மோதிய வேகத்தில் பீஸ் பீஸ் ஆன மஸ்டாங் கார்... காயமின்றி வெளியேறிய ஓட்டுனர்!

Written By:

சூப்பர் கார் விபத்துக்கள் சர்வசாதாரணமாக மாறிவிட்டன. ஆனால், அதில் சில ஆச்சரிய சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன. அவ்வாறு ஒரு சம்பவம் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்தது.

வாடகைக்கு எடுக்கப்பட்ட ஃபோர்டு மஸ்டாங் கார் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கியது. அந்த விபத்தில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களை தொாடர்ந்து படிக்கலாம்.

வாஷிங்டனில் உள்ள பல்லார்டு என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து அதிக தகவல்கள் இல்லை.

ஆனால், அது வாடகைக்கு எடுக்கப்பட்ட ஃபோர்டு மஸ்டாங் கார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அது திறந்து மூடும் கூரை அமைப்புடைய கன்வெர்ட்டிபிள் மாடல்.

வாடகைக்கு எடுத்தவர் அந்த காரை அதிவேகத்தில் ஓட்டி வந்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியதாக தெரிகிறது.

மோதிய வேகத்தில் அந்த கார் இரண்டாக பிளந்தது. முன்பகுதி தனியாகவும், பின்பகுதி தனியாகவும் தூக்கி வீசப்பட்டது. இந்த பயங்கர விபத்தில் அந்த காரை ஓட்டி வந்தவர் பெரிய காயம் எதுவுமின்றி வெளியே வந்தார்.

இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்ததாக தெரிவித்துள்ளனர். ஏனெனில், எஞ்சின் தனியாக, முன்பகுதி தனியாக, பின்பகுதி தனியாக என அந்த சாலையோர நடைபாதையில் காரின் பாகங்கள் சிதறிக் கிடந்தன.

இந்தவிபத்தில் ஓட்டியவர் உயிர் பிழைத்தார் என்பது நம்ப முடியாததாகவே இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.  வீடியோவை பார்த்தால் அந்த கார் எவ்வளவு வேகத்தில் மோதியிருக்கக்கூடும் என்பதை உங்களாலேயே யூகித்துக் கொள்ள முடியும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Wednesday, October 5, 2016, 10:13 [IST]
English summary
Read in Tamil: Rental Ford Mustang Splits In Two After Crash — Driver Walks Away Unharmed.
Please Wait while comments are loading...

Latest Photos