மாருதி சுஸுகி இக்னிஸ்

மாருதி சுஸுகி இக்னிஸ்
Style: ஹேட்ச்பேக்
6.29 - 8.13 லட்சம்
ஜிஎஸ்டி எக்ஸ்ஷோரூம் விலை

மாருதி சுஸுகி இக்னிஸ் கார் 4 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மாருதி சுஸுகி இக்னிஸ் காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மாருதி சுஸுகி இக்னிஸ் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

மாருதி சுஸுகி இக்னிஸ் பெட்ரோல் மாடல்கள்

வேரியண்ட்டுகள் எக்ஸ்ஷோரூம் விலை
ஹேட்ச்பேக் | Gearbox
6,28,777
ஹேட்ச்பேக் | Gearbox
6,85,011
ஹேட்ச்பேக் | Gearbox
7,45,342
ஹேட்ச்பேக் | Gearbox
8,13,071

மாருதி சுஸுகி இக்னிஸ் விமர்சனம்

மாருதி சுஸுகி இக்னிஸ் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்

இளம் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து மாருதி அறிமுகம் செய்த கார் இக்னிஸ். ஏற்கனவே இருந்த ரிட்ஸ் காருக்கு மாற்றாக வந்த இந்த கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் இளைஞர்களை கவரும் விதத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் முக்கிய அம்சங்களாக உள்ளன. பெரிய பம்பர் அமைப்பு இதற்கு முரட்டுத் தோற்றத்தை தருகிறது.

இந்த காரின் பக்கவாட்டு டிசைன் டால் பாய் கான்செப்ட் என்ற டிசைன் தாத்பரியத்தை நினைவூட்டுகிறது. 15 அங்குல அலாய் வீல்கள் கவர்ச்சி சேர்க்கிறது. பின்புறத்தில் சரிவான விண்ட்ஷீல்டு அமைப்பு, கச்சிதமான டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் காருக்கு சிறப்பான தோற்றத்தை தருகிறது. இந்த கார் 6 வண்ணத் தேர்வுகளில் கிடைப்பதுடன், இரட்டை வண்ண தேர்வுகளிலும் கிடைக்கிறது.

மாருதி சுஸுகி இக்னிஸ் எஞ்சின் மற்றும் செயல்திறன்

மாருதி இக்னிஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறதுத.

இந்த கார் ஓட்டுவதற்கு உற்சாகமான அனுபவத்தை தருகிறது. இதன் எஞ்சின் ஆரம்ப மற்றும் நடுத்தர நிலைகளில் போதுமான செயல்திறனை வெளிப்படுத்துகிறது. இந்த கார் கையாளுமையிலும் ஜோராக இருக்கிறது.

இதன் சஸ்பென்ஷன் அதிர்வுகளை சிறப்பாக உள்வாங்குவதுடன், போதுமான கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால் இந்திய சாலைகளை எளிதாக சமாளிக்க முடியும்.. இந்த காரில் முன்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் டிரம் பிரேக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

மாருதி இக்னிஸ் கார் குறைவான டர்னிங் ரேடியஸ் கொண்டுள்ளது. அத்துடன், இலகுவான க்ளட்ச் மற்றும் ஸ்டீயரிங் சிஸ்டம் நகர்ப்புற பயன்பாட்டிற்கு சிறப்பான மாடலாக முன்னிறுத்துகிறது. கையாளுமை சிறப்பாக இருப்பதால், நெடுஞ்சாலைகளுக்கும் ஏதுவான காராக உள்ளது. இதன் பிரேக்கிங் சிஸ்டமும் சிறப்பாகவே உள்ளது.

மாருதி சுஸுகி இக்னிஸ் மைலேஜ்

மாருதி இக்னிஸ் காரில் 32 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த கார் லிட்டருக்கு 20.89 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்று தெரிவிக்கிறது.

மாருதி சுஸுகி இக்னிஸ் முக்கிய அம்சங்கள்

மாருதி இக்னிஸ் கார் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் பாடி கலர் சைடு மிரர்கள் மற்றும் கதவு கைப்பிடிகள் கொடுக்கப்படுகின்றன. டர்ன் இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்ட சைடு மிரர்களும் குறிப்பிடத்தக்க அம்சம். இந்த காரில் ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும்.

மாருதி இக்னிஸ் காரில் பவர் விண்டோஸ், 60:40 என்ற விகிதத்தில் மடக்கும் வசதி கொண்ட பின் இருக்கைகள், கீ லெஸ் என்ட்ரி, எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள் ஆகிய பல வசதிகள் உள்ளன.

இந்த காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அலாரம், இம்மொபைலைசர், சீட் பெல்ட் ரிமைன்டர், ஹை ஸ்பீடு வார்னிங் சிஸடம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், கீ லெஃப் ரிமைன்டர் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

மாருதி சுஸுகி இக்னிஸ் தீர்ப்பு

புதிய மாருதி இக்னிஸ் கார் பட்ஜெட் விலையில் சிறப்பான பிரிமீயம் மாடலாக உள்ளது. டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் சிறப்பான தேர்வாக இருக்கிறது. குறிப்பாக, இளம் தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என்று கூறலாம்.

வண்ணங்கள்


Nexa Blue
Turquoise Blue
Lucent Orange
Glistening Grey
Silky Silver
Pearl Arctic White

மாருதி சுஸுகி இக்னிஸ் படங்கள்

 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+