போலரிஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் அமெரிக்காவின் பழமையான மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை இன்று முறைப்படி துவங்கியது.
தனது பிராண்டின் 3 மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பாரம்பரியமும், தனித்துவங்களும், புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய இந்தியன் மோட்டார்சைக்கிள்கள் பற்றிய கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.
விலை விபரம்
டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை
இந்தியன் கிளாசிக் ரூ.26.5 லட்சம்
இந்தியன் விண்டேஜ் ரூ.29.5 லட்சம்
இந்தியன் சீஃப்டெயின் ரூ.33 லட்சம்
எஞ்சின்
மூன்று மாடல்களிலும் 1811சிசி வி ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 139 என்எம் டார்க்கை அளிக்கும். 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டது.
அம்மாடியோவ் எடை
இந்தியன் கிளாசிக் மற்றும் இந்தியன் விண்டேஜ் மாடல்கள் 354 கிலோ எடையையும், இந்தியன் சீஃப்டெயின் அதைவிட 5 கிலோ கூடுதல் எடையையும் உடையது. 20.8 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.
லெதர் இருக்கை
மூன்று மாடல்களிலும் லெதர் இருக்கைகளை கொண்டது. 1930ம் ஆண்டு முதல் ஒரே நிறுவனம் இந்த லெதர் இருக்கைகளை சப்ளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பழசும், புதுசும்..
பழமை 40 சதவீதமும், புதுமை 60 சதவீதமும் கொண்ட கலவையில் இந்த மோட்டார்சைக்கிள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் பெருமிதம் தெரிவித்துள்ளது.
கீலெஸ் இக்னிஷன்
இந்த மோட்டார்சைக்கிள்களில் கார்களை போன்று கீ லெஸ் இக்னிஷன் உள்ளது. எலக்ட்ரிக் ஸ்டார்ட் பட்டன் மூலம் ஸ்டார்ட் செய்யலாம்.
ஏபிஎஸ் பிரேக்
ஏபிஎஸ் பிரேக், க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
மியூசிக் சிஸ்டம்
சீஃப்டெயின் மோட்டார்சைக்கிளில் ரிமோட் லாக், புளூடூத் வசதியுடன் கூடிய மியூசிக் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய வசதிகளை கொண்டது.
ஷோரூம்
டெல்லியில் முதல் ஷோரூமும், பெங்களூரில் இரண்டாவது ஷோரூமையும் அமைக்க இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டெலிவிரி
வரும் மார்ச் மாதம் முதல் டெலிவிரி துவங்கப்பட உள்ளது. அமெரிக்காவிலிருந்து இந்த மோட்டார்சைக்கிள்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications