ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹூண்டாய் கிராண்ட் ஐ10
Style: ஹேட்ச்பேக்
4.98 - 7.59 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் 13 வேரியண்ட்டுகளில் 7 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 பெட்ரோல் மாடல்கள்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 டீசல் மாடல்கள்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 சிஎன்ஜி மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
ஹேட்ச்பேக் | Manual Gearbox
6,46,452

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மைலேஜ்

கியர்பாக்ஸ் எரிபொருள் வகை மைலேஜ்
Manual பெட்ரோல் 19.77 kmpl
Manual டீசல் 24.95 kmpl
Manual சிஎன்ஜி 19.77 kmpl
Automatic பெட்ரோல் 17.49 kmpl

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 விமர்சனம்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 Exterior And Interior Design

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் பிரிமீயம் அம்சங்களுடன் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் விற்பனையில் கலக்கி வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் புளூயிடிக் டிசைனில் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த காரில் கச்சிதமான முகப்பு க்ரில் அமைப்பு, ஹெட்லைட் ஆகியவை வசீகரத்தை தருகின்றது. பம்பரில் பனி விளக்குகள் அறையுடன் சேர்த்தே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள் நவீன யுக கார் மாடலாக முன்னிறுத்துகிறது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரின் பக்கவாட்டில் மிக நேர்த்தியான டிசைன் எல்லோரையும் கவரும். அதற்கு தக்கவாறு அலாய் வீல்கள் அழகு சேர்க்கின்றன. டர்ன் இண்டிகேட்டர்கள் கொண்ட சைடு மிரர்கள் பொருத்தப்பட்டுள்ளன. கருப்பு வண்ண பிளாஸ்டிக் சட்டம் பக்கவாட்டு கவர்ச்சியை கூட்டுகிறது. பின்புறத்தில் மிக டெயில் லைட்டுகள் மிக அழகாக காட்சி தருகின்றன.

உட்புறத்தில் கருப்பு - பீஜ் வண்ண இன்டீரியர் தீம் அழகாக இருக்கிறது. பிளாஸ்டிக் தரம் மற்றும் வடிவமைப்பு மிகவும் பிரிமீயமாக தெரிகிறது. பெரிய திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், போதுமான ஸ்டோரேஜ் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 எஞ்சின் மற்றும் செயல்திறன்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 Engine And Performance

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும்,, 190 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இரண்டு எஞ்சின்களுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 4 ஸ்பீடு ஆட்டமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் உள்ளது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் சிஎன்ஜி எரிபொருள் வகையிலும் கிடைக்கிறது. இந்த காரின் சிஎன்ஜி மாடலில் இருக்கும் எஞ்சின் 66 பிஎச்பி பவரையும், 97 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரின் எஞ்சின்கள் நகர்ப்புற பயன்பாடு மற்றும் நெடுஞ்சாலை என இரண்டிற்கும் ஈடுகொடுக்கும் வகையில் சிறப்பாக இருக்கின்றன. ஸ்டீயரிங் வீல் இலகுவாக இருப்பதால், நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிக உகந்ததாக இருக்கிறது. நெடுஞ்சாலையில் செயல்திறன் மிகச் சிறப்பாக கூறமுடியாவிட்டாலும், போதுமான அளவு இருப்பதாகவே கருத முடியும்.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரின் சஸ்பென்ஷன் மிகவும் மென்மையாக இருப்பதால், நகர்ப்புறத்தில் சொகுசான பயணங்களை வழங்கும். ஆனால், வளைவுகளில் திரும்பும்போது பாடி ரோல் இருப்பதை கூற வேண்டும். பிரேக்குகள் மிகச் சிறப்பாக இருப்பது ஓட்டும்போது நம்பிக்கையை அதிகரிக்கிறது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரின் ஸ்டீயரிங் வீல் அதிவேகத்தில் இறுக்கமாக மாறுவதால், நெடுஞ்சாலைகளில் ஓட்டுவதற்கு சிறப்பாக உள்லது. ஆனாலும், இன்னும் சிறப்பாக இருந்தால் அதிக நம்பிக்கையுடன் ஓட்ட முடியும். ஆட்டோமேட்டிக் மாடல் மிக ஓய்வான ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மைலேஜ்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 Fuel Efficiency

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரில் 43 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன்கள் உள்ளன. சிஎன்ஜி மாடலில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் கலன்களை சேர்த்து 60 லிட்டர் எரிபொருள் கொள்திறனை பெற்றிருக்கிறது. பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 19.77 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 17.49 கிமீ மைலேஜையும் தருவதாக அராய் சான்று கூறுகிறது. டீசல் மாடல் லிட்டருக்ககு 24.95 கிமீ மைலேஜை வழங்கும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 முக்கிய அம்சங்கள்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 Important Features

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரில் ஏராளமான வசதிகள் உள்ளன. எல்இடி பகல்நேர விளக்குகள், கதவுகளில் க்ரோம் கைப்பிடிகள், டர்ன் இண்டிகேட்டருடன் சைடு மிரர்கள், டைமண்ட் கட் அலாய் வீல்கள், டியூவல் டோன் இன்டீரியர், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், சீட் பெல்ட் ரிமைன்டர், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், மோதலின்போது கதவுகள் தானாக திறக்கும் வசதிகள் உள்ளன.

தீர்ப்பு

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 Verdict

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் செயல்திறன், மைலேஜ், பிரிமீயம் வசதிகளுடன் ஓர் சிறந்த தினசரி பயன்பாட்டு காராக இருக்கிறது. நெடுஞ்சாலை பயணங்களுக்கும் பயன்படுத்தும் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் பிரிமீயம் அம்சங்கள் கொண்ட ஹேட்ச்பேக் காரை விரும்புவோருக்கு சரியான தேர்வாக இருக்கும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 வண்ணங்கள்


Marina Blue
Star Dust
Flame Orange
Sleek Silver
Fiery Red
Polar White
Typhoon Silver

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 படங்கள்

 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more