அடுத்து ஒரு புதிய ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்: சரவெடி கொளுத்தும் கவாஸாகி

By Saravana

ஆர்ப்பரிக்கும் வடிவமைப்பு மற்றும் பெர்ஃபார்மென்ஸ் கொண்ட பைக் மாடல்கள் மூலம் உலக அளவில் பல்வேறு நாட்டு இளசுகளை கட்டிப் போடடு வைத்திருக்கிறது கவாஸாகி.

அந்த வகையில், இந்தியாவிலும் கவாஸாகியின் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளுக்கு விசிறிகள் எக்கச்சக்கம் இருக்கின்றனர். இதனை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து புதிய ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் பைக் மாடல்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது.

சூப்பர் பைக்குகளுக்காக புனேயில் பிரத்யேக ஷோரூமை அமைத்த கவாஸாகி தற்போது இரண்டாவது ஷோரூமை டெல்லியில் திறந்துள்ளது. இந்த ஷோரூம் திறப்பு விழாவோடு சேர்த்து புதிய இசட்800 ஸ்போர்ட்ஸ் பைக்கையும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த அசத்தலான நேக்டு ஸ்டைல் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 இறக்குமதி மாடல்

இறக்குமதி மாடல்

இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த புதிய பைக்கை இறக்குமதி செய்து விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது கவாஸாகி.

எஞ்சின்

எஞ்சின்

806சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த புதிய பைக் 113 பிஎஸ் பவரையும், 83 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

 பெட்ரோல் டேங்க்

பெட்ரோல் டேங்க்

229 கிலோ எடை கொண்ட இந்த புதிய ஸ்போர்ட்ஸ் பைக்கில் 17 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பதிவு

முன்பதிவு

அறிமுகத்துக்கு முன்பாகவே இந்த புதிய நடுத்தர வகை ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கு டெல்லி ஷோரூமில் 14 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

ரூ.8.05 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 மாடல்கள்

மாடல்கள்

பிரத்யேக சூப்பர் பைக் ஷோரூம் வழியாக இசட்எக்ஸ்14ஆர், இசட்எக்ஸ்10ஆர், இசட்1000 மற்றும் நின்ஜா 1000 ஆகிய பைக் மாடல்களுடன் சேர்த்து இந்த புதிய பைக் மாடலையும் கவாஸாகி விற்பனை செய்யும்.

 
Please Wait while comments are loading...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+