மாடு மாதிரி உழைக்க இரண்டுமே சரியான கார்! 5 பேர் பயணிக்க 10.50 லட்ச ரூபாயில் இதில் ஒரு காரை வாங்கலாம்!

ரெனால்ட் (Renault) நிறுவனம் அதன் டஸ்டர் (Duster) காரை மேம்படுத்தப்பட்ட தோற்றத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இதற்கு விற்பனையில் போட்டியளிக்க ஏற்கனவே பல எஸ்யூவி கார் மாடல்கள் தயாராக உள்ளன. அத்தகைய கார்களுள் ஒன்று, ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகும். ரெனால்ட் டஸ்டர் காரை போன்று, ஸ்கோடா குஷாக்கும் சமீபத்தில்தான் ஃபேஸ்லிஃப்டிற்கு அப்கிரேட் (Upgrade) செய்யப்பட்டது.

புதிய டஸ்டர் மற்றும் புதிய குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரில் எதை வாங்குவது? எது சிறந்தது? என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். ஆனால், இந்த கார்களின் அனைத்து வேரியண்ட்களையும் ஒப்பிட்டு பார்க்க போவதில்லை. மாறாக, இந்த கார்களின் அனைவராலும் வாங்கக்கூடிய விலை குறைவான எண்ட்ரி-லெவல் (Entry-level) வேரியண்ட்களை ஒப்பிட்டு பார்க்க போகிறோம்.

renault duster vs skoda kushaq

புதிய ரெனால்ட் டஸ்டர் காரில் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டாக அதென்டிக் (Authentic) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவே, குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரில் விலை குறைவான வேரியண்ட்டாக கிளாசிக்+ (Classic+) விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரு எண்ட்ரி-லெவல் வேரியண்ட்களை ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம், குறைந்த விலையில் டஸ்டர் மற்றும் குஷாக் ஆகிய இரண்டில் எதை வாங்குவது என்கிற தெளிவுக்கு வர முடியும்.

வெளிப்புற தோற்றம்: இரண்டும் எண்ட்ரி-லெவல் வேரியண்ட் என்பதால், வெளிப்புற தோற்றத்தில் இரண்டும் எளிமையானவைகளாக காட்சியளிக்கின்றன. புதிய டஸ்டர் அதென்டிக் கார் அதன் தனித்துவமான தோற்றத்தில், 17 இன்ச்சில் இரும்பு சக்கரங்கள் உடன் கிடைக்கும். புதிய டஸ்டரின் முரட்டுத்தனமான தோற்றத்தை இந்த எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டிலும் பெறலாம்.

renault duster vs skoda kushaq

அதேபோல் மறுப்பக்கம், ஸ்கோடா குஷாக் கார் அதன் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டிலும் பிரீமியம் தரத்தில் காட்சியளிக்கிறது. டஸ்டர் அதென்டிக் காரை போலவே, எல்இடி டெயில்லேம்ப்களை பெறுகிறது. அத்துடன், குஷாக் கிளாசிக்+ காரில் எல்இடி ஹெட்லேம்ப்களையும், கருப்பு நிறத்திலான க்ரில்லையும் பெறலாம். அதேபோல், இந்த காரில் அலாய் சக்கரங்கள் கிடைக்கும்; ஆனால் சற்று சிறியதாக 16 இன்ச்சில்.

என்ஜின் ஆப்ஷன்கள்: ரெனால்ட் டஸ்டர் அதென்டிக் வேரியண்ட்டில் 1 லிட்டர் டிசிஇ 100 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினை பெறலாம். இதனுடன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கிடைக்கும். அதுவே, குஷாக் கிளாசிக்+ காரில் 1 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது.

தொழிற்நுட்ப அம்சங்கள்: சௌகரிய வசதிகளை பொறுத்தவரையில், ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் கிளாசிக்+ கூடுதல் தொழிற்நுட்பங்களை பெறுகிறது. அதேநேரம், டஸ்டர் அதெண்டிக் கார் 60:40 என்கிற விகிதத்தில் பிரிக்கக்கூடிய பின் இருக்கைகள் உள்பட சில தனித்துவமான அம்சங்களை பெறுகிறது. இந்த இரு கார்களில் வழங்கப்படும் தொழிற்நுட்ப அம்சங்களின் பட்டியலை கீழே காணலாம்.

Interior & Convenience Skoda Kushaq Facelift (Classic+) Renault Duster (Authentic)
Infotainment & Audio 7-inch Touch Screen, 6 Speakers 7-inch TFT Cluster, Connectivity
Comfort & HVAC Climatronic Auto AC, Rear AC Vents Rear AC Vents, Air Purifier
Seating & Storage 60:40 Foldable Rear Seats, Driver Seat Height Adjust Glovebox Illumination, Centre Console with Cup Holders
Steering & Transmission Tilt & Telescopic Steering, Paddle Shifters MID Digital Screen
Lighting & Visibility Single-pane Electric Sunroof, Sequential Turn Indicators One Touch LED Room Lights, Boot Lamp, Luggage Lamps
Utility & Cabin 12V Charging Socket Coat Hook

பாதுகாப்பு அம்சங்கள்: டஸ்டர், குஷாக் என இரு எஸ்யூவி கார்களும் அவற்றின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டில் இருந்தே அதிகளவில் பாதுகாப்பு அம்சங்களை பெறுகின்றன. இருப்பினும், எதிர்பார்த்ததை போல் ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் கார் பாதுகாப்பு அம்சங்களை அதிகம் கொண்டதாக விளங்குகிறது. அதுதொடர்பான அட்டவணையை கீழே காணலாம்.

Feature Category Skoda Kushaq Facelift (Classic+) Renault Duster (Authentic)
Safety Rating 5 Star Safety Rating 25 Active & Passive Features
Airbags 6 Airbags 6 Airbags
Braking & Stability ABS with EBD, ESC, Traction Control, Brake Disc Wiping ABS with EBD, Traction Control, Corner Stability Control
Driving Assistance Cruise Control (AT), Hill Hold Assist Hill Start Assist, Rollover Sensor, Rear Parking Assist
Lighting Auto Headlamps Auto Headlamps, Follow Me Home Headlamps
Exterior 16-inch Alloy Wheels, Rain Sensing Wipers, Rear Wiper with Defogger Front Disc Brakes, Power Windows
Security 3-Point Seatbelts, ISOFIX, Burglar Alarm 3-point seatbelts, ISOFIX, Impact Sensing Unlock, Speed Sensing Lock
Convenience Auto IRVM, Electric ORVM, All Power Windows Speed Alert Warning, TPMS, Central Locking
Model Variant Ex-Showroom Price
Renault Duster Authentic ₹ 10.29 Lakh (with R-Pass)
₹ 10.49 Lakh (Regular)
Skoda Kushaq Facelift Classic+ ₹ 10.69 Lakh

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரண்டில் ஒரு காரை தேர்வு செய்வது கடினமான காரியம் தான். கார் வாங்குபவர்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற மதிப்பு, தொழிற்நுட்ப & பாதுகாப்பு அம்சங்களை எதிர்பார்த்தால் ஸ்கோடா குஷாக் கிளாசிக்+ ஏற்றதாக இருக்கும். அதுவே, முரட்டுத்தனமான தோற்றத்தில், அவ்வப்போது ஆஃப்-ரோடு (Off-road) பயணங்களை மேற்கொள்ள விரும்பினால் ரெனால்ட் டஸ்டர் அதென்டிக் சரியானதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 25, 2026, 19:45 [IST]
English summary
New renault duster authentic vs skoda kushaq facelift classic plus car comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+