளவு செலவாகியுள்ளது. என கேள்விகளை கேட்டார்.

அதற்கு வந்த பதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. அதாவது கடந்த 2010ம் ஆண்டு முதல் இதுவரை விஐபிகளின் பாதுகாப்பிற்காக கார்கள் வாடகைக்கு எடுக்கப்பட்ட வகைக்கு ரூ 360 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது எனவும், ஆண்டு தோறும் இதற்காக சுமார் ரூ 50 கோடி வரை ஒதுக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2016-17ம் நிதியாண்டில் டில்லி போலீசாருக்கு ரூ 52.7 கோடி கார்களுக்கு வாடகைக்காக செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 8 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2013-14ம் ஆண்டில் மொத்தம் ரூ. 58.2 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாடைக்கு எடுக்கப்படும் கார்களில் 2010ம் ஆண்டு மாடல் மாருதி ஜிப்ஸிகள்- 200, 2017ம் ஆண்டு மாடல் மாருதி ஜிப்ஸிகள்- 50, 2017ம் ஆண்டு மாடல் மாருதி எர்டிகா கார் - 100, 2013ம் ஆண்டு மாடல் டொயோட்டா இன்னோவா - 50 ஆகிய கார்கள் தற்போது வாடைகைக்கு எடுக்கப்படுகிறது. இதில் ஜிப்ஸிகளுக்கு தின வாடகையாக ரூ 2,400 வழங்கப்படுகிறது. மற்ற கார்களுக்கு அதை விட வாடகை அதிகமாக வழங்கப்படுகிறது.

பெரும்பாலான விஐபிகளுக்கு வழங்கப்படும் பைலட், மற்றும் எஸ்கார்ட் பாதுகாப்பிற்கான கார்கள் எல்லாம் வாடகைக்கு தான் எடுக்கப்படுவதாகவும், பல விஐபிகளுக்கு இசட் மற்றும் இசட் பிளஸ் பாதுகாப்புகள் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது விஐபிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக டில்லி போலீசார் மட்டும் சுமார் 400 வாகனங்களை வாடகைக்கு எடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வாகனங்கள் எல்லாம் அதிகபட்சம் எட்டு ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டதாகவே உள்ளது.

பாலாவின் பார்வையில் :

8 ஆண்டுகளுக்கு 360 கோடியை 400 கார்களை வாடகைக்கு எடுக்க அரசு செலவு செய்துள்ளது. அதாவது காருக்கு சாசரியாக 11.25 லட்சம் செலவு செய்துள்ளது. ஆனால் அவர்கள பயன்படுத்தும் மாருதி எர்டிகா காரின் டாப் என்ட் மாடலின் தற்போதைய எக்ஸ்விலையே ரூ 11.13 லட்சம் தான். வாடைக்கு கார் எடுக்காமல் மொத்தமாக காரை சொந்தமாக வாங்கியிருந்தால் இந்நேரம் அந்த கார் அரசிற்கு சொந்தமாகியிருக்கும். தற்போது மக்களுக்கு உள்ள சுமை வெகுவாக குறைந்திருக்கும்.

அதே நேரத்தில் இந்தியாவில் விஐபிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்த நடை முறையில் சில மாற்றங்களை கொண்டு வரலாம். இது ஒருபுறம் இருக்கட்டும் காருக்கு வாடகையே ரூ 360 கோடி என்றால் அதற்கு போடப்பட்ட பெட்ரோல் செலவு, மற்றும் ரிப்பேர் செலவீனங்களை நீங்களே கணக்கு போட்டு பார்த்துக்கொள்ளுங்கள். இது டில்லி என்ற ஒரு மாநிலத்தின் செலவு தான் இந்தியா முழுவதும் உள்ள விஐபிகளுக்கு பாதுகாப்பு வழங்க எவ்வளவு செலவு செய்யப்படும், எவ்வளவு கார்கள் வாடகைக்கு எடுக்கப்படும் என்பதை யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை.

டில்லி அரசு விஐபிகளின் பாதுகாப்பிற்காக வாடகைக்கு எடுத்த மாருதி எர்டிகா காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் கீழே காணலாம்..

TRENDING

English Summary

Rupees 360 crore spending for rental cars in last 8 years. Read in Tamil