நம்ப முடியாத விலையில் விற்பனைக்கு வந்த லிமிடேட் என்ஜாய் கார்!!

By Saravana

ரூ.5.30 லட்சம் என்ற மிகச்சவாலான விலையில் கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் மற்றும் சலுகைகளுடன் செவர்லே என்ஜாய் எம்பிவி கார் விற்பனைக்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் விற்பனைக்கு வந்த செவர்லே என்ஜாய் ரூ.5.49 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்த நிலையில், தற்போது கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட என்ஜாய் அதைவிட குறைவான விலையில் வந்து வாடிக்கையாளர்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது.

வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

LTZ டாப் வேரியண்ட்டை தவிர்த்து மற்ற அனைத்து வேரியண்ட்டுகளிலும் இந்த புதிய லிமிடேட் எடிசன் என்ஜாய் கிடைக்கும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

புதிய ரூஃப் ரெயில்கள், பாடி கிராபிக்ஸ் ஸ்டிக்கர், டெயில் லைட்டுகளுக்கு குரோம் கிரில், இண்டிகேட்டருடன் கூடிய ரியர் வியூ கண்ணாடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் மர வேலைப்பாடுகள் கொண்ட சென்ட்ரல் கன்சோல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

76.4 பிஎச்பி பவரையும், 188 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் மற்றும் 103 பிஎச்பி பவரையும், 131 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் செவர்லே என்ஜாய் கிடைக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 13.7 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 18.2 கிமீ மைலேஜையும் தரும்.

 இதர சலுகைகள்

இதர சலுகைகள்

லிமிடேட் எடிசன் செவர்லே என்ஜாய்க்கு ரூ.14,000 மதிப்புள்ள ஆக்சஸெரீஸ்களை இலவசமாகவும், 33,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளையும் செவர்லே வழங்குகிறது. கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள டீலரை அணுகவும்.

முழு விபரம்

முழு விபரம்

ரூ.5.30 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

 
Please Wait while comments are loading...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+