முகப்பு »
இந்தியாவின் சிறந்த மறுவிற்பனை மதிப்புடைய கார்கள்
இந்தியாவின் சிறந்த மறுவிற்பனை மதிப்புடைய கார்கள்
இந்தியாவின் சிறந்த மறுவிற்பனை மதிப்புடைய கார்களின் பட்டியலை இந்த பக்கத்தில் காணலாம். சிறந்த மதிப்பீட்டை பெற்ற இந்தியாவில் விற்பனையில் உள்ள மறுவிற்பனை மதிப்புடைய கார்களின் விலை, தொழில்நுட்ப விபரம், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல தகவல்களை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்பதே இந்த காருக்கான மறுவிற்பனை மதிப்பையும் சேர்த்தே குறிப்பிடும் விஷயமாக கருத முடியும். குறைந்த பட்ஜெட்டில் கிடைக்கும் மிகச் சிறந்த தேர்வு. குறைந்த பராமரிப்பு செலவு, அதிக எரிபொருள் சிக்கனம், 4 பேர் செல்வதற்கான போதுமான இடவசதி, நகர்ப்புறத்தில் இயக்குவதற்கு ஏதுவான அம்சங்களுடன் முதல் முறை கார் வாங்குவோரின் நம்பர்- 1 சாய்ஸாக உள்ளது. மாருதியின் விற்பனைக்கு பிந்தைய சேவை தரம் மற்றும் சிறப்பான சர்வீஸ் மையங்கள் கட்டமைப்பு ஆகியவையும் இதற்கு வலு சேர்க்கிறது.
ரெனோ க்விட் கார் 800 சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் பகட்டான தோற்றம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இதற்கு வலுசேர்க்கிறது. தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதிகளும் இதன் மதிப்பை உயர்த்துவதோடு, மிக குறைவான விலை கார் சந்தையில் மதிப்புமிக்க மாடலாக இருக்கிறது. இந்த கார் ரீசேல் மதிப்பிலும் சிறந்து விளங்குகிறது.
இந்தியாவின் மிகச் சிறந்த ஹேட்ச்பேக் கார் தேர்வாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் விளங்குகிறது. டிசைன், எஞ்சின், வசதிகள், விலை என அனைத்திலும் சிறந்த தேர்வாக இருப்பதுடன், மறுவிற்பனை மதிப்பில் இந்தியாவின் மிகச் சிறந்த மாடலாகவும் கூறலாம். இதனால், இந்த காரின் விற்பனை தொடர்ந்து மிக சிறப்பாக இருந்து வருகிறது. இந்த கார் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கிறது. யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஸ்விஃப்ட் காருக்கு மிகச் சிறந்த மதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது.
ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதன் டிசைன் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் வாடிக்கையாளர்களை கவர்ந்த ஒன்றாக கூறலாம். இடவசதி, நம்பகமான எஞ்சின் தேர்வுகளுடன் தொடர்ந்து விற்பனையில் கலக்கி வருகிறது. பொதுவாகவே ஹூண்டாய் கார்களுக்கு யூஸ்டு கார் மார்க்கெட்டில் சிறந்த மறுவிற்பனை மதிப்பு இருந்து வருகிறது. அதில், எலைட் ஐ20 காருக்கும் சிறந்த மறுவிற்பனையை பெற்று வருகிறது.
விற்பனையில் இந்தியாவின் முன்னணி கார் மாடல்களில் ஒன்று மாருதி டிசையர் கார். சிறந்த வடிவமைப்பு, மிக நம்பகமான எஞ்சின் தேர்வுகள், ஏஎம்டி கியர்பாக்ஸ், அதிக எரிபொருள் சிக்கனம், சரியான விலை ஆகியவை இந்த காரின் சந்தையை உயர்த்தி வைத்துள்ளது. மேலும், இந்தியாவின் அதிக ரீசேல் மதிப்புடைய கார் மாடலாகவும் மாருதி டிசையர் விளங்குகிறது. யூஸ்டு கார் சந்தையில் சிறந்த மதிப்புடைய மாடல்களில் மாருதி டிசையர் காரும் முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் அனைவரின் விருப்பமான தேர்வு ஹோண்டா சிட்டி. இந்த காரின் பெயரே பலரை சுண்டி இழுக்கும் சிறப்பு வாய்ந்தது. அசத்தலான டிசைன், அருமையான பெட்ரோல், டீசல் எஞ்சின்களுடன் மிக பிரிமீயமான மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் டீசல் எஞ்சின் எரிபொருள் சிக்கனத்தில் பெயர் பெற்றுள்ளது. இதுதவிர, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகளிலும் சிறந்த மாடல். இந்த காரின் பெயருக்கு யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் அதிக மதிப்பு இருந்து வருகிறது.
இந்தியாவின் அதிக ரீசேல் மதிப்புடைய கார் மாடல்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா விளங்குகிறது. 2004ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் முதன்மையான எம்பிவி கார் மாடல் தேர்வாக இருந்து வருகிறது. அதிக தூரம் ஓடிய இன்னோவா காருக்கு கூட மிகச் சிறந்த மறுவிற்பனை மதிப்பு உண்டு என்பதே இந்த காரின் மதிப்பை உணர்த்தும் விஷயம். எனவே, வாடிக்கையாளர்கள் இந்த காரை கண்ண மூடிக்கொண்டு தேர்வு செய்யும் போக்கு இருந்து வருகிறது.