மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட் (Nissan Magnite). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2020ம் ஆண்டில் இருந்து நிஸான் மேக்னைட் கார் இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து வருகிறது.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், நிஸான் மேக்னைட் கார் வயதான தோற்றத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளது. எனவே மேக்னைட் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய நிஸான் நிறுவனம் தீவிரமாக தயாராகி வருகிறது. நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது தீவிரமாக நடைபெற்று கொண்டுள்ளது. இந்த சூழலில், நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பற்றிய பல்வேறு புதிய தகவல்கள், தற்போது வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

Nissan Magnite

தற்போதைய நிலையில் நிஸான் மேக்னைட் காரின் டாப் வேரியண்ட்களிலேயே 2 ஏர்பேக்குகள் மட்டும்தான் வழங்கப்படுகின்றன. ஆனால் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர சிங்கிள்-பேன் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதியும் கூடுதலாக வழங்கப்படலாம்.

அத்துடன் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் போன்ற வசதிகளும், நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கொடுக்கப்படலாம். செயல்திறனை பொறுத்தவரையில், தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான், ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nissan Magnite Rear Design

அவை 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும். இந்திய சந்தையில் ரெனால்ட் கைகர் (Renault Kiger), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) போன்ற சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு, நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனையில் கடுமையான சவாலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) ஆகிய கார்களுடனும், நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் போட்டியிடும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டி கடுமையாகி கொண்டே வருகிறது. கியா சொனெட் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய 2 முக்கியமான கார்களும் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டன. இதற்கு அடுத்தபடியாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் ஃபேஸ்லிஃப்ட் (Mahindra XUV300 Facelift) மாடல் விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி3எக்ஸ்ஓ (Mahindra XUV3XO) என்ற பெயரில், இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி3எக்ஸ்ஓ கார், வரும் ஏப்ரல் 29ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஸ்கோடா (Skoda) நிறுவனமும் புத்தம் புதிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. எனவே போட்டி கடுமையாகி கொண்டே வருவதால், நிஸான் நிறுவனம் மேக்னைட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். அனேகமாக நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள் நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வரலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 25, 2024, 23:51 [IST]
English summary
Nissan magnite facelift new features list out
மேலும்... #நிஸான் #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+