இந்தியாவின் சிறந்த பெட்ரோல் கார்களின் பட்டியலை இந்த பக்கத்தில் காணலாம். சிறந்த மதிப்பீட்டை பெற்ற இந்தியாவில் விற்பனையில் உள்ள பெட்ரோல் கார்களின் விலை, தொழில்நுட்ப விபரம், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக டாடா டியாகோ கார் மாறி இருக்கிறது. அழகிய டிசைன், போதுமான இடவசதியுடன், அதிக வசதிகள் கொண்டதாக இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த காரில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் செயல்திறன் மற்றும் மைலேஜை வழங்குகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் எஞ்சின் லிட்டருக்கு 19.8 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிகவும் பிரிமீயமான அம்சங்களை கொண்ட மாடலாக ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் இருந்து வருகிறது. இதில் வழங்கப்படும் 1.2 லிட்டர் கப்பா விடிவிடி பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடலானது மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 21 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த கார் பெட்ரோல்- சிஎன்ஜி மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கிறது.
டாடா அல்ட்ராஸ் கார் மிகச் சிறந்த பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மாடலாக பெயர் பெற்றுள்ளது. குளோபல் என்சிஏபி அமைப்பின் பாதுகாப்பு தர மதிப்பீட்டில் 5 நட்சத்திரங்களை பெற்ற கார் என்பதும் இதற்கு மிகப்பெரிய பக்கபலமாக உள்ளது. டிசைன், வசதிகளிலும் சிறப்பான இந்த காரில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. சாதாரண பெட்ரோல் எஞ்சின் 85 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டர்போ பெட்ரோல் மாடல் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.
பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் மாடல் என்ற பெருமையை மாருதி பலேனோ தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. அசத்தலான டிசைன், சிறப்பான இடவசதி, செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த காரில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.
பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டின் அழகான மாடலாக பெயர் பெற்ற ஹூண்டாய் ஐ20 கார் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. போட்டியாளர்களைவிட விலையிலும், சிறப்பம்சங்களிலும் பிரிமீயம் அந்தஸ்து கொண்ட மாடலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கிறது. இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் மாடல் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்ட மாடல் 88 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.35 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 19.65 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. பிரிமீயமான ஹேட்ச்பேக் கார் மாடலை வாங்க விரும்புவோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது.
மிக குறைவான பட்ஜெட்டில் சிறந்த காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக நிஸான் மேக்னைட் மாறி இருக்கிறது. அட்டகாசமான டிசைன், தொழில்நுட்ப வசதிகளுடன் மிக குறைவான பட்ஜெட்டில் கிடைக்கிறது. இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 72 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. டர்போ பெட்ரோல் மாடலானது 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. ரூ.10 லட்சம் ஆன்ரோடு விலையில் டாப் வேரியண்ட் கிடைப்பது இந்த காரின் மிக முக்கிய அம்சமாக உள்ளது.
காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா உள்ளது. டிசைன், சிறந்த எஞ்சின் தேர்வுடன் வசதிகளிலும் நிறைவை தருகிறது. இந்த கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் கிடைக்கிறது. இதன் எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. மாருதி நிறுவனத்தின் சிறப்பான வாடிக்கையாளர் சேவை, குறைவான பராமரிப்பு செலவு போன்றவை இதன் மிக முக்கிய அம்சங்களாக உள்ளன.
காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது டாடா நெக்ஸான். டிசைன், வசதிகள், பாதுகாப்பு அம்சங்களில் சிறந்ததாக பெயர் பெற்றுள்ளது. இந்த கார் பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. செயல்திறனுடன் சிறப்பான எரிபொருள் சிக்கனத்துடன் அனைத்து விதத்திலும் வாடிக்கையாளர்களை நிறைவை தருகிறது டாடா நெக்ஸான்.