30 கிமீ மைலேஜ் தரும் புது காரை அடிமாட்டு விலையில் இறக்கும் டாடா! இப்பவே மாருதி ஈரக்குலை நடுங்கியிருக்கும்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான டாடா கார் (Most Affordable Tata Car) என்ற பெருமையை டியாகோ (Tata Tiago) தன்வசம் வைத்துள்ளது. இதன் காரணமாக இந்திய சந்தையில் டாடா டியாகோ காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

இத்தனைக்கும் டாடா டியாகோ காரானது, ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவில் சமீப காலமாக மிகவும் விலை குறைவான ஹேட்ச்பேக் ரக கார்களின் (Most Affordable Hatchback Cars) விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.

Tata Tiago Front Seat

ஆனால் விதிவிலக்காக டாடா டியாகோ காரின் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு டாடா டியாகோ கார் விலை குறைவானது என்பது ஒரு காரணமாக இருந்தாலும் கூட, மேலும் பல காரணங்களும் இருக்கின்றன. டாடா டியாகோ கார் சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடியது. அத்துடன் ஏராளமான அதிநவீன வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன.

மேலும் டாடா டியாகோ கார் ஐசி இன்ஜின் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்துதான், டாடா டியாகோ காரை மிகவும் வெற்றிகரமான தயாரிப்பாக மாற்றியுள்ளன. ஆனால் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், டியாகோ காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர வேண்டும் என விரும்புகிறது.

Tata Tiago

இதன் ஒரு பகுதியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இங்கே சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம்தான், டாடா டியாகோ காரின் 2வது ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அதற்குள்ளாகவே டியாகோ காரின் 3வது ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் தயாராகி விட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில், அதன் மற்றொரு விலை குறைவான கார்களில் ஒன்றான பன்ச் (Tata Punch) காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

அதே பாணியில் டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் என இரண்டு வெர்ஷன்களின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல்களும் விற்பனைக்கு வரவுள்ளன. அனேகமாக நடப்பு 2026ம் ஆண்டின் மத்தியிலேயே டாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து ரஸ்லேன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பொறுத்தவரையில், ஏராளமான டிசைன் (Design) மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இதன் டிசைனை பொறுத்தவரை, புதிய ப்ரொஜெக்டர் எல்இடி ஹெட்லைட்கள், புதிய எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள், புதிய எல்இடி டெயில்லைட்கள் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் புதிய பம்பர்கள், புதிய அலாய் வீல்கள், சுறா துடுப்பு ஆன்டெனா போன்ற அம்சங்களையும் நாம் எதிர்பார்க்கலாம். மேலும் புதிய கலர் ஆப்ஷன்களும் (Colour Options) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வசதிகளை பொறுத்தவரையில், 10.2 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற அம்சங்களை எல்லாம் நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

அத்துடன் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 360 டிகிரி கேமரா, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள், க்ரூஸ் கண்ட்ரோல், முழு ஆட்டோமேட்டிக் டெம்ப்ரேச்சர் கண்ட்ரோல் போன்ற வசதிகளும் வழங்கப்படும் என நாம் உறுதியாக நம்பலாம்.

செயல்திறனை பொறுத்தவரையில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படும். இந்த 2 இன்ஜின்கள் உடனுமே 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) கொடுக்கப்படும். இதில், சிஎன்ஜி/ஏஎம்டி வேரியண்ட்களின் (Variants) மைலேஜ் ஒரு கிலோவிற்கு 30 கிலோ மீட்டருக்கு நெருக்கமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை வெறும் 4.57 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. ஆனால் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டாலும் கூட, இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை வெறும் 4.70 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் டாடா டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பொறுத்தவரையில், தற்போது இருப்பதை காட்டிலும் பெரிய பேட்டரி போன்ற அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம். டாடா டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப விலை தற்போதைய நிலையில் 7.99 லட்ச ரூபாயாக உள்ளது.

இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலையும் அனேகமாக வெறும் 8.25 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆரம்ப விலையை, தற்போது இருப்பதை காட்டிலும் குறைத்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

பொதுவாக ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் என்றால், பல்வேறு அப்டேடகள் செய்யப்படும் காரணத்தால், விலை உயர்த்தப்படும். ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த காலங்களில் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் விலையை குறைத்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நிகழ்வுகள் நடந்தது உண்டு என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா டியாகோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso), மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) மற்றும் ரெனால்ட் க்விட் (Renault Kwid) போன்ற கார்களுக்கு எல்லாம், விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 31, 2026, 18:29 [IST]
English summary
Tata tiago ice facelift india launch soon expected price features engine gear box options and more
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+