சிங்கிள் சார்ஜில் 500 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் கார்! விலை வெறும் 6 லட்சம்தானா! டாடாவை கதற விட போகும் ஹூண்டாய்!
இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் தற்போதைய நிலையில் 2 எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனை செய்து வருகிறது. அவை ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric) மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) ஆகியவை ஆகும்.
இதில், ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 18.02 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 24.70 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது. மறுபக்கம் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை 46.30 லட்ச ரூபாயாக உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் ஒரே ஒரு வெர்ஷனை மட்டுமே விற்பனை செய்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இவை அனைத்துமே ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். அதாவது ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வரும் 2 எலெக்ட்ரிக் கார்களுமே சற்று விலை உயர்ந்தவையாக உள்ளன. இதனால் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
எனவே இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்ததாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த எலெக்ட்ரிக் காரின் நீளம் 4 மீட்டருக்கு சற்று குறைவாக இருக்கும்.

இந்த தகவலை ஹூண்டாய் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. இருப்பினும் இந்தியாவில் கோவா மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் தாய் நாடான தென் கொரியா ஆகிய இடங்களில் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்று தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.
அனேகமாக இதுதான் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) அல்லது ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) ஆகிய ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கலாம்.
அல்லது ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்து வரும் ஹூண்டாய் இன்ஸ்டர் இவி (Hyundai Inster EV) எலெக்ட்ரிக் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் புதிய எலெக்ட்ரிக் காராக கூட இருக்கலாம். எது எப்படியோ இது இந்திய சந்தையில் டாடா பன்ச் இவி (Tata Punch EV) எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டி மாடலாக அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டி என்பதால், கிட்டத்தட்ட அதே விலையில்தான் ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். அதாவது ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 9 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும்.
அத்துடன் பாஸ் (BAAS - Battery As A Service) திட்டமும் கொண்டு வரப்படலாம். இந்த முறை கொண்டு வரப்பட்டால், ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும். ஆனால் இந்த முறையை தேர்வு செய்தால், ஒரு கிலோ மீட்டருக்கு இவ்வளவு என தனியாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
உதாரணத்திற்கு ஒரு கிலோ மீட்டருக்கு 2 ரூபாய் அல்லது 3 ரூபாய் என கட்டணம் செலுத்த வேண்டும். ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் காரில், 42 kWh மற்றும் 49 kWh என மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதில், 49 kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) சுமார் 500 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், சன்ரூஃப், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளையும் இது கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விலை குறைவான இந்த புதிய எலெக்ட்ரிக் காரின் வருகைக்கு பின்னர், இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காருக்கு, விற்பனையில் நெருக்கடிகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








