வருண் தவானின் கேரேஜில் சேர்ந்த புதிய மஹிந்திரா கேயூவி100

Written By:

மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம், தங்களின் பிராண்ட் அம்பாஸிடரான பாலிவுட் நடிகர் வருண் தவானிற்கு கேயூவி100 எஸ்யூவி காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. பெரிய நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை பிரபலப்படுத்த பெரிய விளையாட்டு வீரர்களையும், நடிகர்களை பிராண்ட் அம்பாஸிடரான நியமிப்பது வழக்கமான விஷயமாகும்.

இவ்வாறு, கேயூவி100 எஸ்யூவிக்கு பிராண்ட் அம்பாஸிடராக விளங்கும் வருண் தவான் மஹிந்திரா கேயூவி100 காரை பெற்றது தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

பிராண்ட் அம்பாஸிடர்;

பாலிவுட்டில் முன்னோடி நடிகர்களில் ஒருவான வருண் தவான் தான், மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கும் கேயூவி100 எஸ்யூவிக்கு பிராண்ட் அம்பாஸிடராக உள்ளார். அறிமுக காலம் முதல் டிவி விளம்பரங்களிலும், அச்சு விளம்பரங்களிலும் இவர் பங்குபெற்ற விளம்பரங்கள் தோன்றி வருகிறது.

'ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்' என்ற திரைப்படத்தில் அறிமுகமான வருண் தவான், 'மைன் தேரா ஹீரோ', 'தில்வாலே', 'பத்லாப்பூர்' மற்றும் 'டிஷூம்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

வருண் தவான் பெற்ற கேயூவி100;

தங்களின் பிராண்ட் அம்பாஸிடரான பாலிவுட் நடிகர் வருண் தவானிற்கு, மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம், பிரைட் ஆரஞ்ச் நிறத்திலான கேயூவி100 எஸ்யூவி காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

சரியான தேர்வு;

யங்க் எஸ்யூவி என பிரபலப்படுத்தப்படும் மஹிந்திரா கேயூவி100, காம்பேக்ட் செடான் மற்றும் ஹேட்ச்பேக்கிற்கும் இடையிலான காரை நாடுபவர்களுக்கு, சரியான் தேர்வாக உள்ளது.

இஞ்ஜின்;

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி, 3-சிலிண்டர்கள் உடைய 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.2 லிட்டர் டீசல் இஞ்ஜின் ஆகிய தேர்வுகளில் வெளியாகிறது.

கியர்பாக்ஸ்;

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் இரு இஞ்ஜின்களும், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

போட்டி;

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி, விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் டட்சன் கோ கிராஸ் மற்றும் செவர்லே பீட் ஆக்டிவ் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டியுள்ளது.

விலை;

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் பேஸ் வேரியன்ட், 4.59 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் ஃபுல்லி லோடட் எனப்படும் டாப் என்ட் வேரியன்ட், 7.15 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலையில் விற்கப்படுகிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Mahindra & Mahindra has gifted their Brand Ambassador with New KUV100. Varun Dhawan was gifted with bright Orange coloured KUV100 mini SUV model. Initial television and print advertisements featured Varun Dhawan in them. KUV100 was introduced by Mahindra as Young SUV. KUV100 is right choice for those who want to choose between compact sedan and hatchback. To know more, check here...
Please Wait while comments are loading...

Latest Photos